குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, March 08, 2018

பிரணவ வித்யா பரிமளம் {ஓங்கார மந்திர இரகசியம்} - 03



பிரபஞ்சத்தின் முதல் சிருஷ்டியில் தோன்றியது நாதம் என்பதற்கு என்ன பிரமாணம் என்ற கேள்விக்கான பதில் நடராஜ வடிவம். திருச்சிற்றம்பலத்தில் பஞ்சகிருத்திய தாண்டவம் செய்யும் ஸ்ரீ நடராஜர் தனது வலது மேற்கரத்தில் தரித்திருக்கும் உடுக்கையே இதை குறிக்கிறது. "டமரகமேந்திய ஸ்ரீ அஸ்தத்திலே சிருஷ்டி என்ற பொருள்பட தோற்றந்துடியதனில் " என்ற வார்த்தையே இதற்கு பிரமாணம். 

இந்த நாதமே சொல்லும்,  பொருளும் எனும் இருகூற்றுப்பிரபஞ்சத்தினை தோற்றுவித்தது. பிரபஞ்சம் சப்த மயமாகவும், அர்த்த மயமாகவும் இருக்க இந்த நாதமே காரணமாக இருக்கிறது. 

சப்தமய பிரபஞ்சம், அர்த்த மய பிரபஞ்சம் எவை என்பது பற்றி விளக்காமாக பிரமாணங்களுடன் பார்ப்போம். 

நமது கண்களுக்கு புலப்படும் இப்பிரபஞ்சமானது பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்னும் பஞ்ச பூதங்களின் காரியமாயும், சுட்ட்டறியப்படும் பல அங்கங்கள் உள்ளதாகவும், தோன்றி அழியும் தன்மை உடையதாகவும் இருப்பதால் இது காரிய (செயல்) ரூபமாகும். 

இதைப்போல் வேதங்கள் பல சாகைகளும், அத்தியாயங்களும், மந்திரங்களும், பதங்களும், அட்சரங்களும் கொண்டு விரிந்து அவற்றின் மூலம் சப்தமாக செயலை ஆற்றிக்கொண்டு இருப்பதால் அதுவும் காரிய (செயல்) ரூபமாகும். 

ஆக பஞ்சபூதரூபமாகவும், சப்தமாகவும் இந்த இயற்கை விரிவடைந்து கொண்டுள்ளது. பஞ்ச பூத ரூபமாக உள்ளது அர்த்தமய பிரபஞ்சம் என்றும், சப்த ரூபமாக உள்ளது சபதமய பிரபஞ்சம் என்றும் குறிக்கப்படுகிறது. 

பிரபஞ்சம் என்பதன் பொருள் பிர என்றால் உபசர்க்கம் அல்லது துன்பன் என்று பொருள், பஞ்சம் என்றால் விரிவு என்று பொருள். ஆக பிரபஞ்சம் என்றால் சிவத்தில் இருந்து தோன்றிய காரியம் துன்பமயமாக விரிவடையும் செயல் முறை என்று பொருள். விரிவடைய விரிவடைய அசுத்தம் கூடும், அசுத்தம் கூட துன்பம் கூடும். 

வேதம் என்பது பரவித்தை என்று அனுபூதி ஞானத்திற்கு நேரான வழி என்றும் அவ்வேதத்தால் வரும் ஞானம் அபரவித்தை என்றும் கூறப்பட்டது. இதுபற்றி அதர்வண வேத முனகோபனிஷத்  

தத்ராபரா ருக்வேதோ யஜுர்வேதஸ் ஸாமவேதோ
அதர்வண வேதஸ் சிக்ஷாகல்போ வ்யாகரணம்
நிருத்தம் ஸ்னதோ ஜ்யோதிஷமிதி
அதபரா ய்யாதக்ஷா மதிகம்யதே     

என்று கூறுகிறது. இதன் பொருள் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களின் சிக்ஷை, கல்பம், வியாகரணம், நிருக்தம், சந்தம், சோதிடம் எனும் அங்கங்கள் அபரவித்தைகளாகும். எதனாலே அழிவற்ற சிவம் (அக்ஷர சிவம்) அறியப்படுகிறதோ அதுவே பரவித்தை எனப்பட்டது. இதற்கு பிரமாணம் 

அதர்வண வேத திரிபுராதாபிந்யுபனிஷத்   "ஸதாசிவோக்ஷரம் விமலம்" சதாசிவன் அக்ஷரம் - அழிவற்றவன், மலமற்றவன், 

அதர்வண வேத பஸ்மஜாபாவோபனிஷத்  "சிவமக்ஷரமவ்யயம்" சிவம் அழிவற்றது, முக்காலங்களாலும் அளவிடப்படமுடியாதது" 

கிருஷ்ணயஜுர் வேத பிரஹ்மோபனிஷத் "தத்ர சதுஷ் பாதம் பரஹ்மவிபாதி, ஜாகரிதே ப்ரம்ஹ ஸ்வப் நே விஷ்ணு, சுஷுப்தௌ ருரஸ் துரீய மக்ஷரம்" அங்கு நான் கு பாதங்களுள்ள ப்ரம்மம் விளங்குகிறது. ஜாக்கிரத்தில் பிரம்மா, சொப்பனத்தில் விஷ்ணு, சுழுத்தியில் உருத்திரன், துரீயம் அக்ஷரம் என்பது இதன் பொருள். 

இதனூடாக துரீயம் அக்ஷரபிரப்பம் என்று நிருபிக்கப்பட்டிருப்பதால் பிரம்ம, விஷ்ணு, ருத்திரன் ஆகிய மூவருக்கும் மேலான நான் காவது வஸ்துவே பரம்பொருள் என்று விளக்கப்படுகிறது. முக்காலத்திலும் எது அழிவில்லாமல் நிலைபேறாக இருக்கின்றதோ அதுவே அக்ஷரம் (சிவம்) என்று இதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.  அதுவே சிருஷ்டிக்கு முன்னும், சம்ஹாரத்திற்கு பின்னரும் இருப்பதால் எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்கிறது. 

கிருஷ்ண யஜூர் சுவேதாசுவரோபனிஷத் "யதாதமஸ்தந்த திவா நராத்ரி நஸந்தசாஸச்சிவ ஏவகேவல, ததாக்ஷரம் தத்ஸவிதுர் வரேண்யம் ப்ரக் ஞாசதஸ்மாத் ப்ரஸ்ருதாபுரணீ" இதன் பொருள் "ஏன்று இருள் உள்ளதோ அன்று பகலுமில்லை, இரவுமில்லை, சத்துமில்லை, அசத்துமில்லை,  தனிமையாக (கேவலம்) சிவன் ஒன்றே இருந்தது. அதுவே அக்ஷரப்பிரம்மம். அதுவே ஸவிதாவுக்கு மேலானது.  ஆதி சங்கல்பமும் அதனிடதிலிருந்தே தோன்றியது. 

இந்த மந்திரத்தினாலே ஸர்வ ஜகத்காரண ரூப பராசக்தி சகித பரமேச்சுவரனே சத்து, அசத்து, பகல், இரவு என்ற பாகுபாடில்லாமல் ஆதிகாலத்தும் இருந்ததென்றும், சூரிய மண்டலத்தின் அந்தர்யாமியாய், சர்வ பிராஹ்மண ப்ரமோபாஸ்ய மூத்தியாய், உயர் காயத்ரியின் தேவதையாக உள்ளான் என்றும் அவனிடத்திலிருந்தே "ஆதி சிருஷ்டியில் இவ்வுலகத்தை நான் சிருஷ்டிப்பேன் என்ற ஆதி சங்கல்பம் தோன்றியதென்றும், இப்படி படைத்தல்  பிரம்ம லக்ஷணமாதலால் பரம சிவனே பிரம்மம் எண்றும் தீர்மானம் செய்யப்பட்டது. 

திரிமூர்த்திகளும் சிவபரஞ்சுடரால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள் என்பதும், அவர்களுக்கு தோற்றம் அழிவு உண்டென்பதையும் சாமவேத மஹோபனிஷத் வாக்கியம் தெரிவிக்கிறது. 

பிரஹ்மா விஷ்ணுவும், உருத்திரனும் எல்லாப்பூதங்களும் சிவத்தாற் படைக்கப்படுகின்றனர். தீயல் ஜலம் லயமடைதல் போல் அப்பூதங்களோடு அவர்களும் லயமடைகிறர்கள். 

அதர்வண வேத அதவசிகோபனிஷத் "ஸர்வமிதம் ப்ரஹ்ம விஷ்ணு ருத்ரேந்த்ராஸ்தே ஸம்ப்ரஸுயந்தே ஸர்வாணி சேந்த்ரியாணி ஸஹபூதைர் நகாரணம்" என் கிறது. இதன் பொருள் பிரமன், விஷ்ணு, ருத்திரன், இந்திரன் ஆகிய இவர்கள் எல்லாம் படைக்கப்படுகிறார்கள். இந்திரியங்கள் எல்லாம் பூதங்களோடு பிறப்பிக்கப்படுகிறது. ஆகவே அவர்களும், அவைகளும் காரணங்கள் ஆக மாட்டாது. 

க்ருஷ்ண யஜூர்வேத பஞ்ச ப்ரம்மோபனிஷத் " அவஸ்தாத்ரிதயாதீதம் துரீயம் ஸத்யசித்ஸுகம் ப்ரம்ஹ விஷ்ண்வாதிபிஸ் ஸேவ்யக் ஸர்வேஷாம் ஜனகம்பரம்" இதன் பொருள் ஜாக்ராதி மூன்று அவஸ்தைகளுக்கு அதிபதியும், துரீயரும், சச்சிதானந்தாமாயுள்ளவரும், யாவருக்கும் பிறப்பிடமானவரும், பிரம்ம, விஷ்ணு முதலியோரால் சேவிக்கப்படுபவருமான துரீய சிவமே எல்லாராலும் துதிக்கப்படுபவர் என்பது பிரமாணமாயிற்று. 

பகவத்கீதையில் அர்ஜுனன் "கிம் தத் பிரம்ஹம?" பிரம்மம் யாது என்று வினாவ கிருஷ்ணம் "அக்ஷரம் ப்ரஹ்மப்ரமம்" - அழியாத எதுவோ அது பிரம்மம் என்று விடையளிக்கிறார். 

சிவ ஞான சித்தி செய்யுளில் " பர ஞானத்தாற் பரத்தைத் தரிசித்தார் பரமே பார்த்திருப்பர் பதார்த்தங்கள் பாரர் என்று கூறப்படுவது பரவித்தையின் பெருமையினை எடுத்து விளக்குகிறது. 

இத்தகைய பர ஞானத்தை அடைய விளையாது அபர ஞானமான் சாஸ்திரங்களை, கலைகளை கற்று தமது வாழ் நாளை அபர வித்தையில் கழிப்போரது கதி உண்ணுவதற்கு ஒவ்வாத மணற்சோற்றை சமைத்து வைத்திருப்பது போலாகும் என்று தாயுமானார் கூறுகிறார். 

சின்னஞ்ச் சிறியார்கள் செய்த மணற்சோற்றை யொக்கும், மன்னும் கலை ஞானமார்க்கம் பராபரமே" எனவும் 

வாசக ஞானத்தால் வருமோ சுகம் பாழ்த்த, பூசலென்று போமோ புகலாய் பராபரமே என்று சாஸ்திர ஞானத்திற்கு வாழ் நாளை வீணக்குவோரிற்கு அறிவுறுத்தியுள்ளார். 

சுக்ல யஜுர்வேத முக்திகோப நிஷத் "பஹு சாஸ்த்ர கதாகந்தா ரோமந்தோவ்ருதைவகிம் அந்வேஷ்டவ்யம் ப்ரயத் நேன மாருதே ஜ்யோதிராந்தரம்" "மாரூதீ, மிகுந்த சாஸ்திர கதையை மீண்டும் மீண்டும் படிப்பதால்  யாது பயன்? உள்ளேயுள்ள சோதியை முயற் சியினால் தேடிக்காணவேண்டும்"  என்று கூறப்பட்டுள்ளது. 

இதனையே திருவள்ளுவரும் "கற்றதனாலய பயனென் கொல் வாலறிவான் நற்றாழ் தொழாராரெனின்" என்றும் அருணந்தி சிவாச்சாரியா " வாக்கிய வாசக ஞானம் வயிந்தவத்தின் கலக்கம்" என்றும் அழுத்திக்கூறியுள்ளார்கள். 

அனுபவ அனுபூதி ஞானம் இல்லாமல் சிவ ஞானிகளுடைய வார்த்தைகளை கொள்ளை அடித்துக்கொண்டு அனுபவமுடையவர்கள் போல் உண்மையை வார்த்த ஜாலமாக கூறி மகிழ்பவர்களுடைய தன்மை பற்றி ஸாமவேத மைத்திரேயோப நிஷத் " அனுபூதிம் வி நாமோடோ வ்ருதா ப்ரஹ்மணி மோததே, ப்ரதிபிம்பிதசாகாக்ர பலாஸ்வாத ந மோதவத் என் கிறது. இதன் பொருள் "௳ரத்தின் கிளைகளிலிருக்கும் பழங்களின் பிம்பங்களைத் தண்ணீரிற் கண்டு அவற்றை தின்று மகிழ்வது போல் அனுபூதி ஞானமில்லாத மூடன்ன் பிரம்மத்தின் கண் வாளா மகிழ்கின்றான்" எனக்கூறுகீறது. இதையே ஔவையாரும் " கானமயிலாடக்கண்டிருந்த வாங்கோழி தானுமதுவாக பாவித்து தானுந்தன் பொல்லாச்சிறகை விரித்து ஆடினாற் போலுமே, கல்லாதான் கற்ற கவி" என்றார். 

தொடரும்... 


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...