குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, January 05, 2022

தலைப்பு இல்லை

நேற்றைய சக்தி தொலைக்காட்சி உரையாடல், கிழே comment இல்!

youtube காணொளியை பகிர்ந்தால் மார்க் சுக்கப்பனுக்கு பிடிக்காது! பலருடைய கண்களில் இருந்து மறைத்துவிடுகிறான்.

நன்றி தம்பி Hari Arul

Tuesday, January 04, 2022

தலைப்பு இல்லை

இன்று காலை 0700 மணிமுதல் சக்தி தொலைக்காட்சியில் இலங்கையின் விவசாயத்துறைப் பிரச்சனைகளைப் பற்றிய என்னுடைய உரையாடலை கேட்டவர்கள் யார்?

உங்கள் அபிப்பிராயம் பகிருங்கள்!

Monday, January 03, 2022

தலைப்பு இல்லை

 Hatha Yoga Pradipika Study Group

English & Portuguese

Interested people please contact

Every Monday 0515 AM - 0700 AM Indian Tima Zone/Sri Lanka

Saturday, January 01, 2022

தலைப்பு இல்லை

 மனிதனது முன்னேற்றத்திற்கு, உயர்விற்குத் தடை தனது அனுபவங்களைத் தொகுத்து அறிவாக்கி அவற்றைப் பார்த்துப் பூரிதம் அடைந்து தன்னை அதே நிலையில் தேங்கிய குட்டையாக்கிக் கொள்வது!

சுருங்கச் சொன்னால் நான் சாதித்துவிட்டேன் என்று நினைப்பது முன்னேற்றத்திற்குத் தடையானது! சாதித்தோம், அடைந்தோம் என்பது குறித்த காலத்தில் மாத்திரமே அடையப்பட்ட நிலை; காலம் மாறும் போது அது அற்றுப் போகிறது.

இப்படித்தான் பலரை நாம் பார்க்கிறோம்; குறிப்பாக எனது அனுபவத்தில் இளமானிப்பட்டம் படித்த பல மாணவர்கள் தாம் பெரிதாக வெட்டிப் பிடுங்கியதாகவும், தமக்கு தாம்பாளத்தில் வெற்றிலை பாக்குடன் வேலை தேடிவந்து அரசாங்கம், நிறுவனம் கொடுக்கும் என்று கனவு காணும் வலிமையற்றவர்களைத்தான் பார்க்கிறோம்.

இன்னுமொரு சாரார் எப்படியாவது பென்ஷன், வாழ்க்கை settle ஆகிவிட வேண்டும்; வாழ்க்கை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது.

செயல் புரிவதில் சலிப்பு இருக்கக்கூடாது; புதுப்புது அறிவினைத் தேட வேண்டும்! அவற்றின் மூலம் எம்மை உற்சாகப்படுத்தி புதுப்புது நிலையை அறிவு, செல்வம், ஆற்றல், அதிகாரத்தில் அடையவேண்டும். நாம் செய்தவற்றை check & Balance பார்ப்பது அடுத்த வருடம் அதைவிட பல மடங்கு அதிகமாக செயல் புரிவதற்குரிய அடித்தளத்தினை உருவாக்குவதற்காக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு வருடமும் நாம் எமது அகத்திலும் புறத்திலும் புதிய நிலையை, முன்னைய ஆண்டை விட உயர்ந்த நிலையை அடைய சங்கல்பம் கொள்வோம்!

ஆகவே சென்ற வருடம் சாதித்தது, அடைந்தது என்ன என்பதை கணக்குப் பார்த்து சமப்படுத்தி பூச்சியமாக்கிவிட்டு இந்த வருடம் முன்னைய வருடத்தை விடப் பலமடங்கு எப்படி உழைப்பது, உயர்வை அடைவது என்பதைப் பற்றி இன்றிலிருந்து சிந்திப்போம்.

தலைப்பு இல்லை

 நண்பர் ஒருவர் நடிகரும், இயக்குனரும், எழுத்தாளருமான திரு. பாக்கியராஜ் அவர்களுக்கு எமது "யோகமும் இயற்கையும்" நூலை புத்தாண்டு பரிசாக அளித்துள்ளார். ஆர்வமாக 

பொருளடக்கத்தை உடனே புரட்டிப்பார்த்து "content நல்லா இருக்கே, கட்டாயம் படிக்கிறேன்" என்றாராம்!

புத்தாண்டில் பிரபலங்கள் கையில் யோகமும் இயற்கையும்.

தலைப்பு இல்லை

 2021 ஆம் ஆண்டின் 53 வாரங்களும் தினகரன் சைவ மஞ்சரியில் ஹம்ஸ யோகம் என்ற நூலின் மொழிபெயர்ப்பு வெளிவந்தது.

பிரணாயாமம், வாசி யோகம் பயில்கிறேன் என்று சொல்லுபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரைத் தொடர் இது. 

அனைத்துக்கட்டுரைகளும் Album ஆக வாசகர்களிற்கு புத்தாண்டுப் பரிசாக இங்கே!

Friday, December 31, 2021

தலைப்பு இல்லை

அனைவருக்கும் இனிய 2022 புதுவருட வாழ்த்துக்கள்! 

இந்த ஆண்டு எம்மை மேலும் செதுக்கி புதிய சிந்தனைக்கு இட்டுச் செல்லும் ஒரு ஆண்டாக அனைவருக்கும் அமைய எனது மனமுவந்த பிரார்த்தனைகள்! 

இதைக் காணும் அனைவர் வாழ்விலும் அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச் செய்வாயம்மா, ஆயுளாரோக்கியம் வீரம் அசைந்திடா பக்தி தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா என்று தேவியைப் பிரார்த்திக்கிறேன்!


தலைப்பு இல்லை

அனைவருக்கும் இனிய 2022 புதுவருட வாழ்த்துக்கள்! 

இந்த ஆண்டு எம்மை மேலும் செதுக்கி புதிய சிந்தனைக்கு இட்டுச்செல்லும் ஒரு ஆண்டாக அனைவருக்கும் அமைய எனது மனமுவந்த பிரார்த்தனைகள்! 

இதைக் காணும் அனைவர் வாழ்விலும் அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச் செய்வாயம்மா, ஆயுளாரோக்கியம் வீரம் அசைந்திடா பக்தி தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா என்று தேவியைப் பிரார்த்திக்கிறேன்!


தலைப்பு இல்லை

நான் ஒரு தமிழ் மருத்துவ இலக்கியவாதி!    

தமிழில் மருத்துவ இலக்கியங்கள் என்பவை தமிழ் அறிஞர்களாலும், தமிழ் தெரியாச் சித்த வைத்தியர்களாலும் கைவிடப்பட்ட அனாதைப் பிள்ளை போன்றது! 

இவற்றைப் படிக்க தமிழறிவு மாத்திரம் போதாது மருத்துவ அறிவும் வேண்டும்; மருத்துவ அறிவு என்பதற்குள் கல்லூரியில் கற்ற anatomy, physiology போன்ற உடல் சார்ந்த அறிவு மாத்திரம் போதாது. பிராணன் என்ற உயிர்சக்தி எப்படி செயற்படுகிறது என்ற தத்துவம் விளங்க வேண்டும். இதற்கு மருத்துவன் சிவயோகம் தெரிந்தவனாக இருக்க வேண்டும். ஆக கல்லூரியில் கற்ற சித்தமருத்துவர்கள் இந்த மருத்துவ இலக்கியத்தைத் தொடுவதில்லை. அவர்கள் தத்துவம் புரியாமல் evidence based medicine ஆக சித்த மருத்துவத்தை அங்கீகரிக்கச் செய்ய வேண்டும் என்று பாடுபடுகிறார்கள். 

இப்படி ஊருப்பட்ட சிக்கல் நிறைந்த இலக்கியமே தமிழ் மருத்துவ இலக்கியம். யாழ்ப்பாணம் தமிழ் இலக்கியத்திற்கு பெயர் போனது; குறிப்பாக மருத்துவ இலக்கியத்தில் பரராசசேகரமும், செகராசசேகரமும் கிடைத்திருக்கும் முக்கிய நூல்கள். 

இந்தக் காணொளி செகராசசேகரத்தினைப் பற்றிய அறிமுகம்!


தலைப்பு இல்லை

நான் ஒரு தமிழ் மருத்துவ இலக்கியவாதி!    

தமிழில் மருத்துவ இலக்கியங்கள் என்பவை தமிழ் அறிஞர்களாலும், தமிழ் தெரியாச் சித்த வைத்தியர்களாலும் கைவிடப்பட்ட அனாதைப் பிள்ளை போன்றது! 

இவற்றைப் படிக்க தமிழறிவு மாத்திரம் போதாது மருத்துவ அறிவும் வேண்டும்; மருத்துவ அறிவு என்பதற்குள் கல்லூரியில் கற்ற anatomy, physiology போன்ற உடல் சார்ந்த அறிவு மாத்திரம் போதாது. பிராணன் என்ற உயிர்சக்தி எப்படி செயற்படுகிறது என்ற தத்துவம் விளங்க வேண்டும். இதற்கு மருத்துவன் சிவயோகம் தெரிந்தவனாக இருக்க வேண்டும். ஆக கல்லூரியில் கற்ற சித்தமருத்துவர்கள் இந்த மருத்துவ இலக்கியத்தைத் தொடுவதில்லை. அவர்கள் தத்துவம் புரியாமல் evidence based medicine ஆக சித்த மருத்துவத்தை அங்கீகரிக்கச் செய்ய வேண்டும் என்று பாடுபடுகிறார்கள். 

இப்படி ஊருப்பட்ட சிக்கல் நிறைந்த இலக்கியமே தமிழ் மருத்துவ இலக்கியம். யாழ்ப்பாணம் தமிழ் இலக்கியத்திற்கு பெயர் போனது; குறிப்பாக மருத்துவ இலக்கியத்தில் பரராசசேகரமும், செகராசசேகரமும் கிடைத்திருக்கும் முக்கிய நூல்கள். 

இந்தக் காணொளி செகராசசேகரத்தினைப் பற்றிய அறிமுகம்!


சிஷ்ய அதிகார மதிப்பீடு

சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...