குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, December 27, 2019

தலைப்பு இல்லை

சுவாரசியமான வருட இறுதி வாசிப்பு!

நியுட்டனின் தத்துவ உலகம்: இரசவாதம், எதிர்காலக் கணிப்பு, இழந்த ஞானத்தைப் பற்றிய தேடல் {The Metaphysical World of Isaac Newton: Alchemy, Prophecy, and the Search for Lost Knowledge}

ஆப்பிள் பழம் கீழே விழுந்ததால் புவியீர்ப்பு சக்தி இருப்பதைக் கண்டுபிடித்தவர் என்று எல்லோராலும் அறியப்பட்டவரும், மேற்கத்தேய பௌதீகவியலின் தந்தை எனப்படுபவரும், நுண்கணிதத்தை வகுத்தவருமான ஐசாக் நியுட்டனைப் பற்றிய சுவாரசியமான மறுபக்கம்!

அவரது Principa Mathematica என்ற நூலின் மூலம் கணிதவியலாளராகவும், இயற்பியலாளராகவும் அறியப்பட்ட நியுட்டனின் அதிகமான எழுத்துக்கள் இறையியல் சார்ந்து இருந்திருக்கிறது என்ற சுவாரசியத்தைக் கூறுகிறது. 

நியுட்டனினால் எழுதப்பட்ட அறிவியல் சாராத எழுத்துக்களை உள்ளடக்கிய இரண்டு பெரிய இரும்புப் பெட்டியில் பூட்டப்பட்டு இருந்த ஆவணங்கள் அவரது குடும்பத்தின் வழித்தோன்றல்களால் 1936ல் ஏலத்தில் விடப்படுகிறது. பின்னர் 1998 ம் ஆண்டு அவை கேம்பிரிட்ஜ் நியுட்டன் திட்டம் என ஆவணப்படுத்தி பின்னர் Oxford University ஆல் ஆவணப்படுத்தப்படுகிறது. 2016ம் ஆண்டளவில் தரவேற்றப்பட்ட எழுத்துக்களின் எண்ணிக்கை 6.4 மில்லியன் சொற்கள். இது அவர் அறிவியலில் எழுதியதை விட மிக அதிகமானது. 

இதை ஆய்வு செய்த ஆய்வாளர் ஒருவரின் கூற்று " நியுட்டன் இறையியலையும் இயற்கைத் தத்துவத்தையும் புரிந்து கொள்ள முயன்றிருக்கிறார், மனித குலத்தின் அறிவிற்கு உலகைப் பற்றியது, கடவுளைப் பற்றியதுமான அறிவினை தொகுக்க முயன்றிருக்கிறார். அறிவியலற்ற விஷயங்கள் என்று இவை வெளிவரவில்லை" என்கிறார். 

ஆர்வமுள்ளவர்களுக்கான பரிந்துரை!


Wednesday, December 25, 2019

தலைப்பு இல்லை

அர்த்த சாஸ்திரத்தின் இரண்டாவது அத்தியாயம், முதலாவது சுலோகம், முதல் இரண்டு வரிகள்;
இது அரசன் அறிய வேண்டிய வித்தைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது. 
இதில் குறிப்பிடப்படும் ஆன்விக்ஷிகி முக்கியமானது. 
இதைத் திருவள்ளுவர் நுண்மாண் நுழைபுலம் என்கிறார். 
இது பாரத ரிஷிகளின் கேள்விக்கான, தர்க்கத்திற்கான அறிவியல், விஞ்ஞானம். ஆரம்பத்தில் சமூகம் ஆத்ம ஞானத்தை அடைவதற்கு மட்டுமே வாழ்க்கை என்று இருந்த போது ஆன்விக்ஷிகி என்ற புத்தியின் ஆற்றல் ஆன்ம ஞானத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. வேதாங்கமான உப நிஷத்துக்கள் ரிஷிகளின் ஆன்விக்ஷிகி ஆற்றல்கள் பிறந்த ஞானம். 
கட உப நிஷத்தில் நசிகேதனின் கேள்வி கேட்கும் ஆற்றல் ஆன்விக்ஷிக்கான உதாரணம்.
ஆன்விக்ஷிகி இரண்டு விடயத்துடன் தொடர்புபடுகிறது. ஒன்று ஆன்மாவை அறிதல், மற்றது காரியங்களுக்கான சரியான காரணத்தை அறிதல்.
கௌடில்யர் அரசன் அல்லது தலமை நிர்வாகி ஆன்மாவை அறிந்த ஞானியாகவும், சரியான தர்க்க ரீதியாக கேள்வி கேட்கக் கூடிய ஆற்றல் உள்ளவனாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக அரசன் அறிய வேண்டிய வித்தைகளில் ஆன்விக்ஷிகி முதன்மை வித்தையாக குறிப்பிடுகிறார்.
ஆன்விக்ஷிகி என்பது தர்க்க ரீதியாக கேள்வி கேட்டு ஒரு விஷயத்திற்கான காரணத்தை சரியாக புரிந்து கொள்ளும் ஆற்றல்.
ஒரு விஷயத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்கும் போது மட்டுமே அதனது தர்க்கத்தை அறிய முடியும். தர்க்கத்தை அறிந்தால் மட்டுமே புத்தி ஏற்றுக் கொள்ளும். புத்தி ஏற்றுக் கொண்டால் மட்டுமே மனம் உள்வாங்கும். மனம் உள்வாங்கினால் மட்டுமே செயல் சிறப்பாக நடைபெறும்.
ஆகவே ஒருவன் தனது ஆன்விக்ஷிகி ஆற்றலை வளர்த்துக் கொள்ளாமல் எந்த சாஸ்திரப் படிப்பையும் முழுமையாக புரிந்து பயன் பெறமுடியாது.
இன்று வேதங்கள், சாஸ்திரங்கள் மூட நம்பிக்கையானதற்கு சமூகம் ஆன்விக்ஷிகி ஆற்றலை இழந்தது தான் காரணம்.
ஒருவன் ஆன்விக்ஷிகியில் சிறந்தால் உண்மையை மயக்கம் இன்றி தெளிந்து கொள்ள முடியும். இந்த அடிப்படையிலேயே முற்காலத்தில் மனதை, புத்தியை பயன்படுத்துபவர்களுக்கு புத்தியை ஒளியூட்டும் காயத்ரி சாதனை கட்டாயம் ஆக்கப்பட்டது.
உயர்ந்த ஞானத்தைப் பெற வேண்டியவர்கள் அறிய வேண்டிய அறிவியல் ஆன்விக்ஷிகி.
இதுவே ஸ்ரீ ஸக்தி சுமனன் ஆகிய எமது அபிப்பிராயம்.

Tuesday, December 24, 2019

தலைப்பு இல்லை

எதிராளி அல்லது வாதம் செய்பவரின் Ego இனை மதித்து, ஆனால் ஏற்றுக் கொள்ளாமல் தன் கருத்தை நுண்ணறிவு கொண்டு வாதம் செய்வது எப்படி என்பது தான் பலருக்குப் பிரச்சனை! 

வாதம் மற்றவரைத் தாக்கி குரோதம் வளர்ப்பதல்ல! 

தெளிவை நோக்கிய தாம் ஏற்றுக் கொண்ட விஷயத்தின் மீது விட்டுக் கொடுக்காத நுண்ணறிவுச் சமர்! வாதத்தின் இறுதியில் இருசாராரமும் தெளிவினை எட்டியிருக்க வேண்டும். எதிராளியின் கருத்தைத் தாக்குதல் என்பது எதிராளிக்கு தெளிவைக் கொடுத்து எமக்கு வெற்றியைத் தரவேண்டும். 

எதிராளியின் Ego இனை மதிக்காவிட்டால் அவர் தனது கருத்தை சரியாக முன் வைக்காமல் உணர்ச்சிவசப்பட்டு கூப்பாடு இட்டு தனது கருத்தை நிறுவ முயல்வார்! 

ஆகவே எதிர்த்துக் கருத்துச் சொல்பவர்கள் கருத்தை எக் காரணம் கொண்டும் அவர்கள் மனது நோகும்படி ஏளனமாக, தாழ்த்தி நகையாடக் கூடாது. 

இத்தகைய வாதங்களே கடந்த நூற்றாண்டின் புலவர் அறிஞர் மரபு என்பது இப்படித் தான் இருந்திருக்கிறது. தம்மை அந்த மரபினைக் காக்க வந்த இரட்சகர்களாக எண்ணிக் கொண்டு மற்றவர்களை தாக்கி எள்ளி நகையாடும் மரபு! இது அக்காலத்து சமூகத்தின் அறிவு மட்டத்திற்கு தேவையான ஒன்றாக இருந்திருக்கலாம். 

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்

மண்மாண் புனைபாவை அற்று

நுண்ணறிவு இல்லாமல் நாம் அடைந்த அதிகாரங்கள், பதவிகள், சமூக அந்தஸ்து போன்ற புற எழில்களை வைத்துகொண்டு அறிவுச் செருக்கு காட்டுவோமானால் அது மண்பாவையின் அழகு போன்றது என்கிறார் வள்ளுவர்.


தலைப்பு இல்லை

வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்

சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே

பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச் 

சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண் ஒளியே


தலைப்பு இல்லை

என்னை நோக்கிப் பாய்ந்த....
.
.
.
.
.
.
.
.
Scooty!    
நாம் எவ்வளவு தான் விதிகளைப் பின்பற்றி வாழ்ந்தாலும் நம்மைச் சூழ உள்ளவர்களது கர்மத்தின் பலனை நாமும் அனுபவிக்க வேண்டும் என்ற அனுபவ உண்மை இன்றைய காலைப் பொழுதில்! 
மழையில் குடை பிடித்து ஸ்கூட்டி ஓட்டி வந்த நபர் உணவருந்த நிறுத்தியிருந்த காரினை காதலால் கட்டித் தழுவிய போது! 
வாகனங்கள் இரண்டுக்கும் ஏற்பட்ட பாதிப்பையும், ஸ்கூட்டி ஓட்டி வந்த நபர் எனது காரினை முத்தமிட முயன்றதனால் அவரது உதடு கிழிந்ததையும் தவிர வேறு பாதிப்புகள் எதுவும் இல்லை!

Sunday, December 22, 2019

அர்த்த சாஸ்திரம் - முதல் ஸ்லோகம்

ஓம் நம; சுக்கிர ப்ருஹஸ்பதிப்யாம் 
சென்ற பதிவில் ஓம் ஏன் என்ற விளக்கம் பார்த்தோம்! 
ஓம் இற்கு அடுத்து சுக்கிரனும் பிரஹஸ்பதியும் வணங்கப்படுகிறார்கள்
சுக்கிரனையும், பிரஹஸ்பதியையும் ஏன் குறிப்பிடப்படுகிறார் என்றால் அர்த்த சாஸ்திரத்துடன் உள்ள தொடர்பை விளங்கிக் கொள்ளப்பட வேண்டும். ரிஷி பரம்பரையில் இந்த பிரபஞ்சத்தின் "அர்த்தம் எனும் பொருள் உடைய வாழ்க்கையை - செல்வத்தை அடைய இரண்டு வழிகளே உண்டு. அவை
நல்ல வழி - பிரபஞ்ச மூல இயக்கத்துடன் ஒத்திசைந்து பெறுவது நல்வழி. 
தீய வழி - பிரபஞ்ச மூல இயக்கத்தை எதிர்த்து பலம் பெறுவது தீய வழி. 
நல்வழி கடைப்பிடிபோர் தேவர் என்றும், தீயவழி கடைப்பிடிப்போர் அசுரர் என்றும் கூறப்பட்டனர். 
ஆனால் இது நன்மை, இது தீமை என்று எப்போதும் தெளிவாக கோடிட்டு பிரித்து விட முடியாது. நன்மையில் நன்மையும், தீமையும் கலந்தே இருக்கும். நல்லவர் தீயவராகவும், தீயவர் நல்லவராகவும் மாறி மாறி மனதின் பிடியில் மாறிக் கொண்டிருப்பதே இயல்பு வாழ்க்கை!
ஆகவே வாழ்க்கையை நடத்த எது சரி எது பிழை எனக் கூற ஞானம் பெற்ற குரு அவசியம். நல்லவை மட்டுமே அர்த்தத்தை அடைய வழிகாட்டுவோம் என்ற வைராக்கியமுடைய நல்லவர்கள் பிரஹஸ்பதி என்ற தேவகுருவால் காட்டப்படுகிறார்.
கெட்டவரும் ஒரு நாள் நல்லவராவார் என்ற உயர்ந்த மனப் பண்புடன் வழிகாட்டும் குரு சுக்கிரனாக காட்டப்படுகிறார். 
சுக்கிரன் பிரம்மாவின் பேரன், பிருகு மகரிஷியின் மகன். சிறு வயதில் பிரகஸ்பதியின் தகப்பனான அங்கிரஸ் மகரிஷியின் கீழ் பிரகஸ்பதியும் சுக்கிரனும் கல்வி கற்கின்றனர். பின்னர் அங்கிரஸ் மகரிஷியின் தன் மகன் மீதான ஒரு தலைப்பட்சமான கவனிப்பால் கௌதம மகரிஷியிடம் கற்று தனது தவத்தின் மூலம் சிவபெருமானிடம் சஞ்சீவனி மந்திர உபதேசம் பெறுகிறார். பின்னர் அந்த உயர்ந்த வித்தையை தனது போட்டியாளனான பிரஹஸ்பதியின் மகனான கசனுக்கு, அவனது தகுதி கண்டு உபதேசிக்கிறார்.
இப்படி நன்மையும் தீமையும் போட்டியிடும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் அறிவு சக்தியே சுக்கிரனும், பிரஹஸ்பதியுமாக சுட்டிக் காட்டப்படுகிறார்கள். இந்த அறிவு சக்தியை பிரயோகித்தே மனித சமூகம் வளர்ந்திருக்கிறது. தீயதை செய்பவனை தனது சஞ்சீவினி வித்தையின் மூலமும் எல்லாம் வல்ல சிவனின் அருளாலும் நல்ல நிலைக்கு கொண்டுபோகின்றவர் சுக்கிரன். ஆக சுக்கிரன் அனைவரிலும் கருணை கொண்டவர். 
நல்ல நிலை எனப்படும் தேவ நிலை அடைந்த பின்னர் அந்த நிலையை தவறவிடாமல் இருக்க உதவுபவர் தேவ குரு பிரஹஸ்பதி!
ஆக சுக்கிரனும் பிரஹஸ்பதியும் மனித வாழ்க்கையில் நிகழும் நன்மையை வழி நடத்தும் அறிவு சக்திகள்! ஆகவே அர்த்த சாஸ்திரத்தை ஓம் என்ற பிரபஞ்ச சக்தியின் அதிர்வுடன் ஒத்திசைந்து, மனித மனதில் நிகழும் நன்மை, தீமைகளை வழி நடத்தும் அறிவு சக்திகளான சுக்கிரன், பிரஹஸ்பதியை நினைத்து அர்த்த சாஸ்திரத்தை தொடங்குகிறார்.
இதுவே இந்த ஸ்லோகத்தின் மீதான ஸ்ரீ ஸக்தி சுமனனாகிய எமது அபிப்பிராயம்.

தலைப்பு இல்லை

எதைக் கற்றாலும் நாலு பேரைச் சேர்த்துக் கொண்டு கூட்டமாக கற்பது என்பது எமது வழமையான போக்கு! இப்படிக் கற்கும் போது ஆர்வமாக சேரும் பலரும் இறுதி வரை நிற்பதில்லை. 
இப்படித் தொடங்கப்பட்டது தான் கௌடில்யர் அல்லது சாணக்கியரின் அர்த்த சாஸ்திரப் படிப்பு! 
முதலாவது சுலோகத்தின் விளக்கவுரை பகுதி பகுதியாக பதிவிடுவோம். 
அர்த்த சாஸ்திரத்தின் முதல் ஸ்லோகம் ஓம், சுக்கிரன், பிரகஸ்பதி ஆகிய மூன்றையும் வணங்கி சுருக்கமாக தொடங்குகிறார்.
ஏன் ஓம் என்ற மந்திரத்துடன் தொடங்குகிறது?
ஓம் என்பது இந்த உலகு தோன்றுவதற்கு ஏதுவான அ + உ + ம் என்ற நாதத்தின் (vibration) சப்தம். இந்த அதிர்வே பிரபஞ்ச இயக்கத்திற்கு மூலமாக இருக்கிறது. இந்த இயக்கத்தின் ஒத்திசைவிலேயே இந்த பிரபஞ்சம் தோற்றம் பெறுகிறது. இந்த பிரபஞ்சத்தின் ஒத்திசைந்த (Harmony) இயக்கத்திற்கு பிரபஞ்சத்தின் அடிப்படையுடன் ஒருவனுக்கு எப்போதுமே ஒத்திசைவு இருக்க வேண்டும். அதனாலேயே எமது ரிஷிகள் எந்த மந்திரமாக இருந்தாலும் ஓம் சேர்த்தார்கள். கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் நிர்வாக, அரசியல் ஒழுங்கைப் போதிக்கிறது. ஆகவே அந்த அர்த்த சாஸ்திர ஒழுங்கு பிரபஞ்சத்தின் ஒழுங்குடன் ஒத்திசைந்து இருக்க வேண்டுமல்லவா! ஆகவே அர்த்த சாஸ்திரம் பிரபஞ்ச ஒழுங்குடன் அமைக்கப்பட்டது என்பதை குறிக்க ஓம் என்ற பிரணவத்துடன் தொடங்குகிறது.

Saturday, December 21, 2019

தலைப்பு இல்லை

எனது பெயர் Sri Sakthi Suman   

இந்த முகநூல் தளத்தில் என்னை தெரிந்துள்ளவர்கள் இருக்கின்றீர்கள் என நம்புகின்றேன் நீங்கள் எனது பேஸ்புக்கில் இருந்தால், நீங்கள் என்னை விரும்புகிறீர்கள் என்று நான் நம்ப விரும்புகிறேன்.

விருப்பு வெறுப்புகள் மற்றும் பரிசுகளை விட அதிகமாக நாம் இன்னும் தொடர்பு கொள்ள முடியுமா என்று பார்க்க விரும்புகிறேன், உண்மையில் ஒருவருக்கொருவர் ஏதாவது எழுதலாம். 

புகைப்படம் இல்லாமல் ஒரு இடுகையை யார் படிக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். நாம் தொழில்நுட்பத்தில் மூழ்கி இருப்பதால் மிக முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டோம்: நல்ல நட்பு.

இந்த செய்தியை யாரும் படிக்கவில்லை என்றால், அது ஒரு குறுகிய சமூக பரிசோதனையாக இருக்கும். ஆனால் நீங்கள் அதை கடைசி வரை படித்தால், நீங்கள் என்னை பற்றி ஒரு வார்த்தையுடன் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 

உதாரணமாக, ஒரு இடம், ஒரு பொருள், ஒரு நபர், நீங்கள் என்னை தொடர்புபடுத்தும் அல்லது நினைவில் வைத்திருக்கும் ஒரு கணம். இந்த உரையை நகலெடுத்து உங்கள் சுவரில் ஒட்டவும், (பகிர வேண்டாம்) நான் உங்களை நினைவூட்டும் ஒரு வார்த்தையை விட்டுச் செல்ல உங்கள் சுவருக்குச் செல்வேன். உரையை நகலெடுக்க உங்களுக்கு நேரம் இல்லையென்றால் தயவு செய்து எந்தக் கருத்தையும் எழுத வேண்டாம். 

அது பரிசோதனையை அழித்துவிடும்.

என் பெயரை மாற்றி உங்களுடையதை எழுதுங்கள்.

பேஸ்புக்கைத் தாண்டி பகிரப்பட்ட கதைக்கு ஏற்ப யார் படிக்கவும் பதிலளிக்கவும் நேரம் எடுத்தார்கள் என்று பார்ப்போம் !!

நன்றி

Copy & Paste


Thursday, December 19, 2019

புத்தரின் மூளை - 01

இந்த நூல் எமது மகிழ்ச்சிக்கும் மூளைக்கும் மனதிற்கும் உள்ள தொடர்பினை அழகாக விவரிக்கிறது. 
நான் கற்றவற்றின் அத்தியாயச் சுருக்கத்தை நேரம் கிடைக்கும் போது பகிர்கிறேன். 
இனி முதலாவது அத்தியாயத்தின் சுருக்கம் வருமாறு:
1. உங்கள் மனம் மாறும் போது உங்கள் மூளையும் மாறுகிறது. இந்த மாற்றம் காலத்துடனும், நீடித்து நிற்கக் கூடியதாகவும் இருக்கும். உங்கள் மூளையில் ஏற்படும் மாற்றம் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும், அதே போல் மனதில் ஏற்படும் மாற்றமும் மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தும். மனமும் மூளையும் ஒன்றுபட்ட ஒருங்கிணைந்த தொகுதி. 
2. ஆகவே உங்கள் மனதின் மூலம் மூளையில் மாறுதல்களை ஏற்படுத்தலாம். உங்களை மாத்திரமல்ல உங்களைச் சந்திக்கும் அனைவரின் மனதிலும் மூளையிலும் மாற்றத்தினை ஏற்படுத்தலாம். 
3. ஆழ்ந்த தியானப் பயிற்சியில் தம்மை நீண்ட காலம் பயிற்றுவித்துக் கொண்டவர்கள் மனதினை வெல்லும் ஒலிம்பிக் வீரர்கள். அவர்கள் தமது மனதை எப்படி பயிற்றுவித்துக் கொண்டார்கள் என்பதை அறிவதன், கற்பதன் மூலம் நாமும் மகிழ்ச்சி, அன்பு, ஞானம் என்பவற்றைப் பெறலாம். 
4. நீங்கள் பிழைத்து வாழ உதவுவதற்காக உங்கள் மூளை பரிணாமமுற்றுள்ளது. ஆயினும் பிழைத்து வாழ்வதற்கான அதனது மூன்று தந்திரோபாயங்கள் உங்கள் துன்பத்திற்கும் வழிவகுக்கின்றன. அவை 1) தன்னைப் பாதுகாத்துக் கொள்ள உலகத்திலிருந்து, மற்றவர்களிலிருந்து பிரித்துக்கொள்வது, 2) மாற்றத்தினை கட்டுப்படுத்தி தனது அகச்சூழலை சம நிலையில் முயற்சி 3) வாய்ப்புகளை அடைவதற்காகவும், ஆபத்துக்களை தவிர்ப்பதற்காகவும் கடந்து கொண்டிருக்கும் இன்பங்களை பற்றிப் பிடித்துக் கொள்ளவும், தவிர்க்க முடியாத வலிகளிலிருந்து தப்பிக்கவும் மனிதன் உட்பட அனைத்து விலங்குகளும் தமது நரம்புத் தொகுதியால் முயல்கிறது. 
5. அறம், விழிப்புணர்வு, ஞானம் ஆகிய இந்த மூன்றும் ஒவ்வொரு நாளினதும் இன்ப வாழ்க்கைக்கும், தனிமனித வளர்ச்சிக்குமான பயிற்சியாகும். இந்த மூன்றும் அடிப்படை நரம்புத் தொகுதியை மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சீரமைக்கின்றன.
6. அறம், விழிப்புணர்வு, ஞானத்துடன் கூடிட தொடர்ச்சியான சிறு முயற்சியும் மூளையின் நரம்புக் கலங்களில் புதுவித பாதையைத் தோற்றுவிக்கின்றன. உங்கள் தினசரி முயற்சி கட்டாயம் உங்கள் மூளையில் மாற்றத்தினை ஏற்படுத்தும். 
7. இப்படி அனேக மனிதரின் மூளையில் ஏற்படும் நல்ல மாற்றம் இந்த உலகத்தினை நலமான பாதையில் செலுத்தும்!

Tuesday, December 17, 2019

தலைப்பு இல்லை

வாசிப்பது ஒரு நல்ல போதை! அதுவும் எம்மை நாமே புரிந்துகொள்ளும் அறிவைத் தரும் நூற்கள் வாசிப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும் போதை! 
இன்றைய வாசிப்பு Neuroplasticity தொடர்பானது, Neuroplasticity என்றால் மூளை தன்னை தொடர்ச்சியாக புதுப்பித்துகொண்டு உருவாக்கிக்கொண்டிருக்கும் தன்மையைக் குறிக்கும் சொல்! 
பலகாலமாக மூளை பழுதடைந்தால் அவ்வளவுதான் அது மீளுருவாக்கம் பெறாது என்ற கருதுகோள்தான் நம்பப்பட்டது. ஆனால் இப்போது மூளை தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
மருத்துவர் Doidge இந்த நூலின் மூலம் மூளைப்பாதிப்புகளில் இருந்து வெற்றிகரமாக மீண்டுவந்த கதைகளை சொல்லுகிறார். 
இந்த நூலில் உள்ள "Rewiring the brain with light" என்ற அத்தியாயம் மிகச் சுவாரசியமானது. பண்டைய எகிப்திய, இந்திய நாகரீகத்தில் சூரிய வணக்கம் இருப்பது மூளையினை மீள் கட்டமைப்பதற்குரிய வழி என்பதை தற்போதைய நவீன ஆய்வுகளின் படி மூளையில் ஊடுருவும் ஒளி அலைகள் Neuro-plasticity தன்மையின் மூலம் மூளையை மீள்கட்டமைக்கும் தன்மை உடையது என்று அறியபட்டுள்ளது. இந்த அறிவை பண்டைய நாகரீகங்களான எகிப்தும், இந்தியாவும் பெற்றிருந்திருக்கிறார்கள் என்கிறார். (பக்கம் 119). 
காயத்ரி உபாசனையில் புத்தியைத் தூண்டும் அந்தப்பேரொளியை எம்மில் இருத்தி தியானிப்போமாக என்ற அர்த்தம் மூளையினை ஒளியின் மூலம் மீள் கட்டமைத்துக்கொள்ள என்பது விளக்கமாகிறது. 
சாத்திரங்கள் பாவகாரியங்கள் செய்தால் பிராயச்சித்தமாக சூரியனைத் தியானித்து ஆயிரம் காயத்ரி ஜெபித்து விடு பாவம் பிராயச்சித்தமாகிவிடும் என்று கூறுவதன் அடிப்படை இதுதான் எனலாம். பாவங்கள் எனப்படுபவை மூளையின் சம நிலையைக் குலைக்கும் உணர்ச்சிவசப்பட்ட செயல்கள், இவற்றைச் செய்த மூளை மீண்டும் சமப்பட்டு சரியான நிலைக்கு வர இந்தப்பயிற்சிகள் உதவுகின்றது எனக்கொள்ளலாம்! ஆகவே தவறான காரியத்தைச் செய்து மூளையைக் கெடுத்தவர்கள் தனது மனதினதும் சூரிய ஒளியின் உதவியினையும் கொண்டு தனது மூளையைச் சமப்படுத்திக்கொள்ளலாம். 
நாம் நினைப்பதைப்போல் எமது தோல், மண்டையோட்டுடன் சூரிய ஒளி நின்று விடுவதில்லை, இவற்றைத்தாண்டி ஒளி மூளையில் புகுந்து மூளையை மீள் கட்டமைக்கும் செயலைச் செய்கிறது என்கிறார் ஆசிரியர்!
எமது மூளையினதும் உடலினதும் ஆற்றல்கள் அபாரமானது!

சிஷ்ய அதிகார மதிப்பீடு

சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...