குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, December 08, 2019

தலைப்பு இல்லை

நண்பர் சாந்தரூபன் அவர்கள் கல்விக் கொள்கை பற்றிய உரையாடலை தனது காலக் கோட்டில் பதிவிட்டிருந்தார். 

கல்வி என்பது தரவுகளை மனதிற்கு ஊட்டி குறித்த விதத்தில் ஒருவனை செதுக்கும் செயற்பாட்டினைச் செய்யும் ஒரு பொறி முறையாகவே தற்போது இருக்கிறது. 

நான் இந்தத் துறை சார்ந்தவன் என்ற நம்பிக்கை ஆக்கப்பட்டு அந்தத் துறை அற்ற எதைப் பற்றியும் சிந்திக்க முடியாத கடிவாளம் கட்டிய குதிரைகளை உருவாக்கும் செயல் முறையையே தற்காலக் கல்வி முறை போதிக்கிறது. 

இப்படியான தரவுகளை மண்டையில் ஏற்றுவதை விடுத்து எளிய ஆர்வத்துடன் (Curiosity) இது என்ன? இது எனக்கு என்ன பயன்? என்று பிரச்சனைகளைச் சிந்தித்து அதற்கு தீர்வுகாணும் பிரச்சனை மையக் கற்றல் முறை (Problem based learning) அனைத்துத் துறைகளிலும் உருவாக்கப்படவேண்டும். 

சமயப் பாடமாக இருந்தாலும் ஏன் தேவாரம் திருவாசகம் பாடமாக்க வேண்டும் என்ற கேள்விக்கு ஏன் பாடமாக்க வேண்டும்? அதனால் எனக்கு என்ன பயன் என்ற யதார்த்தப் பூர்வமாக தனிமனித பயன் என்னவென்ற விளக்கம் தரப்பட வேண்டும். அதைவிடுத்து கடவுளைச் சந்தோஷப்படுத்த, கலாச்சாரத்தைப் பாதுகாக்க, பண்பாட்டைப் பேண போன்ற அர்த்தமற்ற விளக்கங்களில் இருந்து விலகி தனிமனித மேம்பாட்டிற்குரிய பயன் தரும் விடயமாக இருக்க வேண்டும்.

Saturday, December 07, 2019

தலைப்பு இல்லை

வடக்கு தேய்கிறது, தெற்கு வளர்கிறது! 
பூமியின் இயக்கவியல் எப்போதும் சம நிலைக்குட்பட்டது, ஒன்றிணைந்த தொகுதியாக (Integrated system) பார்க்கப்பட வேண்டியது. ஆர்க்டிக் வட்டம் தேய்கிறது என்று புலம்பினால் அந்தாட்டிக்கா பனி வட்டம் வளர்கிறது. 
பூமி உயிர் வாழ்வதற்கு ஏற்ற வகையில் தன்னை எப்போதும் வைத்திருப்பதில் முனைப்பாக தன்னை சமநிலைப் படுத்திக் கொண்டிருக்கும். ஆனால் மனிதன் பூமி தன்னைச் சம நிலைக்குட்படுத்தும் செயலைச் செய்யும் போது நிலைத்திருப்பானா, தாங்கிக் கொள்வானா என்பது தான் இப்போதுள்ள கேள்வி? 
முன்னொரு காலத்தில் வடக்கு வளர்ந்து தெற்கு தேய்ந்த போது அகத்திய மகரிஷி தென் திசை வந்ததாக புராணங்கள் கூறுகிறது. மீண்டும் வடக்கு தேய்ந்து தெற்கு வளரும் காலம் ஏற்பட்டுள்ளது. 
துருவங்கள் பூமியிலிருந்து சூரியக் கதிர்களை தெறிக்க விடுவதில் பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கிறது. இதனை Albedo என்பார்கள். இவற்றின் Albedo அளவு அதிகம், அதாவது அதிகமாக சூரிய வெப்பத்தை பூமிக்குள் வெளிவர விடாமல் தெறிக்க விட்டு வளிமண்டலத்தை சம நிலைப்படுத்துவதில் பங்காற்றிக் கொண்டிருக்கின்றன.

ஆங்காரம் - அகங்காரம் -ஆணவம் -அசூயை

யோக சாதனையில் இந்த நான்கு சொற்களும் வெவ்வேறு நிலைகளை விளக்கப் பயன்படும் சொற்கள். இவற்றை சரியாகப் புரிந்து கொள்வது ஒவ்வொருவருக்கும் தம்மைத் தாமே புரிந்து கொள்ள வழிவகுக்கும். 
மனிதன் தனது உணர்வுக்கு (Consciousness) இடும் முகமூடியினை அல்லது அடையாளத்தை ஆங்காரம் என்று சித்தர்கள் யோக வழக்கில் சொல்வார்கள். ஆங்காரத்தை பொது வழக்கில் அகங்காரம், ஆணவம், அகந்தை என்றெல்லாம் கூறுவார்கள். எனினும் இவை செயற்பாட்டில் வெவ்வேறு அர்த்தங்கள் உடையவை. 
ஆங்காரம் என்பது மனம் தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கு ஏற்படுத்திக் கொள்ளும் மையம். இதை அடிப்படையில் "நான்" என்று சொல்லலாம். 
நான் மருத்துவன் ஆக வேண்டும் என்ற ஆங்காரம் இருந்தால் மருத்துவத்தைக் கற்க வேண்டும்,  நல்ல மருத்துவராக இருக்க வேண்டும் என்ற அளவில் ஆங்காரம் உருவாகி மனம் ஒழுங்குபடும். 
இப்படி நான் எனும் ஆங்காரம் உருவாவதிலிருந்து எமது மனம், புத்தி, சித்தம் என்ற ஒழுங்கு அமைகிறது. 
ஆங்காரத்தினால் அந்த ஆங்காரத்திற்குரிய விஷயங்கள் மனதில் சேர்க்கப்பட்டு "நான் மருத்துவன்" என்ற ஆங்காரம் உருவாகுவதால் நாம் சிறந்த மருத்துவராக இருப்போம். 
இப்படி நான் மருத்துவர் என்ற ஆங்காரத்தில் நன்கு சேவை செய்ய, எல்லோரும் இவர் நல்ல மருத்துவர், வல்ல மருத்துவர் என்று புகழ "ஆகா, நான் நல்ல மருத்துவர்" என்ற அகங்காரம் உருவாகிவிடும். கவனிக்க, ஆங்காரம் இப்போது அகங்காரமாகிவிட்டது. இந்த "நான் நல்ல மருத்துவர்" என்ற அகங்காரமும் மற்றவர்களுக்கு நன்மை தான் செய்யும், நான் பெற்ற நற்பெயரைக் கவனமாக காப்பாற்ற நல்ல மருத்துவராக இருக்க வேண்டும் என்ற உத்வேகம் அவரை நல்ல மருத்துவராக வைத்திருக்க உதவும். 
அதே போல் அதன் தீய பாகம் "நான் "தான்" நல்ல மருத்துவர்" என்று எண்ணத் தொடங்கும் போது அகங்காரம் ஆணவமாகத் தொடங்குகிறது. 
ஆணவத்தின் காதலி அசூயை, ஆணவம் ஏற்பட்டவுடன் நாம் அசூயையைக் காதலிக்கத் தொடங்கிவிடுவோம். 
அசூயை என்றால் மற்றவர்கள் மேல் ஏற்படும் பொறாமை உணர்ச்சி, நான் தான் நல்ல மருத்துவர் என்று எண்ணி மற்றவர்கள் என்னை விட தரங்குறைந்தவர்கள், அறிவிலிகள், மற்ற மருத்துவரையும் என்னைப் போலவே மதிக்கிறார்கள், அவருக்கென்ன தகுதி இருக்கிறது" என்ற மனம் வெம்பும் குணம். 
ஆணவம் என்ற காதலன் அசூயை என்ற காதலியுடன் சேர்ந்து பெற்ற பிள்ளை தான் அகந்தை. இவனைச் சரியாகப் புரிந்து கொள்ள ஆங்கிலத்திலுள்ள arrogance என்ற சொல் பொருத்தமானது. அகந்தை வந்தால் மற்றவர்களை அவமதிக்கத் தொடங்குவோம். 
ஆக எமது மனம் செயற்பட ஆங்காரம், அகங்காரம் கட்டாயம் தேவை, ஆணவம் ஏற்படும் போது சற்றுக் கவனம் தேவை, ஆணவம் அசூயையைக் காதலிக்காமல், காதலித்தாலும் அகந்தை என்ற துஷ்டனைப் பெற்றுக் கொள்ளாமல் இருக்க வேண்டும். 
பொதுவாக மனம் பற்றி உரையாடும் போது அனேகருக்கு மற்றவர்கள் மனதை ஆராய்ந்து குறை காணும் இயல்பே பொதுவானது. ஆனால் யோகத்தில் தன்னை ஆராய்தலே வேண்டப்படுவது. 
யோகத்தில் ஆங்காரத்தையும் தூய்மையாக்கி உண்மையான பார்வையினைப் பெறுவதே இலக்கு. இதற்கு இவற்றின் இயல்புகள் தெரிந்திருத்தல் மிக அவசியமானது! 
இந்த நுண்மையான ஆங்கார அகங்கார ஆணவ அகந்தை அமைப்பினைப் புரிந்துக் கொள்ள இன்றைய காலைப் பொழுதில் இந்த உரையாடலைத் தொடங்கி வைத்த அன்பு நண்பருக்கு நன்றிகள் பல!

Friday, December 06, 2019

தலைப்பு இல்லை

இன்று உலக மண் தினம் - 05 December 2019

மண்ணின் வளம் என்பது நைதரசன், பொஸ்பரஸ், பொட்டாசியம் என்ற NPK என்ற மாயையிலிருந்து வெளி வந்து மண்ணிற்கும் உயிர் உண்டு, மண்ணின் வளம் என்பது அதன் உக்கலின் அளவு (Humus) என்பதை விவசாய விஞ்ஞானிகள் புரிந்துக் கொண்டு மண் வளம் காக்க வேண்டும். 

மண்வளம் என்பது நீர்வளத்தின் அடிப்படையும் கூட

மண்ணரிப்பு, மண்வளம் பற்றிய ஒரு சிறிய உரையாடல் இன்றைய காலைப் பொழுதில்.....


தலைப்பு இல்லை

நாளுக்கு 2 திருக்குறட் பா விகிதம் 5 நாட்களுக்கான சவால்

-----------------------

நாள் -03

----------------------------------------

Vimalathithan Vimalanathan இனின் திருக்குறள் சவாலின் ஒருபகுதி, தினசரி 01 குறட் பா எனது முடிவு!

***************************************************************

குறள் 384:

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா 

மானம் உடைய தரசு. 

Translation:

Kingship, in virtue failing not, all vice restrains, 

In courage failing not, it honour's grace maintains. 

முதற் குறளில் ஒரு தலைமை நிர்வாகி – அரசன் கவனிக்க வேண்டிய ஆறு காரணிகளை கூறியவர் அடுத்த குறளில் அவனுக்கு இருக்க வேண்டிய நிர்வாக இயல்புக்குரிய நான்கு அத்தியாவசிய குணங்களை கூறினார். பின்னர் ஒருவன் சிறந்த முடிவெடுக்கும் திறனுடையவனாக இருக்க வேண்டிய தூங்காமை, கல்வி, துணிவுடைமை ஆகிய மூன்று ஆற்றல்களைப் பற்றி கூறி அடுத்த குறளில் ஒரு நிர்வாகத்திற்கு இருக்க வேண்டிய அடிப்படை நெறிமுறை பற்றி கூறுகிறார். ஒரு தலைமை நிர்வாகி தனது வியாபாரத்திற்கும், சேவைக்கும் உரிய மூலப் பொருட்களைப் பெறுவதிலிருந்து, தனது சேவையை வாடிக்கையாளருக்கு வழங்கும் வரை உள்ள பொறிமுறையில் அறத்துடன் இருத்தல் அவசியம். 

அறம் என்பது இது சரியானது என்று உய்த்துணரும் அறிவு. இன்றைய காலகட்டத்தில் நீடித்து நிலைத்திருக்கும் முகாமைத்துவத்தையே (sustainability management) சரியான வியாபார தத்துவமாக கருதப்படுகிறது. நீடித்து நிலைத்திருக்கும் நிலை வேண்டுமென்றால் சூழலிருந்து பெறப்படும் வளங்கள், அதை உபயோகிப்பதால் வரும் கழிவுகள் சரியாக முகாமைத்துவம் செய்யப்பட வேண்டும். 

இந்த வளத்திலிருந்து பெறப்படும் உற்பத்தி செய்யும் ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் சரியான பலனைப் பெறவேண்டும். 

விற்பனை மூலம் உருவாகும் இலாபம் சரியான பொருளாதாரக் கொள்கைகள் மூலமும், நிதி முகாமைத்துவம் மூலமும் பராமரிக்கப்பட வேண்டும். 

இத்தகைய நீடித்து நிலைத்திருக்கும் அபிவிருத்தியை விரும்பும் தலைமை நிர்வாகி தனது படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆகிய ஆறு அங்கங்களும் அறத்துடன் நடத்தல் அவசியமாகும். 

தனது படைகளையும், அமைச்சினையும் சிறந்த அற விழுமியங்களை போதித்து கடைப்பிடிக்கச் செய்வது தலைமை நிர்வாகியின் முதன்மை கடமைகளில் ஒன்றாகும். 

வளங்களைப் பயன்படுத்தும் போது அதீதமாக பயன்படுத்தி எதிர்கால சந்ததியினருக்கு அற்றுப்போய் விடாமல் கவனமாக பாவித்தலில் தலைமை நிர்வாகியின் திட்டங்கள், ஏற்பாடுகள் இருத்தல் அவசியமாகும். 

வியாபார உறவுகளை உருவாக்கும் போது நம்பகத் தன்மையுடன் உறவுகளை உண்டாக்குதல் அவசியம். ஏன் அற நெறிமுறைகளில் தலைமை நிர்வாகி கவனம் செலுத்த வேண்டும்? குடிகளாகிய வாடிக்கையாளர்கள் தாம் பெறும் சேவைகள், பொருட்கள் அறநெறிக்கு உட்பட்டவையா என்பதை அவதானத்துடன் கவனித்து, அத்தகைய மரியாதை உள்ளவற்றையே தமது முதன்மை தேர்வாக எடுத்துக் கொள்வார்கள். 

இதனை இன்றைய காலகட்டத்தில் corporate reputation/Image என்று சொல்லுவார்கள். இன்றைய காலகட்டத்தில் சமூகத்திற்கு, சூழலிற்கு, வளங்களை பாதிக்கும் வகையில் முடிவுகளை எடுக்கும் நிர்வாகிகளை மக்கள்/வாடிக்கையாளர்கள் மதிப்பதில்லை. ஆகவே சிறந்த நிர்வாகமாக இருக்க வேண்டுமானால் சூழலிற்கும், சமூகத்திற்கு தீமை தரக் கூடிய அறநெறி முறைகள் அல்லாதவற்றை நீக்கி மறம் என்ற தைரியத்துடன் தமது மரியாதைக்கு குறைவேற்படாத வகையில் தமது முடிவுகளை எடுக்கும் திறனுடையவராக தலைமை நிர்வாகி இருத்தல் அவசியம். 

இத்தகைய தலைமை நிர்வாகியை கொண்ட நிர்வாகமே நல்ல நிர்வாகம். இந்தக் குறளில் நல்ல நிர்வாகம்/அரசு என்பது நெறிமுறைகளுக்கு உட்பட்டு தனது நிர்வாகத்தை செய்ய வேண்டும் என்பதனை தெளிவாக உரைத்துள்ளார். 

ஸ்ரீ ஸக்தி சுமனன்


Thursday, December 05, 2019

தலைப்பு இல்லை

நாளுக்கு 2 திருக்குறட் பா விகிதம் 5 நாட்களுக்கான சவால்

-----------------------

நாள் -02

----------------------------------------

Vimalathithan Vimalanathan இனின் திருக்குறள் சவாலின் ஒருபகுதி, தினசரி 01 குறட் பா எனது முடிவு! 

***************************************************************

குறள் 383:

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்

நீங்கா நிலனான் பவர்க்கு.

Translation:

A sleepless promptitude, knowledge, decision strong:

These three for aye to rulers of the land belong.

*************************************************************

நிர்வாக அதிகாரி கவனிக்க வேண்டிய ஆறு புறக் காரணிகளை முன்னர் கூறினோம். இந்த ஆறு காரணிகளும் சரியாக இருந்தாலும், குறித்த நிர்வாக அதிகாரி அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம், ஆகிய நான்கும் குறைவில்லாமல் இருக்க வேண்டிய அகப் பண்புகள், இந்த அகப் பண்புகளை சரியாக கொண்டிருக்காவிட்டாலும் நிர்வாகம் விழுந்து விடும். மேலே கூறிய குறைவில்லாமல் இருக்க வேண்டிய நான்கு அகப் பண்புகளுடன் ஆளும் நிர்வாகிக்கு நீங்காமல் இருக்க வேண்டிய மேலும் மூன்று பண்புகள் பற்றி இந்தக் குறளில் விதந்துரைக்கிறார்.

ஒருவன் சிறந்த நிர்வாகியாக இருக்க வேண்டுமென்றால் கீழ்வரும் மூன்று பண்புகளை நீங்காமல் பெற்றிருக்க வேண்டும்.

தூங்காமை: இன்றைய நிர்வாக முகாமைத்துவத்தில் இருக்கும் பெரிய பழுது சரியான நேரத்தில், சரியான முடிவு எடுக்காமை. முடிவெடுப்பதில் தாமதம், இந்த தூங்கும் பண்பு உள்ளவன் எப்போதும் சிறந்த நிர்வாகியாக வர முடியாது. ஆகவே சிறந்த நிர்வாகி என்பவன் துரிதமாக முடிவுகளை எடுக்கும் ஆற்றல் உள்ளவனாக இருக்க வேண்டும். தாமதமான, சரியான நேரத்தில் எடுக்கப்படாத முடிவுகளே பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தூங்காமை என்பதை சோர்ந்து போகாமை என்று பொருள் கொள்ள வேண்டும். 

கல்வி: சரியான, துரிதமான முடிவுகள் எடுப்பதற்கு துறைசார்ந்த புரிதல் அவசியம், அந்த புரிதலின் அடிப்படை கற்கும் கல்வியில் இருந்தே வருகிறது. ஆகவே சிறந்த நிர்வாகியாக இருப்பதற்கு அடிப்படை அந்த துறைசார்ந்த விடயங்களில் தனது அறிவினை பெருக்கி, தெளிந்து இருக்க வேண்டும், இதற்கு கல்வி அவசியம். துரிதமாக முடிவெடுக்கலாம் ஆனால் எடுத்த முடிவு சரியாக இருப்பதற்கு அறிவுத் தெளிவு அவசியம். அந்த அறிவுத்தெளிவை தருவது கல்வி. ஆகவே சிறந்த நிர்வாகி அந்த துறைசார்ந்த அடிப்படைக் கல்வியினை பெற்றிருத்தல் அவசியம்.

துணிவுடைமை: தூங்காமையுடன் துரிதமாக முடிவு எடுக்கும் திறனுக்கு தேவையான முதல் அகப் பண்பு கல்வி என்றால் இரண்டாவது அத்தியாவசிய பண்பு துணிவுடைமை. முடிவுகள் எடுக்கும் போது அதன் விளைவுகள் சாதகமாக இருந்தால் வெற்றி, இல்லாவிட்டால் அதன் விளைவுகளை தலைமை நிர்வாகியே சந்திக்க வேண்டும். பலரும் முடிவு எடுக்காமல் தேங்குவதற்காண முதற்காரணி முடிவுகளின் விளைவு என்னவாக இருக்குமோ என்ற பயம். அந்த பயம் இருபவனால் எதையும் தலைமை தாங்கவோ, குழுவை வழி நடத்தவோ, வெற்றி பெறவோ முடியாதவனாகி விடுவான். ஆகவே கல்வி அடிப்படை புரிதலை தந்தாலும், வெற்றி பெறுபவன் துணிவுடன் சரியான முடிவுகளை எடுப்பவனே.

இந்தக் குறள் என்னைப் பொறுத்த வரையில்  அருமையான குறள். முடிவெடுக்கும் போது விரைவாக முடிவெடுக்க வேண்டும், அப்படி விரைவாக முடிவெடுக்கும் போது தவறான முடிவாக இருக்க கூடாது, அதற்கு சிறந்த புரிதல் வேண்டும், அந்தப் புரிதலைத் தரும் கல்வியினை ஒருவன் சரியாக பெற்றிருக்க வேண்டும். அப்படி சரியான கல்வியறிவு பெற்ற அனைவரும் சிறந்த தலைமைத்துவம் உள்ளவர்களாக வருவதில்லை, ஏனெனில் பலரும் தாம் எடுக்கும் முடிவுகளால் என்ன விளைவு வருமோ என்ற பயம், அந்த பயத்தை உதறி துணிவுடன் முடிவு எடுப்பவன் வெற்றியை நோக்கி பயணிக்கிறான். ஆக இந்தக் குறளில் மூன்று பண்புகளையும் கோர்வையாக ஒன்றுக்கு ஒன்று தொடர்புடன் கூறியுள்ளார்.


Wednesday, December 04, 2019

தலைப்பு இல்லை

நாளுக்கு 2 திருக்குறட் பா விகிதம் 5 நாட்களுக்கான சவால்

-----------------------

நாள் - 01

----------------------------------------

இந்த சவாலிற்கு என்னை இழுத்துவிட்ட புண்ணியவான் Vimalathithan Vimalanathan, நல்ல விஷயம் ஆகவே கட்டாயம் பதிவோம் என்றால் வேலைப் பளுவிற்குள் நேரம் கிடைக்க வேண்டும்.

ஆகவே சவாலில் நாளிற்கு ஒன்று என்பதை ஏற்றுக் கொண்டு, ஏற்கனவே சில குறள்களிற்கு எனக்கிருந்த புரிதலைப் பகிரலாம் என்று எண்ணுகிறேன்.

ஒவ்வொரு நாளும் ஒருவர் வீதம் இழுத்துவிட வேண்டுமாம்! இதைப் பார்த்து விட்டு ஆர்வமுள்ளவர்கள் எவரும் எனது அழைப்பாக எடுத்துக் கொண்டு பகிருங்கள்!

*******************************************

அரசியல்

இறைமாட்சி – Good governance!

******************************************

இங்கு எனது முயற்சி, திருக்குறளை நவீன தொழில், வியாபார நிர்வாகத்தில் எப்படி பயன்படுத்தலாம் என்ற பார்வையில் வாசகர்களுக்கு கூறுதல். அரசியல் என்பதை நிர்வாகம் – Administration எனக் கொண்டால், இறைமாட்சி – Good governance என்றவாறு கொள்ளலாம். ஆக இந்த உரையில் பண்டைய அரசு என்ற கோட்பாட்டை கம்பனி நிர்வாகம் என்ற அடிப்படையில் எடுத்துக் கொண்டு இங்கு உரையாடப்படுகிறது.

குறள் 381:

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு.

Translation:

An army, people, wealth, a minister, friends, fort: six things-

Who owns them all, a lion lives amid the kings.

சிங்கம் காட்டின் அரசன் என்பது உவமை, நாடு என்றும், அதற்கு ஒரு அரசு – நிர்வாகம் இருக்க வேண்டும் என்று கருதுபவன், சிறந்த அரசாக இருக்க ஆறு பண்புகள் அரசனுக்கு இருக்க வேண்டும் என்று கூறுகிறார். அவையாவன: படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆகியவை ஆறும் உள்ள அரசன் சிங்கம் போன்ற அரசன் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

இந்த அறிவுரையை எப்படி ஒரு வியாபார ஸ்தலத்தை நிர்வகிப்பதற்கு பயன்படுத்த முடியும். அரசன் – பிரதம நிறைவேற்று அதிகாரி (Cheif Excutive Officer), குடி – அவர்கள் சேவையை பெறும் வாடிக்கையாளர்கள் (Customer), கூழ் – வளங்கள் (resource), அமைச்சு – நிர்வாக இயக்குனர்களும் அவர்கள் துறைகளும் (Directors & Departments), நட்பு – வியாபார உறவு (business relations), அரண் – பாதுகாப்பு (Securtity) தற்காலத்தில் financial security, information security, assets security என விரியும்.

ஆக ஒரு வியாபார ஸ்தலத்தின் நிறைவேற்று அதிகாரி அரசன், அவனது நிர்வாகம் வெற்றிகரமாக சிங்கம் போன்று இருக்க வேண்டுமென்றால் வாடிக்கையாளர்கள், தனது கம்பனிக்கான வளங்கள், சிறந்த இயக்குனர்கள், சிறந்த வியாபார உறவு, வளங்கள், தகவல்கள், சொத்துக்களுக்கான பாதுகாப்பு என்ற ஆறு காரணிகளையும் சிறப்பாக வைத்திருக்க வேண்டும்.

இந்த ஆறும் ஒரு வியாபார நிர்வாகி கவனிக்க வேண்டிய ஆறு புறக்காரணிகள். இவற்றை எப்படி சிறப்பாக பாவிப்பது என்ற அறிவு இருந்தால் மட்டுமே ஒருவன் சிறந்த நிர்வாகியாக வர முடியும்.

ஸ்ரீ ஸக்தி சுமனன்


தலைப்பு இல்லை

நாளுக்கு 2 திருக்குறட் பா விகிதம் 5 நாட்களுக்கான சவால்
-----------------------
நாள் - 01
----------------------------------------
இந்த சவாலிற்கு என்னை இழுத்து விட்ட புண்ணியவான் Vimalathithan Vimalanathan, நல்ல விஷயம் ஆகவே கட்டாயம் பதிவோம் என்றால் வேலைப்பளுவிற்குள் நேரம் கிடைக்க வேண்டும். 
ஆகவே சவாலில் நாளிற்கு ஒன்று என்பதை ஏற்றுக் கொண்டு, ஏற்கனவே சில குறள்களிற்கு எனக்கிருந்த புரிதலைப் பகிரலாம் என்று எண்ணுகிறேன். 
ஒவ்வொரு நாளும் ஒருவர் வீதம் இழுத்து விட வேண்டுமாம்! இதைப் பார்த்துவிட்டு ஆர்வமுள்ளவர்கள் எவரும் எனது அழைப்பாக எடுத்துக் கொண்டு பகிருங்கள்! 
*******************************************
குறள் 382:
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.
Translation:
Courage, a liberal hand, wisdom, and energy: these four
Are qualities a king adorn for evermore.
ஒரு நல்ல தலைமை நிர்வாகி (Chief Executive Officer) அடிப்படையில் சில மனப் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும். அப்படிப்பட்ட அகப் பண்புகள் இல்லாவிட்டால் எத்தகைய உயர்ந்த பதவியில் இருந்தாலும் நிர்வாகம் சிறக்காது. இந்த அடிப்படையில் அரசன் – எமது பார்வையில் தலைமை நிர்வாகி – கொண்டிருக்க வேண்டிய அடிப்படைப் பண்புகள் நான்கு;
அஞ்சாமை: நிர்வாகம் என்றாலே மனிதர் சார்ந்த இயக்கவியல், மனிதர் தொடர்புபட்ட அனைத்தும் அடிப்படையில் சிக்கல் தன்மை வாய்ந்தவை. முடிவுகள் எடுக்கும் போது அந்த முடிவுகள் சிலருக்கு பிடிக்காமல் போகும், அதனால் அதிருப்தி உண்டாகும். அதிருப்தி உண்டானால் வினைத்திறன் குறையும். கம்பனியில் எடுக்கப்படும் முடிவுகள் அதனுடன் சார்ந்த அனைத்திலும் பாதிப்பினை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட சூழலை எதிர்கொள்ள அஞ்சுபவன் சிறந்த முடிவுகளை எடுக்க முடியாது. முடிவுகள் எடுக்கும் போது மேலே கூறிய ஆறு புறக் காரணிகளிலும் அவை தாக்கத்தை செலுத்தி என்ன ஆகுமோ என்ற குழப்பத்தை ஏற்படுத்தும். அந்த குழப்பத்திற்கு அஞ்சாத துணிவு தலைமை நிர்வாகிக்கு இருக்க வேண்டும்.
ஈகை: மன்னன் நாட்டை நிர்வகிப்பது மக்களின் சேவைக்காக, இந்த சேவையினை சரியாக செய்வதற்கு துணை புரிவது அவனது அமைச்சும், படைகளும். இவற்றை சரிவர நிர்வாகம் செய்ய அவனிற்கு இருக்க வேண்டிய பண்பு ஈகை எனும் தயாள குணம். இந்தக் குணம் இல்லாத தலைவனுக்கு அவனது படைகளும், அமைச்சரும் கட்டுப்படமாட்டார்கள். ஈகை குணம் அவனது படைகளையும், அமைச்சினையும் வசம் செய்யும். ஆக ஒரு தலைமை நிர்வாகி தனது ஊழியர்களிடம் ஈகை குணமுள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவர் தனது குழுவினை வைத்துக் கொண்டு சிறந்த நிர்வாகத்தினை செய்து இலாபத்தினை ஈட்ட முடியும்.
அறிவு: அரசன் எப்போதும் தனது படைகளிடமும், அமைச்சுடனும் ஈகையுடன் இருந்தால் மட்டும் நிர்வாகம் சிறந்துவிடாது. ஈகைப்பண்பு அரசனை நோக்கி அவனது குழுவினரை ஈர்க்கும், அப்படி ஈர்க்கப்பட்ட குழுவினர் சரியாக பணியாற்ற தேவையான வழியை காட்ட அரசன் போதிய அறிவினைக் கொண்டிருத்தல் அவசியம். அரசன் மட்டும் அறிவினை கொண்டிருந்தால் மட்டும் நிர்வாகம் சிறக்காது, ஆகவே அவனது படைகளும், அமைச்சும் சிறந்த அறிவுத் திறனை கொண்டிருத்தல் வேண்டும். எமது பார்வையில் தலைமை நிர்வாகி, அவரது இயக்குனர்கள், முகாமையாளர்கள் என்ற முழு நிர்வாக குழுவும் சிறந்த அறிவுடன் தீர்மானங்களை எடுக்கக் கூடியவர்களாக இருத்தல் அவசியம்.
ஊக்கம்: சிறு பாராட்டு வார்த்தைகள் ஒருவனை எப்படி ஆர்வத்துடன் வேலை செய்ய வைக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆகவே எப்போதும் அரசன் தனது படைகளையும், அமைச்சுகளையும், குடிகளையும் ஊக்கப்படுத்தும் வழிமுறைகளை அறிந்து அவற்றை செவ்வனே செய்ய வேண்டும். அரசன்/தலைமை நிர்வாகி எப்போதும் தனது படை/ஊழியர்கள், அமைச்சு/இயக்குனர்கள், குடி/வாடிக்கையாளர்கள் மூவரையும் ஊக்கப்படுத்தும் திட்டங்களை கொண்டிருக்க வேண்டும்.
அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் ஆகிய நான்கு பண்புகளையும் அரசன், தலைமை நிர்வாகி குறைவில்லாமல் கொண்டிருக்க வேண்டும்.

Tuesday, December 03, 2019

தலைப்பு இல்லை

இன்று காலையில் வசந்தம் தொலைக்காட்சியில் கொழும்பு வளி மாசடைதல் பற்றி ஒரு சூழலியல் உரையாடல்! இன்னுமொரு அத்தியாயம் இருக்கின்றது என நினைக்கிறேன். 

தொலைக்காட்சியில் உரையாடினாலும் தொலைக்காட்சி பார்ப்பதில்லை என்பதால் YouTube இல் வரும் வரை பார்க்க இயலாது! 

மேலும் நல்ல உரையாடலை நிகழ்த்த களம் அமைத்துக் கொடுத்த தயாரிப்பாளர் Jeyakanth Kandasamy அவர்களுக்கும், தொகுப்பாளினி Sambavi Kumaralingam அவர்களுக்கும் நன்றிகள்! 

பகிர்வுக்கு நன்றி மல்லியப் பூச்சந்தி திலகர் அண்ணா!


Sunday, December 01, 2019

தலைப்பு இல்லை

நான் துணை இயக்குனராக பல்தேசியக் கம்பனியில் பணியிலிருந்த போது எனது தலைமை நிறைவேற்று அதிகாரி வேலைக்கான குழுவிற்குரிய நபர்களைத் தான் எப்படி தேர்வு செய்வேன் என்றும் நீ எப்படி உனது குழுவை தேர்வு செய்ய வேண்டும் என்று தந்த உபதேசம் இது.  

1) அந்த நபரால் குறித்த பணியைச் செய்ய முடியுமா? 

2) அந்தப் பணியை மிகுந்த மனவிருப்புடன் செய்வானா?

3) பல்வேறுபட்ட பழக்கவழக்கம், கலாச்சாரம் உடையவர்களுடன் அவர்களைக் காயப்படுத்தாமல் நட்புடன் வேலை செய்வானா?

4) மற்றவர்களை சகித்துக் கொண்டு தனது வேலையைப் பூர்த்தி செய்யும் திசையில் கொண்டு செல்வானா? 

இந்த 04 கேள்விகளுக்கும் சரியாக பதில் வருமானால் அவனை குழுவில் சேர்த்துக் கொள்ளலாம். 

இப்படித் தேர்வு செய்தவன் கீழ்வரும் குணங்களைக் கொண்டிருக்க வேண்டும்

1) முதிர்ச்சி

2) மன உறுதி

3) நுண்ணறிவு

4) நற்குணம்

5) நம்பிக்கை

மிகுதியை மொழிப் பெயர்க்க அசதியாக உள்ளதால் ஆங்கிலத்தில் உள்ளதை அப்படியே வாசித்து விடுங்கள்!    


சிஷ்ய அதிகார மதிப்பீடு

சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...