குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, December 12, 2021

தலைப்பு இல்லை

இன்று எமது திருமண நாள்! 
தாரமும் குருவும் தலைவிதிப் பயன் என்பதை பொதுவாக புலம்பலாகவே நாம் சொன்னாலும் இருவரும் ஒருவனை வாழ்க்கையில் செம்மைப்படுத்துவதில் நிகரற்றவர்கள். ஒருவனின் பலம், பலவீனம் அறிந்தவர்கள்.
என்னைப் போன்ற வானத்தில் சஞ்சரிக்கும் ஆசையுள்ள ஆணிற்கு ஆதாரமாக பூமியில் மையம் கொள்ள, சடுதியாக எடுக்கும் முடிவுகளை ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று ஒருக்காலும் கேட்காமல் எடுக்கும் முடிவுகள் சரியென நம்பும் மனைவி கிடைப்பது வரம் தான்.
அன்பும் அறனும் சரியாக இருந்தால் வாழ்க்கை எனும் சக்கரம் சரியாக ஓடும் என்பது அனுபவ பாடம்; இதை குரு போதித்தால் இல்லறம் அதன் பரீட்சைக்களம்!
அனைவருக்கும் எமது அன்பும் பிரார்த்தனைகளும்!

Friday, December 10, 2021

தலைப்பு இல்லை

Some of the English speaking students requested to explain the meaning of Thirumantra song of pinda linga in English. 

I tried but unable to record full because of disk space!


தலைப்பு இல்லை

Some of the English speaking students requested to explain the meaning of Thirumantra song of pinda linga in English. 

I tried but unable to record full because of disk space!


Thursday, December 09, 2021

தலைப்பு இல்லை

ஓ திருமந்திரம் படிக்க இவ்வளவு ஆர்வமுடையவர்கள் இருக்கிறார்களா? கீழே ஆர்வத்தைத் தெரிவியுங்கள்!

தலைப்பு இல்லை

ஓ திருமந்திரம் படிக்க இவ்வளவு ஆர்வமுடையவர்கள் இருக்கிறார்களா? கீழே ஆர்வத்தைத் தெரிவியுங்கள்!

தலைப்பு இல்லை

திருவாகிய சிவம் என்ற செல்வத்தின் மூலம் காட்டும் திருமூலரின் திருமந்திரத்தின் பிண்டலிங்கம் என்ற பாடல்களின் விளக்கம். - 02

பிண்டம் என்ற உடலின் குறியீடு பற்றிய விளக்கம் - பிண்ட லிங்கம். 

லிங்கம் என்றால் குறியீடு என்று அர்த்தம். மறைந்திருக்கும் சூக்ஷ்மமான ஒன்று வெளிப்படும் போது அது தனக்கே உரிய குறியீட்டினை வெளிப்படுத்தும்; ஒரு ஆண் குழந்தை பிறந்தால் அது ஆண்குழந்தை என்பதை உடனடியாகப் புரிந்துகொள்ளும் குறியீடு அதன் ஆண் குறி. அவன் ஆண் என்பதைக் குறிக்கும் குறியீடு! 

அதுப் போல் சிவமாகிய பரம்பொருள் தனது தன்மைகளை எல்லாம் வடித்தெடுத்து சுருக்கி விலகி ஓடும் ஐம்பூதங்களையும் ஒன்றுபடுத்தி ஸ்தூல உடலாக்கி தன்னை அறிவதற்கான குறியீட்டினை இந்த மனித உடலிற்குள் வைத்திருக்கிறது. இதை அறியும் படிமுறைகளைக் கூறுவதுதான் திருமூலரின் பிண்ட லிங்கப் பாடல்களின் நோக்கம்; 

முதல் பாடலில் சிவம், சிதம்பரம், சதாசிவம், திருக்கூத்து ஆகிய நான்கு இரகசியங்களை உடலினை அறிவதன் மூலம் அறியலாம் என்பதைக் கூறி இரண்டாவது பாடலில் மரணத்தைப் புரிந்துக் கொள்வதன் மூலம் எப்படி ஐம்பூதங்களும் சிவம் இருப்பதால் ஒருங்கிணைந்து இயங்குகிறது என்பதை விளக்குகிறார். 

இந்தப் பாடல் சித்த மருத்துவம், ஆயுர்வேதம் இரண்டிற்கும் ஆதாரமான தத்துவத்தையும் கூறுகிறது. 

உலந்திலர் பின்னும் உளரென நிற்பீர்

நிலந்தரு நீர்தெளி யூனவை செய்யப்

புலந்திரு பூதங்கள் ஐந்தும் ஒன்றாக

வலந்தரு தேவரை வந்திசெய் யீரே. 2

உடல் அழிந்த பின்னும் நீங்கள் இருப்பீர்

நிலமும், நீரும் ஆக்கிய ஊன் மட்டுமே நீங்குகிறது

ஒன்றோடு ஒன்று சேராத பூதங்கள் ஐந்தும் ஒன்றாகச் சேர்வது

வல்லமை தரும் தேவராகிய சிவத்தை வந்தனை செய்யவே 

உடல் ஏன் அழிகிறது? ஏன் தோன்றுகிறது? என்ற விளக்கம் இந்தப் பாடலில் கூறப்படுகிறது. மரணம் என்பது நீராலும், நிலத்தாலும் ஆன ஸ்தூல உடலை விட்டு உயிர் நீங்குவதே! உலந்தல் என்றால் அழிவு என்று பொருள்; ஆகவே உடல் அழிந்தாலும் நீங்கள் இருக்கத் தான் செய்கிறீர்கள். இந்த ஐந்து பூதங்களும் அடிப்படையில் ஒன்றோடு ஒன்று சேர்ந்து இயங்க மாட்டாதவை; ஒன்றிலிருந்து ஒன்று விலகி ஓடும் தன்மை உடையவை. இவை ஐந்தும் ஒன்றாக சேர்த்து இயங்குவதற்கான ஒரேயொரு நோக்கம் உடலிற்குள் எல்லா வல்லமையையும் தரும் தேவராகிய சிவம் உள்ளே இருப்பது, அவரை வணங்கவே!

ஆகவே தனித்த இயல்பின் ஒன்றுடன் ஒன்று சேராத ஐம்பூதங்களும் ஒன்றாக சம நிலையடைந்து உடலை பெறுவது வல்லமை தரும் சிவம் இந்த உடலினுள் இருப்பதாலேயே என்பது பெறப்படுகிறது. அதை உடலில் அறிந்து உணர வேண்டும். 

உண்மையை அறிய விளையும் சாதகன் தனக்கு உடல் எப்படிக் கிடைத்தது என்ற இரகசியத்தை முதலில் அறிய வேண்டும். மேலும் தனக்குள் இருக்கும் ஐம்பூதங்களும் எதனால் ஒத்திசைந்து வேலை செய்கிறது என்பதையும் அறிய வேண்டும். உடலிற்குள் இருக்கும் வல்லமை தரும் தேவராகிய சிவம் இருப்பதாலேயே இவை எல்லாம் ஒன்றிணைந்து வேலை செய்கின்றன. 

சிவம் இருப்பதால் மனமும், பிராணனும் அதிலிருந்து கதிர்க்க, அதனால் ஐந்துபூதங்களும் ஒன்றுடன் ஒன்று பிணைந்து உறுதியான இந்த உடலை உருவாக்குகிறது. இந்த உண்மையைப் புரியாமல் வாசியை எழுப்புகிறேன், பிராணனைக் கட்டுகிறேன் என்று முயற்சிப்பதெல்லாம் அறிவிலித்தனம்! ஆகவே பிண்டத்தில் சிவம் இருப்பதால் நடைபெறும் செயல்கள் அனைத்தையும் அறிந்துக் கொள்ள வேண்டும். 

மனித உடலிற்குள் சிவம் வடித்த, செறிந்த – essence and concentrate form – நிலையில் இருக்கிறது என்பதை சாதகன் புரிந்துக் கொள்ள வேண்டும். 

இந்த உண்மையை மரணத்தின் மூலம் அறிந்துக் கொள்ளலாம் என்பது இந்தப் பாடலின் சாராம்சம். இறந்த பின்னரும் நாம் இருக்கிறோம் என்பதை யோகத்தின் சூக்ஷ்ம சரீர யாத்திரை மூலம் அனுபவமாக அறியலாம். இந்த சூக்ஷ்ம யாத்திரை செய்ய நில, நீர் பூதங்களின் ஆளுகையிலிருந்து வெளிவரும்படி பிராணனையும், மனத்தினையும் இயக்க வேண்டும். இதை முறையான ஆசானிடம் நேரில் பயில்க!

மேலும் கற்க ஆர்வமுள்ளவர்கள் கேள்விகளால் உரையாடலைத் தொடர்க!


தலைப்பு இல்லை

திருவாகிய சிவம் என்ற செல்வத்தின் மூலம் காட்டும் திருமூலரின் திருமந்திரத்தின் பிண்டலிங்கம் என்ற பாடல்களின் விளக்கம். - 02

பிண்டம் என்ற உடலின் குறியீடு பற்றிய விளக்கம் - பிண்ட லிங்கம். 

லிங்கம் என்றால் குறியீடு என்று அர்த்தம். மறைந்திருக்கும் சூக்ஷ்மமான ஒன்று வெளிப்படும் போது அது தனக்கே உரிய குறியீட்டினை வெளிப்படுத்தும்; ஒரு ஆண் குழந்தை பிறந்தால் அது ஆண்குழந்தை என்பதை உடனடியாகப் புரிந்துகொள்ளும் குறியீடு அதன் ஆண் குறி. அவன் ஆண் என்பதைக் குறிக்கும் குறியீடு! 

அதுபோல் சிவமாகிய பரம்பொருள் தனது தன்மைகளை எல்லாம் வடித்தெடுத்து சுருக்கி விலகி ஓடும் ஐம்பூதங்களையும் ஒன்றுபடுத்தி ஸ்தூல உடலாக்கி தன்னை அறிவதற்கான குறியீட்டினை இந்த மனித உடலிற்குள் வைத்திருக்கிறது. இதை அறியும் படிமுறைகளைக் கூறுவதுதான் திருமூலரின் பிண்ட லிங்கப் பாடல்களின் நோக்கம்; 

முதல் பாடலில் சிவம், சிதம்பரம், சதாசிவம், திருக்கூத்து ஆகிய நான்கு இரகசியங்களை உடலினை அறிவதன் மூலம் அறியலாம் என்பதைக் கூறி இரண்டாவது பாடலில் மரணத்தைப் புரிந்துகொள்வதன் மூலம் எப்படி ஐம்பூதங்களும் சிவம் இருப்பதால் ஒருங்கிணைந்து இயங்குகிறது என்பதை விளக்குகிறார். 

இந்தப்பாடல் சித்த மருத்துவம், ஆயுர்வேதம் இரண்டிற்கும் ஆதாரமான தத்துவத்தையும் கூறுகிறது. 

உலந்திலர் பின்னும் உளரென நிற்பீர்

நிலந்தரு நீர்தெளி யூனவை செய்யப்

புலந்திரு பூதங்கள் ஐந்தும் ஒன்றாக

வலந்தரு தேவரை வந்திசெய் யீரே. 2

உடல் அழிந்த பின்னும் நீங்கள் இருப்பீர்

நிலமும், நீரும் ஆக்கிய ஊன் மட்டுமே நீங்குகிறது

ஒன்றோடு ஒன்று சேராத பூதங்கள் ஐந்தும் ஒன்றாகச் சேர்வது

வல்லமை தரும் தேவராகிய சிவத்தை வந்தனை செய்யவே 

உடல் ஏன் அழிகிறது? ஏன் தோன்றுகிறது? என்ற விளக்கம் இந்தப்பாடலில் கூறப்படுகிறது. மரணம் என்பது நீராலும், நிலத்தாலும் ஆன ஸ்தூல உடலை விட்டு உயிர் நீங்குவதே! உலந்தல் என்றால் அழிவு என்று பொருள்; ஆகவே உடல் அழிந்தாலும் நீங்கள் இருக்கத்தான் செய்கிறீர்கள். இந்த ஐந்து பூதங்களும் அடிப்படையில் ஒன்றோடு ஒன்று சேர்ந்து இயங்க மாட்டாதவை; ஒன்றிலிருந்து ஒன்று விலகி ஓடும் தன்மை உடையவை. இவை ஐந்தும் ஒன்றாக சேர்த்து இயங்குவதற்கான ஒரேயொரு நோக்கம் உடலிற்குள் எல்லா வல்லமையையும் தரும் தேவராகிய சிவம் உள்ளே இருப்பது, அவரை வணங்கவே!

ஆகவே தனித்த இயல்பின் ஒன்றுடன் ஒன்று சேராத ஐம்பூதங்களும் ஒன்றாக சம நிலையடைந்து உடலை பெறுவது வல்லமை தரும் சிவம் இந்த உடலினுள் இருப்பதாலேயே என்பது பெறப்படுகிறது. அதை உடலில் அறிந்து உணர வேண்டும். 

உண்மையை அறிய விளையும் சாதகன் தனக்கு உடல் எப்படிக் கிடைத்தது என்ற இரகசியத்தை முதலில் அறிய வேண்டும். மேலும் தனக்குள் இருக்கும் ஐம்பூதங்களும் எதனால் ஒத்திசைந்து வேலை செய்கிறது என்பதையும் அறிய வேண்டும். உடலிற்குள் இருக்கும் வல்லமை தரும் தேவராகிய சிவம் இருப்பதாலேயே இவை எல்லாம் ஒன்றிணைந்து வேலை செய்கின்றன. 

சிவம் இருப்பதால் மனமும், பிராணனும் அதிலிருந்து கதிர்க்க, அதனால் ஐந்துபூதங்களும் ஒன்றுடன் ஒன்று பிணைந்து உறுதியான இந்த உடலை உருவாக்குகிறது. இந்த உண்மையைப் புரியாமல் வாசியை எழுப்புகிறேன், பிராணனைக் கட்டுகிறேன் என்று முயற்சிப்பதெல்லாம் அறிவிலித்தனம்! ஆகவே பிண்டத்தில் சிவம் இருப்பதால் நடைபெறும் செயல்கள் அனைத்தையும் அறிந்துகொள்ள வேண்டும். 

மனித உடலிற்குள் சிவம் வடித்த, செறிந்த – essence and concentrate form – நிலையில் இருக்கிறது என்பதை சாதகன் புரிந்துகொள்ள வேண்டும். 

இந்த உண்மையை மரணத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம் என்பது இந்தப்பாடலின் சாராம்சம். இறந்த பின்னரும் நாம் இருக்கிறோம் என்பதை யோகத்தின் சூக்ஷ்ம சரீர யாத்திரை மூலம் அனுபவமாக அறியலாம். இந்த சூக்ஷ்ம யாத்திரை செய்ய நில, நீர் பூதங்களின் ஆளுகையிலிருந்து வெளிவரும்படி பிராணனையும், மனத்தினையும் இயக்க வேண்டும். இதை முறையான ஆசானிடம் நேரில் பயில்க!

மேலும் கற்க ஆர்வமுள்ளவர்கள் கேள்விகளால் உரையாடலைத் தொடர்க!


தலைப்பு இல்லை

திருமந்திரம் திருமூலரின் 3000 வருட தவத்தின் செறிவு; ஆண்டொன்றுக்கு ஒரு பாடல் எழுதினார் என்பது அவருடைய உணர்வு (consciousness) உயர் நிலையை எட்ட அந்த அனுபவத்தைப் பாடலாக எழுதினார் என்று கொள்ள வேண்டும். இந்த அனுபவத்தை மீண்டும் மீண்டும் நாம் படிக்கும் போது திருமூலர் பெற்ற உணர்வினை நாம் பெறமுடியுமாக இருந்தால் அவர் பாடலாக்கியதன் நோக்கம் நிறைவேறும். இதுவே பாராயணத்தின் இலக்கு. 

நேற்றுப் பதிந்த இந்தப் பாடலை விளக்குமாறு சிலர் கேட்டிருந்தனர். திருமூலரின் உயர் உணர்வு நிலைப் பாடலை முழுமையாக விளக்க முடியுமா என்பது தெரியவில்லை! எனினும் பேராசையால் முயன்றுள்ளேன். 

பிண்ட லிங்கம் - பாடல் 01

மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்

மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்

மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்

மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே.

இந்தப்பாடலை எளிய தமிழிற்கு மொழிபெயர்த்தால், 

மனிதரின் உடல் அமைப்பு

சிவத்தின் குறியீடு

மனிதரின் உடல் அமைப்பு

சிதம்பரத்தின் இரகசியம்

மனிதரின் உடல் அமைப்பு

சதாசிவத்தின் தத்துவ விளக்கம்

மனிதரின் உடல் அமைப்பு

நடராஜரின் திருக்கூத்தின் விளக்கம்

வடிவு என்பதன் அடிச்சொல் வடி என்பதாகும்; வடித்தெடுத்தல் என்று பொருள்; சிவமாகிய எல்லையற்ற பரம்பொருள் தன்னை வடித்தெடுத்துக் கொண்டு பிண்டமாகவும், அண்டமாகவும் ஆக்கிக் கொண்டிருக்கிறது என்று பொருளாகிறது; ஆகவே மனித உடல் என்பது சிவத்தின் தன்மைகளின் இரகசியத்தை அறிந்துக் கொள்ள வடித்தெடுத்த சுருக்கிய வடிவம்.

மனித உடல் என்பது சிதம்பர இரகசியத்தினை அறிந்துக் கொள்ளக்கூடிய வடித்தெடுத்த சுருக்கிய வடிவம்.

மனித உடல் என்பது சதாசிவ தத்துவத்தின் இரகசியத்தை அறிந்துக் கொள்ளக்கூடிய வடித்தெடுத்த சுருக்கிய வடிவம்.

மனித உடல் என்பது திருக்கூத்தின் இரகசியத்தை அறிந்துக் கொள்ள வடித்தெடுத்த சுருக்கிய வடிவம். 

ஒரு சாதகன் உண்மையினை புறத்தில் தேடாமல் தனது உடலில் இருந்து சாதனையைச் செய்யவேண்டும் என்ற உண்மை இந்தப் பாடலின் மூலம் பெறப்படுகிறது. 

சிவம், சிதம்பரம், சதாசிவம், திருக்கூத்து மிக விரிவாக விளக்க வேண்டியவை! குருவருள் வாய்க்கும் வேறொரு நேரம் இது பற்றி உரையாடுவோம்.


சிஷ்ய அதிகார மதிப்பீடு

சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...