குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, December 09, 2021

தலைப்பு இல்லை

திருமந்திரம் திருமூலரின் 3000 வருட தவத்தின் செறிவு; ஆண்டொன்றுக்கு ஒரு பாடல் எழுதினார் என்பது அவருடைய உணர்வு (consciousness) உயர் நிலையை எட்ட அந்த அனுபவத்தைப் பாடலாக எழுதினார் என்று கொள்ள வேண்டும். இந்த அனுபவத்தை மீண்டும் மீண்டும் நாம் படிக்கும் போது திருமூலர் பெற்ற உணர்வினை நாம் பெறமுடியுமாக இருந்தால் அவர் பாடலாக்கியதன் நோக்கம் நிறைவேறும். இதுவே பாராயணத்தின் இலக்கு. 

நேற்றுப் பதிந்த இந்தப் பாடலை விளக்குமாறு சிலர் கேட்டிருந்தனர். திருமூலரின் உயர் உணர்வு நிலைப் பாடலை முழுமையாக விளக்க முடியுமா என்பது தெரியவில்லை! எனினும் பேராசையால் முயன்றுள்ளேன். 

பிண்ட லிங்கம் - பாடல் 01

மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்

மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்

மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்

மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே.

இந்தப்பாடலை எளிய தமிழிற்கு மொழிபெயர்த்தால், 

மனிதரின் உடல் அமைப்பு

சிவத்தின் குறியீடு

மனிதரின் உடல் அமைப்பு

சிதம்பரத்தின் இரகசியம்

மனிதரின் உடல் அமைப்பு

சதாசிவத்தின் தத்துவ விளக்கம்

மனிதரின் உடல் அமைப்பு

நடராஜரின் திருக்கூத்தின் விளக்கம்

வடிவு என்பதன் அடிச்சொல் வடி என்பதாகும்; வடித்தெடுத்தல் என்று பொருள்; சிவமாகிய எல்லையற்ற பரம்பொருள் தன்னை வடித்தெடுத்துக் கொண்டு பிண்டமாகவும், அண்டமாகவும் ஆக்கிக் கொண்டிருக்கிறது என்று பொருளாகிறது; ஆகவே மனித உடல் என்பது சிவத்தின் தன்மைகளின் இரகசியத்தை அறிந்துக் கொள்ள வடித்தெடுத்த சுருக்கிய வடிவம்.

மனித உடல் என்பது சிதம்பர இரகசியத்தினை அறிந்துக் கொள்ளக்கூடிய வடித்தெடுத்த சுருக்கிய வடிவம்.

மனித உடல் என்பது சதாசிவ தத்துவத்தின் இரகசியத்தை அறிந்துக் கொள்ளக்கூடிய வடித்தெடுத்த சுருக்கிய வடிவம்.

மனித உடல் என்பது திருக்கூத்தின் இரகசியத்தை அறிந்துக் கொள்ள வடித்தெடுத்த சுருக்கிய வடிவம். 

ஒரு சாதகன் உண்மையினை புறத்தில் தேடாமல் தனது உடலில் இருந்து சாதனையைச் செய்யவேண்டும் என்ற உண்மை இந்தப் பாடலின் மூலம் பெறப்படுகிறது. 

சிவம், சிதம்பரம், சதாசிவம், திருக்கூத்து மிக விரிவாக விளக்க வேண்டியவை! குருவருள் வாய்க்கும் வேறொரு நேரம் இது பற்றி உரையாடுவோம்.


தலைப்பு இல்லை

திருமந்திரம் திருமூலரின் 3000 வருட தவத்தின் செறிவு; ஆண்டொன்றுக்கு ஒரு பாடல் எழுதினார் என்பது அவருடைய உணர்வு (consciousness) உயர் நிலையை எட்ட அந்த அனுபவத்தைப் பாடலாக எழுதினார் என்று கொள்ள வேண்டும். இந்த அனுபவத்தை மீண்டும் மீண்டும் நாம் படிக்கும் போது திருமூலர் பெற்ற உணர்வினை நாம் பெறமுடியுமாக இருந்தால் அவர் பாடலாக்கியதன் நோக்கம் நிறைவேறும். இதுவே பாராயணத்தின் இலக்கு. 

நேற்றுப் பதிந்த இந்தப்பாடலை விளக்குமாறு சிலர் கேட்டிருந்தனர். திருமூலரின் உயர் உணர்வு நிலைப் பாடலை முழுமையாக விளக்க முடியுமா என்பது தெரியவில்லை! எனினும் பேராசையால் முயன்றுள்ளேன். 

பிண்ட லிங்கம் - பாடல் 01

மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்

மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்

மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்

மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே.

இந்தப்பாடலை எளிய தமிழிற்கு மொழிபெயர்த்தால், 

மனிதரின் உடல் அமைப்பு

சிவத்தின் குறியீடு

மனிதரின் உடல் அமைப்பு

சிதம்பரத்தின் இரகசியம்

மனிதரின் உடல் அமைப்பு

சதாசிவத்தின் தத்துவ விளக்கம்

மனிதரின் உடல் அமைப்பு

நடராஜரின் திருக்கூத்தின் விளக்கம்

வடிவு என்பதன் அடிச்சொல் வடி என்பதாகும்; வடித்தெடுத்தல் என்று பொருள்; சிவமாகிய எல்லையற்ற பரம்பொருள் தன்னை வடித்தெடுத்துக்கொண்டு பிண்டமாகவும், அண்டமாகவும் ஆக்கிக்கொண்டிருக்கிறது என்று பொருளாகிறது; ஆகவே மனித உடல் என்பது சிவத்தின் தன்மைகளின் இரகசியத்தை அறிந்துகொள்ள வடித்தெடுத்த சுருக்கிய வடிவம்.

மனித உடல் என்பது சிதம்பர இரகசியத்தினை அறிந்துகொள்ளக்கூடிய வடித்தெடுத்த சுருக்கிய வடிவம்.

மனித உடல் என்பது சதாசிவ தத்துவத்தின் இரகசியத்தை அறிந்துகொள்ளக்கூடிய வடித்தெடுத்த சுருக்கிய வடிவம்.

மனித உடல் என்பது திருக்கூத்தின் இரகசியத்தை அறிந்துகொள்ள வடித்தெடுத்த சுருக்கிய வடிவம். 

ஒரு சாதகன் உண்மையினை புறத்தில் தேடாமல் தனது உடலில் இருந்து சாதனையைச் செய்யவேண்டும் என்ற உண்மை இந்தப் பாடலின் மூலம் பெறப்படுகிறது. 

சிவம், சிதம்பரம், சதாசிவம், திருக்கூத்து மிக விரிவாக விளக்க வேண்டியவை! குருவருள் வாய்க்கும் வேறொரு நேரம் இதுபற்றி உரையாடுவோம்.

 

Wednesday, December 08, 2021

தலைப்பு இல்லை

மனிதரின் உடல் அமைப்பு 

சிவத்தின் குறியீடு

மனிதரின் உடல் அமைப்பு 

சிதம்பரத்தின் இரகசியம்

மனிதரின் உடல் அமைப்பு 

சதாசிவத்தின் தத்துவ விளக்கம்

மனிதரின் உடல் அமைப்பு 

நடராஜரின் திருக்கூத்தின் விளக்கம்

மனித உடலின் அமைப்பினை விளங்கினால் பல இரகசியங்களை விளங்கிக் கொள்ளலாம்!


தலைப்பு இல்லை

மனிதரின் உடல் அமைப்பு 

சிவத்தின் குறியீடு

மனிதரின் உடல் அமைப்பு 

சிதம்பரத்தின் இரகசியம்

மனிதரின் உடல் அமைப்பு 

சதாசிவத்தின் தத்துவ விளக்கம்

மனிதரின் உடல் அமைப்பு 

நடராஜரின் திருக்கூத்தின் விளக்கம்

மனித உடலின் அமைப்பினை விளங்கினால் பல இரகசியங்களை விளங்கிக்கொள்ளலாம்!


தலைப்பு இல்லை

அம்ருதவர்ஷினியின் முதலாவது SCRATCH coding project! 
அம்ருதவர்ஷினியிற்கு கதை சொல்லுவதில் ஆர்வம்! முயற்சித்திருக்கிறார்!

Tuesday, December 07, 2021

தலைப்பு இல்லை

Latin American Ayurveda conference இற்கு ஒரு பேச்சாளனாக அழைக்கப்பட்டிருக்கிறேன்!

தலைப்பு இல்லை

Latin American Ayurveda conference இற்கு ஒரு பேச்சாளனாக அழைக்கப்பட்டிருக்கிறேன்!

Wednesday, December 01, 2021

தலைப்பு இல்லை

இன்று ஒரு தொகை வெளிநாட்டு மாணவர்களுக்கு ஒரு வகுப்பு.... 
இங்கு ஆயுர்வேதம், யோகம், சித்தர் தத்துவங்கள் என்றால் என்னவென்று கேட்டுக் கொண்டிருக்க அவர்களோ சமஸ்க்ருதம், தமிழ் எல்லாம் படித்து தாங்களாகவே மூலநூல் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் கற்கிறார்கள். 
Zoom இருப்பதால் காலை எழுந்தவுடன் fiber connection வழியாக ககன மார்க்கமாக உலகெங்கும் சென்று வரக்கூடியதாக இருக்கிறது!

தலைப்பு இல்லை

இன்று ஒரு தொகை வெளிநாட்டு மாணவர்களுக்கு ஒரு வகுப்பு.... 

இங்கு ஆயுர்வேதம், யோகம், சித்தர் தத்துவங்கள் என்றால் என்னவென்று கேட்டுக்கொண்டிருக்க அவர்களோ சமஸ்க்ருதம், தமிழ் எல்லாம் படித்து தாங்களாகவே மூலநூல் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் கற்கிறார்கள். 

Zoom இருப்பதால் காலை எழுந்தவுடன் fiber connection வழியாக ககன மார்க்கமாக உலகெங்கும் சென்று வரக்கூடியதாக இருக்கிறது!


Sunday, November 28, 2021

துதி பாடும் தமிழரும் வசைபாடும் தமிழரும்!

கடந்த கால வரலாற்றினை கூர்ந்து ஆராய்ந்து உலகம் பயணிக்கும் திசையிற்கு தமது வரலாறு தந்த பாடம் என்னவென்று கற்காமல் தனிமனித துதிபாடும் எந்த இனமும் சிறப்புறுவதில்லை. 
காலம், தகுதியான நபரை அக்காலத்திற்குரிய தலைவராக தேர்ந்தெடுக்கும். சிறப்பான நபரை அல்ல! காலத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் அக்காலத்திற்குரிய சமூகத்தை புதிய திசையில் செலுத்தும் கருவியாக இருப்பார்! அந்த சமூகம் குறித்த நிலையில் இருந்து அடுத்த நிலைக்குச் செல்லும் போது அந்தத் தலைவர் பின்பற்றிய கொள்கையில் சிலது தற்காலத்திற்கு ஒவ்வாத முட்டாள் தனம் போல் இருக்கலாம்; மற்றவை சிறப்பாக இக்காலத்திற்கும் பொருந்தலாம். அதை அப்படியே தரவாக்கி அது எமக்குத் தந்த பாடத்தைத் தவிர வேறு ஒன்றும் வரலாற்றிலிருந்து சிறப்பாக மனிதர்களுக்கு பயன்படப்போவதில்லை. 
வரலாற்றில் இருந்த நபர்களைத் துதிபாடுவதும், வசைபாடுவதும், பொதுமைப்படுத்துவதும் தம்மையோ, தாம் சார்ந்தவர்களையோ மையமாக உருவாக்கும் அரசியலிற்கான நுண்ணிய நகர்வு! 
வள்ளுவர், லா வோட்ஸு போன்றவர்கள் எக்காலத்திற்கும் பொருந்தும் விதி வகுத்த பிரபஞ்சப் பேர் அறம் அறிந்தவர்கள்.
இவற்றில் தள்ள வேண்டியவற்றை தள்ளி, கொள்ள வேண்டியவற்றைக் கொள்வது அறிவுடையவர்கள் செயல்! அதைவிடுத்து தனிமனிதர்களை துதி பாடுவது, வசைபாடுவது இரண்டும் ஒருவித சமநிலையின்மையையே தோற்றுவிக்கும்! 
இன்றைய காலத்திற்குத் தேவையானது அடுத்த பத்தாண்டுகளுக்கு பூகோள அரசியல், பொருளாதாரம் எப்படிச் செல்லப்போகிறது, அதற்கு உகந்த வகையில் எமது எதிர்காலச் சந்ததியினருக்கு திறனை வளர்க்க என்ன செயல் திட்டமிடுவது? பொருளாதாரத்தை வளர்க்க என்ன செய்வது? என்பது பற்றிய தெளிவான விவாதமும் செயலுமே! 
அதைவிடுத்து இருநூறு வருடத்திற்கு முன்னர் வாழ்ந்தவரை கொண்டாடுகிறோம் என்று ஒருவர் தொடங்க, அவர் கொண்டாடுவதற்கு தகுதியானவாரா? என்று இன்னொருவர் வாதத்தை எழுப்ப, அவர் பெரியா ஆளா, இவர் பெரிய ஆளா என்று வாதம் களைகட்ட, ஒருவர் சேறுபூச என்று முகநூலில் இரணகளப்படுத்த மார்க் சுக்கப்பன் ஒவ்வொருவர் மனதில் என்ன இருக்கிறது என்று ஆராய்ந்து இவர்களது விவாதங்களை தரவாக்கி இவர்களை எப்படி தூண்டிவிட்டு எனது காரியத்தைச் செய்யலாம் என்ற செயற்கை நுண்ணறிவை ஆராய்ந்து கொண்டிருக்கிறான்.  

சிஷ்ய அதிகார மதிப்பீடு

சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...