குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, December 11, 2019

தலைப்பு இல்லை

நான் எழுதுவது வித்தகச் செருக்கில் எனக்கு எல்லாம் தெரியும் என்ற நினைப்பில் இல்லை! அனைவரையும் ரட்சிக்க வந்த மேய்ப்பர் என்ற நினைப்பும் இல்லை! எல்லையற்ற ஆர்வத்துடனும் (curiosity) பேரார்வத்துடனும் (passion) உலகில் பயணிக்கும் பயணி அவ்வளவு தான்! 

எழுதுவது மனதிற்கு மிகுந்த இன்பம் தரும் செயல், சிந்தனையை ஒழுங்குபடுத்தி, எண்ணங்களைச் சொற்களாக்கி, சொற்களை கோர்த்து, எழுத்தில் கொண்டு வரும் போது மனம் ஒருவித சந்தத்தில் ஒருமைப்படும். இப்படி ஒருமைப்படும் மனம் எப்போதும் இன்பமாக இருக்கும். என்னைப் பொறுத்த வரையில் எழுத்து ஒரு இன்பத்திற்கான வழி! 

தனி நபர்களைப் பற்றிய விமர்சனமோ, கருத்தோ, நன்மை தீமைகளைப் பற்றி எப்போதும் விலகியே இருக்கிறேன். ஏனென்றால் இவை தேவையற்ற உணர்ச்சிகளை எம்மில் உருவாக்கி எமது மூளையின் சம நிலையைக் குலைக்கும்!

நான் மனிதர்களை எண்ணங்களாகவே பார்க்கிறேன், எண்ணங்கள் கணத்துக்கு கணம் மாறும், ஆகவே இப்போது இருக்கும் நபர் அடுத்த கணத்தில் இருப்பதில்லை, ஆகவே ஒருவரைப் பற்றி ஏதாவது முத்திரை குத்தினால் அடுத்த கணம் அவர் அந்த முத்திரையிலிருந்து மாறியிருப்பார். ஆகவே மாறிக்கொண்டு இருக்கும் எண்ணங்களை வைத்து ஒருவரை அடையாளப்படுத்தி அவர் மீது விருப்பு, வெறுப்பு ஏற்படுத்தும் செயலை நான் எப்போதும் செய்ய விரும்புவதில்லை! 

அதைப் போல் எவரையும் அறிவாளி என்று மெச்சுவதோ எவரையும் அறிவிலி என்று பரிகாசிப்பது கிடையாது! அறிவு என்பது அனுபவத்தினால் வருவது! அனுபவத்தை சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு அறிவு வாய்ப்பதில்லை! 

அடிப்படையில் அனைத்தும் அன்பு என்ற தங்க இழையினால் பிணைக்கப்பட்டிருக்கிறது. எழுத்தும் அன்பினைப் பகிர்வதற்கான ஒரு வழியும் கூட.... 

ஆகவே என் வழி கணியன் பூங்குன்றனார் வழி;    

எல்லா ஊரும் எம் ஊர் 

எல்லா மக்களும் எம் உறவினரே

நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை

துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை

சாதல் புதுமையில்லை; வாழ்தல்

இன்பமென்று மகிழ்ந்தது இல்லை

வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை

பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல

இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று

தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்

ஆதலினால், பிறந்து வாழ்வோரில்

சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை

பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.

(புறநானூறு: 192)


தலைப்பு இல்லை

நண்பர்களே, 
எனது பதிவில் உங்களை இணைப்பதில் (Tag) விருப்பம் இல்லை என்றால் நேர்பட எனக்கு அறியத் தாருங்கள். 
நான் இணைப்பது பகிர்ந்து கொள்ளும் ஒரு சிறு ஆவலால் தான்! 
இன்று நண்பரொருவர் சிறு விஷயத்தை சுட்டிக் காட்டினார், இன்னொரு நண்பர் ஒருவர் நான் அவரை அடிக்கடி tag செய்வதால் அவர் அதிக மன உளைச்சலுக்கு உள்ளாவதாகவும், புலம்பல் பதிவுகள் இடுவதாகவும்! 
வீணாக உங்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்க நான் விரும்பவில்லை! 

தலைப்பு இல்லை

இயற்கையின் சம நிலையைப் புரிந்துக் கொள்வது சூழலியல் பிரச்சனைகளைப் புரிந்துக் கொள்வதற்கான அடிப்படை! 

பூமி ஒரு தனி உயிரினமாக தன்னைத் தானே சமப்படுத்திக் கொண்டு பல மில்லியன் ஆண்டுகளாக இருக்கிறது. 

இயற்கையைப் புரிந்துக் கொண்டு அபிவிருத்தித் திட்டங்களை வகுக்க வேண்டும். 

இயற்கையுடன் இயைந்து வாழ முடியுமா?

தனி மர நடுகைத் திட்டங்கள் சரியானதா? காடு வளர்ப்பு திட்டங்கள் அதைவிட பயனுள்ளதா? 

இன்னும் சில கருத்துக்கள்...சுவாரசியமான உரையாடல்..... பார்த்து விட்டு கருத்துக் கூறுங்களேன்! 


Tuesday, December 10, 2019

தலைப்பு இல்லை

எனது முற்பிறப்புகளில் ஒரு போர் வீரனாக இருந்திருக்கிறேனாம்! இது உண்மையா பொய்யா, நம்புகிறேனா, இல்லையா என்பதைத் தாண்டி செய்தி நன்றாக இருக்கிறது! 

ஆகவே சில நாட்கள் பண்பற்றவர்களை தலையைக் கொய்த குரு, பரசுராமரின் படம் அலங்கரிக்கட்டும்!


தலைப்பு இல்லை

மழை காலத்தில் வழமையாக எடுத்துச் செல்லும் குடையினை செல்லும் இடத்தில் விட்டு வருவது தான் எமது தனிச் சிறப்பு. ஆனால் இந்த முறை அப்படி நடைபெறவில்லை. ஆகவே நான் பெருமைப்பட்டுக் கொண்டேன். 

மனைவியும் நான் தற்போது முன்னரை விட பெருமளவில் முன்னேறியிருப்பதாக கூறினார். நானும் பெருமிதப்பட்டுக் கொண்டேன். 

அந்தப் பெருமிதம் சில வினாடிகளில் கரைந்து விடுவதாக இடியென அடுத்த அறிக்கை வந்தது, முன்னர் குடைகளை விட்டு விட்டு வந்து நஷ்டமேற்படுத்துவீர்கள், இந்த முறை திறமையாக பழைய குடையை வைத்து விட்டு வேறொருவருடைய புதுக் குடையைத் தூக்கிக் கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று, அடடா என்று பார்த்தால் நமக்குச் சம்பந்தமில்லாத வகையில் ஒரு குடை! 

அனேகமாக வீட்டுக்கு வீடு வாசல்படி தான் என்று நினைக்கிறேன்.


Monday, December 09, 2019

தலைப்பு இல்லை

மூளையைப் பற்றிய புரிதலுக்கு அருமையான நூல்

ஹாவர்ட் உள நோய்ப் பிரிவில் விஞ்ஞானியாகப் பணியாற்றிய Jill Bolte Taylor எழுதியுள்ள நூல் இது. 

இடது பக்க மூளையில் ஏற்பட்ட இரத்தக் குழாய் வெடிப்பின் அனுபவத்தை ஒரு மூளை விஞ்ஞானியாக தான் அவதானித்ததை மூளையியல் அடிப்படையில் தனது சுய அனுபவத்தினைத் தொகுத்து சுவாரசியமாக எழுதியுள்ளார். 

சுவையான செய்தி, மனிதன் Homo Duplex அதாவது இரு மூளையும் இருவகை மனமும் கொண்டவன் என்பதை எளிமையாக விளங்கப்படுத்தியிருப்பது. 

வலது மூளை என்ன செயலைச் செய்கிறது?

இடது மூளை என்ன செயலைச் செய்கிறது?

இரண்டும் ஒன்றுக்கொன்று எப்படி மாற்றீடாகச் செயற்படுகிறது என பல சுவாரசியமான விஷயங்கள் எளிமையாக விளங்கப்படுத்தப்பட்டிருக்கிறது. 

மனம், மூளை பற்றி ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்! 

அல்லது சுருக்கமாக TED show இல் அவருடைய உரையைக் கேட்கலாம்: 

https://youtu.be/UyyjU8fzEYU


Sunday, December 08, 2019

தலைப்பு இல்லை

நண்பர் சாந்தரூபன் அவர்கள் கல்விக் கொள்கை பற்றிய உரையாடலை தனது காலக் கோட்டில் பதிவிட்டிருந்தார். 

கல்வி என்பது தரவுகளை மனதிற்கு ஊட்டி குறித்த விதத்தில் ஒருவனை செதுக்கும் செயற்பாட்டினைச் செய்யும் ஒரு பொறி முறையாகவே தற்போது இருக்கிறது. 

நான் இந்தத் துறை சார்ந்தவன் என்ற நம்பிக்கை ஆக்கப்பட்டு அந்தத் துறை அற்ற எதைப் பற்றியும் சிந்திக்க முடியாத கடிவாளம் கட்டிய குதிரைகளை உருவாக்கும் செயல் முறையையே தற்காலக் கல்வி முறை போதிக்கிறது. 

இப்படியான தரவுகளை மண்டையில் ஏற்றுவதை விடுத்து எளிய ஆர்வத்துடன் (Curiosity) இது என்ன? இது எனக்கு என்ன பயன்? என்று பிரச்சனைகளைச் சிந்தித்து அதற்கு தீர்வுகாணும் பிரச்சனை மையக் கற்றல் முறை (Problem based learning) அனைத்துத் துறைகளிலும் உருவாக்கப்படவேண்டும். 

சமயப் பாடமாக இருந்தாலும் ஏன் தேவாரம் திருவாசகம் பாடமாக்க வேண்டும் என்ற கேள்விக்கு ஏன் பாடமாக்க வேண்டும்? அதனால் எனக்கு என்ன பயன் என்ற யதார்த்தப் பூர்வமாக தனிமனித பயன் என்னவென்ற விளக்கம் தரப்பட வேண்டும். அதைவிடுத்து கடவுளைச் சந்தோஷப்படுத்த, கலாச்சாரத்தைப் பாதுகாக்க, பண்பாட்டைப் பேண போன்ற அர்த்தமற்ற விளக்கங்களில் இருந்து விலகி தனிமனித மேம்பாட்டிற்குரிய பயன் தரும் விடயமாக இருக்க வேண்டும்.

Saturday, December 07, 2019

தலைப்பு இல்லை

வடக்கு தேய்கிறது, தெற்கு வளர்கிறது! 
பூமியின் இயக்கவியல் எப்போதும் சம நிலைக்குட்பட்டது, ஒன்றிணைந்த தொகுதியாக (Integrated system) பார்க்கப்பட வேண்டியது. ஆர்க்டிக் வட்டம் தேய்கிறது என்று புலம்பினால் அந்தாட்டிக்கா பனி வட்டம் வளர்கிறது. 
பூமி உயிர் வாழ்வதற்கு ஏற்ற வகையில் தன்னை எப்போதும் வைத்திருப்பதில் முனைப்பாக தன்னை சமநிலைப் படுத்திக் கொண்டிருக்கும். ஆனால் மனிதன் பூமி தன்னைச் சம நிலைக்குட்படுத்தும் செயலைச் செய்யும் போது நிலைத்திருப்பானா, தாங்கிக் கொள்வானா என்பது தான் இப்போதுள்ள கேள்வி? 
முன்னொரு காலத்தில் வடக்கு வளர்ந்து தெற்கு தேய்ந்த போது அகத்திய மகரிஷி தென் திசை வந்ததாக புராணங்கள் கூறுகிறது. மீண்டும் வடக்கு தேய்ந்து தெற்கு வளரும் காலம் ஏற்பட்டுள்ளது. 
துருவங்கள் பூமியிலிருந்து சூரியக் கதிர்களை தெறிக்க விடுவதில் பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கிறது. இதனை Albedo என்பார்கள். இவற்றின் Albedo அளவு அதிகம், அதாவது அதிகமாக சூரிய வெப்பத்தை பூமிக்குள் வெளிவர விடாமல் தெறிக்க விட்டு வளிமண்டலத்தை சம நிலைப்படுத்துவதில் பங்காற்றிக் கொண்டிருக்கின்றன.

ஆங்காரம் - அகங்காரம் -ஆணவம் -அசூயை

யோக சாதனையில் இந்த நான்கு சொற்களும் வெவ்வேறு நிலைகளை விளக்கப் பயன்படும் சொற்கள். இவற்றை சரியாகப் புரிந்து கொள்வது ஒவ்வொருவருக்கும் தம்மைத் தாமே புரிந்து கொள்ள வழிவகுக்கும். 
மனிதன் தனது உணர்வுக்கு (Consciousness) இடும் முகமூடியினை அல்லது அடையாளத்தை ஆங்காரம் என்று சித்தர்கள் யோக வழக்கில் சொல்வார்கள். ஆங்காரத்தை பொது வழக்கில் அகங்காரம், ஆணவம், அகந்தை என்றெல்லாம் கூறுவார்கள். எனினும் இவை செயற்பாட்டில் வெவ்வேறு அர்த்தங்கள் உடையவை. 
ஆங்காரம் என்பது மனம் தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கு ஏற்படுத்திக் கொள்ளும் மையம். இதை அடிப்படையில் "நான்" என்று சொல்லலாம். 
நான் மருத்துவன் ஆக வேண்டும் என்ற ஆங்காரம் இருந்தால் மருத்துவத்தைக் கற்க வேண்டும்,  நல்ல மருத்துவராக இருக்க வேண்டும் என்ற அளவில் ஆங்காரம் உருவாகி மனம் ஒழுங்குபடும். 
இப்படி நான் எனும் ஆங்காரம் உருவாவதிலிருந்து எமது மனம், புத்தி, சித்தம் என்ற ஒழுங்கு அமைகிறது. 
ஆங்காரத்தினால் அந்த ஆங்காரத்திற்குரிய விஷயங்கள் மனதில் சேர்க்கப்பட்டு "நான் மருத்துவன்" என்ற ஆங்காரம் உருவாகுவதால் நாம் சிறந்த மருத்துவராக இருப்போம். 
இப்படி நான் மருத்துவர் என்ற ஆங்காரத்தில் நன்கு சேவை செய்ய, எல்லோரும் இவர் நல்ல மருத்துவர், வல்ல மருத்துவர் என்று புகழ "ஆகா, நான் நல்ல மருத்துவர்" என்ற அகங்காரம் உருவாகிவிடும். கவனிக்க, ஆங்காரம் இப்போது அகங்காரமாகிவிட்டது. இந்த "நான் நல்ல மருத்துவர்" என்ற அகங்காரமும் மற்றவர்களுக்கு நன்மை தான் செய்யும், நான் பெற்ற நற்பெயரைக் கவனமாக காப்பாற்ற நல்ல மருத்துவராக இருக்க வேண்டும் என்ற உத்வேகம் அவரை நல்ல மருத்துவராக வைத்திருக்க உதவும். 
அதே போல் அதன் தீய பாகம் "நான் "தான்" நல்ல மருத்துவர்" என்று எண்ணத் தொடங்கும் போது அகங்காரம் ஆணவமாகத் தொடங்குகிறது. 
ஆணவத்தின் காதலி அசூயை, ஆணவம் ஏற்பட்டவுடன் நாம் அசூயையைக் காதலிக்கத் தொடங்கிவிடுவோம். 
அசூயை என்றால் மற்றவர்கள் மேல் ஏற்படும் பொறாமை உணர்ச்சி, நான் தான் நல்ல மருத்துவர் என்று எண்ணி மற்றவர்கள் என்னை விட தரங்குறைந்தவர்கள், அறிவிலிகள், மற்ற மருத்துவரையும் என்னைப் போலவே மதிக்கிறார்கள், அவருக்கென்ன தகுதி இருக்கிறது" என்ற மனம் வெம்பும் குணம். 
ஆணவம் என்ற காதலன் அசூயை என்ற காதலியுடன் சேர்ந்து பெற்ற பிள்ளை தான் அகந்தை. இவனைச் சரியாகப் புரிந்து கொள்ள ஆங்கிலத்திலுள்ள arrogance என்ற சொல் பொருத்தமானது. அகந்தை வந்தால் மற்றவர்களை அவமதிக்கத் தொடங்குவோம். 
ஆக எமது மனம் செயற்பட ஆங்காரம், அகங்காரம் கட்டாயம் தேவை, ஆணவம் ஏற்படும் போது சற்றுக் கவனம் தேவை, ஆணவம் அசூயையைக் காதலிக்காமல், காதலித்தாலும் அகந்தை என்ற துஷ்டனைப் பெற்றுக் கொள்ளாமல் இருக்க வேண்டும். 
பொதுவாக மனம் பற்றி உரையாடும் போது அனேகருக்கு மற்றவர்கள் மனதை ஆராய்ந்து குறை காணும் இயல்பே பொதுவானது. ஆனால் யோகத்தில் தன்னை ஆராய்தலே வேண்டப்படுவது. 
யோகத்தில் ஆங்காரத்தையும் தூய்மையாக்கி உண்மையான பார்வையினைப் பெறுவதே இலக்கு. இதற்கு இவற்றின் இயல்புகள் தெரிந்திருத்தல் மிக அவசியமானது! 
இந்த நுண்மையான ஆங்கார அகங்கார ஆணவ அகந்தை அமைப்பினைப் புரிந்துக் கொள்ள இன்றைய காலைப் பொழுதில் இந்த உரையாடலைத் தொடங்கி வைத்த அன்பு நண்பருக்கு நன்றிகள் பல!

Friday, December 06, 2019

தலைப்பு இல்லை

இன்று உலக மண் தினம் - 05 December 2019

மண்ணின் வளம் என்பது நைதரசன், பொஸ்பரஸ், பொட்டாசியம் என்ற NPK என்ற மாயையிலிருந்து வெளி வந்து மண்ணிற்கும் உயிர் உண்டு, மண்ணின் வளம் என்பது அதன் உக்கலின் அளவு (Humus) என்பதை விவசாய விஞ்ஞானிகள் புரிந்துக் கொண்டு மண் வளம் காக்க வேண்டும். 

மண்வளம் என்பது நீர்வளத்தின் அடிப்படையும் கூட

மண்ணரிப்பு, மண்வளம் பற்றிய ஒரு சிறிய உரையாடல் இன்றைய காலைப் பொழுதில்.....


சிஷ்ய அதிகார மதிப்பீடு

சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...