குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, September 20, 2017

கிரகஸ்த யோகம் - 01





ஆண் பெண் உறவு என்பது இயல்பானது, உலகம் இயங்குவதற்கும், நல்ல நோக்கங்களுக்கும் அத்தியாவசியமானது. இந்த உறவு உலகம் தோற்றம்பெற்ற நாளிலிருந்து இருக்கும் ஒன்றாக இருக்கும் அதேவேளை அழிவுவரை இருக்கப்போகும் ஒன்றாகவும் இருக்கப்போகிறது. இது மனித சமூகத்தில் எல்லா வயது வந்த ஆண் பெண்களால் திருமணம் என்ற கட்டமைப்பு மூலம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சமீபகாலமாக பலரது திருமண வாழ்வில் குழப்பங்களும், முறிவுகளும் நிறைந்த ஒன்றாக மாறிக்கொண்டு இருக்கிறது. இதன் விளைவாக ஆணும் பெண்ணும் தமது துணைகளில் திருப்தி அற்றவர்களாகவும், இன்பமற்றவர்களாகவும் சிதைவுற்று மாறிக்கொண்டு வருகிறார்கள். இந்த சிதைவுகளும், திருப்தியற்ற தன்மைகளும் பெரும் சுமைகளாக மாறிவிடுவதால் திருமண அமைப்பு தவறானது என்று கூறிவருகிறார்கள். இத்தகைய எண்ணங்களால் திருமணத்தின் அடிப்படை விதிகள் மீறப்பட்டு உடைக்கப்பட்டு விடுகின்றன. பலர் பொறுப்புகளை ஏற்க முடியாத கையாலாகத்தனத்தாலும், ஏமாற்றப்பட்ட பட்ட மத நம்பிக்கைகளாலும் அவர்களால் எதுவும் செய்ய முடிவதில்லை

இடைக்காலத்தில் தான் தோன்றித்தனமாக தோன்றிய சுய பிரகடன தகுதியற்ற, சுய நலம் வாய்ந்த அடிமைகளை உருவாக்கும் சமயத்தலைவர்கள் புதுவித கருத்துக்களை சமூகத்தில் விதித்தனர். திருமணம் செய்து கொள்வது ஒருவனை பலவீனப்படுத்தும் தாழ்மையான செயல், அது ஒருவனை நரகத்திற்கு செலுத்தும் எனவும் ஆகவே எல்லாவித குடும்ப பொறுப்புகளையும் விட்டுவிட்டு சொர்க்கத்தை தேடுங்கள் எனவும் போதிக்கப்பட்டது. இந்த போதனை வலுப்பெற்றதால் இன்று பலரும் ஆன்மீகம் என்ற பெயரில் என்ன செய்வது என்று தெரியாமல் பல்லாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் விரக்தியில் அலைகிறார்கள்
இந்த சிந்தனை முறையே முற்றிலும் தவறானது. நிச்சயமாக எது உயர்ந்த ஆன்மீக நிலையாக சன்னியாசத்தால் அடைய முடியுமோ அந்த நிலை குடும்ப வாழ்வில் இருந்து அடையக்கூடியது. திருமண வாழ்க்கை என்பது இயல்பானது, எளிமையானது, முழுமையான யோக சாதனையின் வடிவம் அது. திருமணத்தின் அனைத்து விதிகளும் தெளிவாக விளங்கினால், அதனை தவறாமல் பின்பற்றினால் ஒருவன் மிக உயர்ந்த ஆன்மீக நிலையையும், ஞானத்தையும், சொர்க்கமயமான இன்ப வாழ்வையும் அடைவான் என்பதில் எதுவித ஐயமுமில்லை. இந்த கட்டுரைத்தொடரின் நோக்கம் எமது முன்னோர்களான ரிஷிகள் எப்படி ஆண் பெண் உறவுகளை தமது முன்னேற்றத்திற்கு பயன்படுத்தினார்கள் என்பதனை இளைய சமுதாயத்திற்கு எடுத்துக்கூறுவதாகும்.

குடும்ப வாழ்வின் அவசியம்
 *****************************************************************************************
யோகம் என்ற சொல் இணைவதற்கு அல்லது ஒன்று சேர்வதற்கு என்ற அடியைக் கொண்ட்து. ஆணோ பெண்ணோ ஒவ்வொரு மனிதனும் தனது இயல்பான தனித்த நிலையில் பூரணமற்றவன். இந்த பூரணமற்ற தன்மையை நிரப்புவதற்கு அவன் இன்னொரு தகுதிவாய்ந்த சக்தியுடன் கைகோர்த்து நிரப்ப வேண்டியுள்ளது. இப்படி இணைவு ஏற்பட்டால் அவனது சக்திவளர்ச்சி குறை நிலையில் இருந்து பூரணத்துவத்தை நோக்கி துரிதமாக வளரத்தொடங்குகிறது. அபூரணத்தில் இருந்து பூரணமாதல்; இதுவே யோகத்தின் நோக்கம்

குறைந்த்து 84 வகை யோகங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது; ஹத யோகம், ராஜ யோகம், ஜப யோகம், லய யோகம், தாந்திர யோகம், பக்தி யோகம், ஞான யோகம், கர்ம யோகம், ஸ்வர யோகம், ரிஜு யோகம், மஹா யோகம், குணலினி யோகம், சமத்துவ யோகம், புத்தி யோகம், பிராண யோகம், தியான யோகம், சாங்கிய யோகம், ஜட யோகம், சூரிய யோகம், சந்திர யோகம், சஹஜ யோகம், பிரணவ யோகம், நித்ய யோகம் என்பவை இவற்றில் சில. இது தவிர 700 க்கும் மேற்பட்ட சிறிய பிரபலமற்ற யோக முறைகள் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றினதும் சாதனா முறைகளும், பயிற்சிகளும் ஒவ்வொன்றிலிருந்து ஒவ்வொன்று மாறுபட்டு காணப்படுகின்றன. எத்தகைய வேறுபாடு இருந்தாலும் இவற்றின் அடிப்படை நோக்கம் ஒன்றே! அந்த நோக்கம் பூரணமற்ற தன்மையில் இருந்து பூரணத்துவத்தினை நோக்கி பயணித்தல், அறியாமையில் இருந்து அறிவிற்கு, இருளில் இருந்து ஒளியிற்கு, இறப்பிலிருந்து அமரத்துவத்திற்கு. யோகம் என்பது எல்லைக்குட்பட்ட ஜீவாத்மாவை எல்லையற்ற பரமாத்மாவாக விரிவடையச் செய்யும் பயிற்சி. யோகம் என்று போதிக்கப்படும் அனைத்தும் இந்த இலக்கினையே வெவ்வேறு வழிமுறைகளில் போதிக்கின்றது

ஒரு இட்த்தினை அடைவதற்கு பல்வேறு திசைகளில் இருந்து பல்வேறு பாதைகள் இருப்பது போல் ஆன்மாவை அறியும் ஞானத்திற்கும் பல பாதைகள் காணப்படுகிறது. ஒருவன் பசிக்கும்போது அவனது பழக்கத்திற்கேற்றவகையில் பாண், சோறு, இனிப்பு, இறைச்சி என்ற ஏதாவது ஒன்றை உண்டு பசியை தீர்த்துக்கொள்வான். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு சுவை அனுபவத்தை உண்பவனுக்கு தந்தாலும் இறுதியாக அது அடையும் இலக்கு ஒன்று, அது பசி தீர்தல் என்ற இலக்கு. இதுபோன்றே எல்ல யோக முறைகளினதும் இலக்குதனியொரு ஆன்மா தனது அனுபவத்தில் விரிவடைதல்அல்லது பரமாத்மனுடன் இணைதல் தொடர்பு படல் என்பனவாகும்

இந்த எல்லாவித யோக வகைகளிலும் கிரக்ஸ்த யோகம் என்பதும் ஒருவகை யோகமே.  இந்த யோகத்திற்கு ஒருவன் முக்கியத்துவம் தருவானேயானால் குடும்பத்தில் வளர்வது மிக அவசியமான ஒன்று என்பதையும் எளிய யோக முறை என்பதையும் அறிவான். இந்த கிரகஸ்த யோகத்தின் மூலம் பெறும் சித்திகள் மற்றைய யோக முறைகளால் பெறும் சித்திகள் எவற்றிலும் குறைவானது அல்ல. உண்மையில் அவை அவற்றை விட உயர்வானவை. கிரகஸ்த ஆசிரம்ம் மற்றைய மூன்று ஆசிரம தர்மங்களும் சரியாக இருக்க அவசியமான ஒரு அமைப்பு. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் மற்றைய மூன்று ஆசிரமங்களும் சரியாக இயங்க முறையான கிரகஸ்த ஆசிரம்ம் அமைதியாகவும் ஆனந்தமாகவும் இயங்க வேண்டும்.    

இளமைக்காலத்தில் ஒருவன் தனது ஆற்றல்களை சிதறவிடாமல் ஒருமுகப்படுத்தி, தவறான பழக்க வழக்கங்களுக்கு உட்படாமல் தனது ஆற்றல்களை முன்னேற்றுவதில் மாத்திரம் பயிற்சிக்க பிரம்மச்சரிய ஆசிரமத்தில் பயிற்றுவிக்கப்படுகிறான். இதனால் அடுத்து வரும் கிரகஸ்த ஆசிரமம் சக்தி வாய்ந்த்தாகவும்,வளம் நிறைந்ததாகவும் இருக்கும். வானப்ரஸ்தம், சன்னியாச ஆசிரம்ம் ஏற்றுக்கோண்டவர்கள் அவர்கள் சக்தியை “மற்றவர்களின்” வாழ்க்கையிலும் இந்த உலகத்திலும் அமைதியையும் ஆனந்தத்தையும் ஏற்படுத்த தம்மை அர்ப்பணிக்கிறார்கள். மேற்கூறிய வார்த்தைகளில் மற்றவர்கள் என்பதும், இந்த உலகத்தில் என்பவை எதைக்குறிப்பிடுகிறது? கிரகஸ்த ஆசிரமத்தையே! மற்றைய மூன்று ஆசிரமத்தை ஒருதட்டில் வைத்து நிறுத்தால் அடுத்த தட்டில் அவற்றிற்கு நிகராக இருக்க கூடிய ஒன்று கிரகஸ்த ஆசிரமம். கிரகஸ்த ஆசிரம்ம் ஒழுங்கற்றுப்போனால் மற்றைய மூன்று ஆசிரமங்களும் ஒழுங்கற்றுப்போய் இல்லாமல் போய்விடும். 

ஒவ்வொரு மனிதனிற்கும் குடும்பம் இருக்க வேண்டியதன் அவசியத்தை சாஸ்திர நூற்கள் தெளிவாக குறிப்பிடுகின்றன. சந்த்தி இல்லாது உடலை விடும் ஆத்மாக்கள் நரகத்திற்கு செல்வதுடன் நிம்மதியாக அடுத்த பிறவி எடுக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. ஒரு பிள்ளையை பெறாமல் தாம் பெற்றோரிடம் கடனாளியாகவே வாழ்க்கை இருக்குமென்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது. இதன் உண்மை விளக்கம் ஒருவன் சமூகப்பொறுப்புடன் குடும்பத்தில் நிலைத்திருப்பவனாக, தனது எதிர்கால சந்ததிக்கு சமூகத்திற்கு நன்மையை ஏற்படுத்துபவனாக பொறுப்புள்ளவனான மனப்பாங்கினை உருவாக்குவதே. இந்த பலன் தொடர்ச்சியாக கடத்தப்பட்டுக் கொண்டு இருக்கும். ஏன் கிரகஸ்த ஆசிரமத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது? இதை விபரமாக ஆராயும் ஒருவன் குடும்ப வாழ்க்கை என்பது மிக தனது ஆன்மாவினை அறிந்து பரிணமத்தை வளர்க்கும் அரிய யோக சாதனை என்பதனை தெளிவாக விளங்கிக்கொள்வான். இது ஒருவனிற்கு சொர்க்கத்தை அனுபவிக்க வைப்பதுடன் உலக வாழ்க்கை தடைகளை நீக்கி தன்னை உணரவைக்கும் யோக முறையாகும். 

அனேகமாக எல்லா இந்திய ரிஷிகளும் திருமணம் புரிந்து அவரவர் குடும்பத்துடனேயே தவ வாழ்க்கையில் ஈடுபட்டார்கள். வஷிஷ்ட ரிஷி 100 புதல்வர்களை பெற்றிருந்தார். அத்ரி மகரிஷியின் மனைவி அனூசூயை, கௌதமரின் மனைவி அகல்யை, பரசுராமர் ஜமதக்னி முனிவரின் புதல்வர், சுகன்யா சாயவன ரிஷியின் மனைவி, யக்ஞவல்ய ரிஷியிற்கு கார்கி மைத்ரேயி ஆகிய இரு மனைவியர், சிருங்கி லோமேஷ ரிஷியின் புதல்வர். ஒரு சில சன்யாச ஆசிரம்ம் ஏற்று தவம் புரிந்து ரிஷிகளும் இருந்திருக்கிறார்கள். எப்படியாயினும் அனேக ரிஷிகள் கிருகஸ்த ஆசிரமத்தில் வாழ்ந்துகோண்டு, குடும்பக்கடமைகளை ஏற்றுக்கொண்டு மனைவி மக்களுடனேயே தமது தபஸினை செய்து வந்திருக்கிறார்கள். யோகத்தின் உயர்ந்த குருவான கிருஷ்ணனும், சிவனும் குடும்பத்துடனேயே வாழ்ந்து சாதனை புரிந்ததாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. 

முற்கால சமூகபழக்க வழக்கங்களுக்கு அமைவாக நீண்ட தலை முடி வளர்த்து, கௌபீனத்துடன், புலி,மான் போன்ற தோல் ஆசன்ங்களில் அமர்ந்து தவம் புரிந்து வந்தார்கள். மக்கள் சிறு களிமண் குடிசைகளில் வாழ்ந்தார்கள். ஆகவே இன்று இவற்றை தரிப்பதன் மூலம் பலர் தாம் தவத்தில் ஈடுபடுவதாக காட்ட முனைவது தவறு. அதேவேளை இப்படி வேடங்கள் தரித்து குடும்பத்தை விட்டு விலகி வாழ்வதுதன் மூலம் மட்டுமே ஆன்ம விழிப்புணர்வு கிடைக்கும் என்று எவராவது நினைத்தால் அந்த நினைப்பும் தவறானதே. 

ஆன்ந்தமான குடும்பத்தை உருவாக்கி வளர்ப்பது மிக இயற்கையான ஒன்றும், எல்லாவித யோக பாதைகளை பயிற்சிப்பதற்கு அத்தயாவசியமான ஒரு கட்டமைப்பும் ஆகும். ஒரு ஆண் தனிமையில் வாழும் வரை அவன் தன்னைப்பற்றி மட்டுமே சிந்திப்பான். அவனது உணவு, உடை, படிப்பு, வேலை, விளையாட்டு என்று அவனது சொந்த சந்தோஷம் மட்டுமே அவனது குறிக்கோள். அவன் திருமணம் நிகழும்போது அவனது தான் என்ற வட்டம் மனைவி என்ற வட்டத்துடன் சேர்ந்து விரிவடைகிறது. அவன் தனது மனைவியின் இன்பம், வசதி பற்றி சிந்திக்கத்தொடங்குகிறான். அதன் பின்னர் அவன் தனது உழைப்பு, சக்தி மூலம் அவளது வசதிகளையும் ஆசைகளையும் நிறைவேற்ற முனைகிறான். இதன் மூலம் தன்னைப்பற்றி மட்டும் சிந்தித்துக்கொண்டிருந்த ஒருவனது சிந்தனை இன்னொருவரைப்பற்றியும் சிந்திக்கும்படி விரிவடைகிறது. குழந்தை பிறக்கிறது. அவனது வட்டம் இன்னும் சுய நலமற்று விரிவடைகிறது. அவன் தனது குழந்தையின் படிப்பு, ஆரோக்கியம், சந்தோஷம் பற்றி சிந்தித்து அதற்காக கடமையாற்றுகிறான். நாட்கள் ஆக ஆக மனைவிக்காகவும், குழந்தைக்காகவும் வேண்டி சுயகட்டுப்பாட்டினை வளர்த்து தன்னை செம்மைப்படுத்துகிறான். இதன் மூலம் தான் என்ற சுய நல வட்ட்த்தில் இருந்து வெளிவந்து விரிவடைந்து தனது ஆன்மாவினை வளர்க்கிறான். 

முழுமையான மனிதன் என்பவன் தனது மனைவியும் பிள்ளையும் உடையவன் என்று மனு கூறுகிறார். மனைவி, பிள்ளை ஆகிய இரண்டும் கிடைக்கும் வரை அவன் முழுமையடையாத பாதி வளர்ச்சியுற்ற மனிதனே. இது அனுமதி தேர்வு சித்தியடையாமல் ஒரு கல்லூரியில் கற்கையை பூர்த்தி செய்ய முடியாது அல்லவா, அதுபோல் கிரக்ஸ்த ஆசிரமத்தை பூர்த்தி செய்யாமல் வானப்பிரஸ்தமோ, சன்னியாசமோ பூர்த்தியாகாது. இதனால் கிரகஸ்த ஆசிரம் ஒருவன் தனது நிலையில் இருந்து மெதுவாக ஆனால் தொடர்ச்சியாக தன்னை விரிவடைய வைத்துக்கொள்ள வைக்கிறது. 

தனியொருவன் கணவன் மனைவி என்ற இரண்டாகி, பிறகு குழந்தையுடம் மூன்றாகி, உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள், சமூகம், கிராம்ம், மானிலம், தேசம் எனவிரிந்து இறுதியாக முழு உலகமாக விரிவடைகிறது. இப்படி முழு மனித குலமும் விரிவடைந்து ஒன்றாவதற்கான அடிப்படை அலகு கிரகஸ்த ஆசிரமம். 

இப்படி தனக்கு உள்ளே இருக்கும் ஒரே ஆத்மாவே இப்படி விரிந்து பலவாகிறது என்ற அத்வைத தத்துவத்தை அனுவமாக கொண்டு வருவதற்குரிய சாதனம் கிரகஸ்த ஆசிரமம். 

மனைவியின் வருகையுடன் ஒருவன் தனது தான் என்ற சுய நலத்தை குறைத்து கட்டுப்படுத்தி மெதுவாக சுய கட்டுப்பாட்டில் முன்னேறுகிறான். இப்படி சுய கட்டுப்பாட்டில் சித்தியடைந்த்தன் ஊடாக தான் ஆற்றும் காரியம் எதுவும் தனக்காக அல்ல மற்றவர்களுக்கானது என்ற உயர்ந்த கர்ம யோக மனப்பாங்கினை பெறுகிறான். இப்படி படிப்படியாக அவன் செய்யும் செயல் யாவிலும் பற்று அற்று அனைத்தும் மற்ற்வர்களின் நலத்திற்காகவே என்ற மனப்பாங்கினை பெறுகிறான். 

திருமணம் என்பது யோகத்தின் இறுதி இலக்கான ஜீவான்மா பரமான்மாவுடன் கலத்தல் என்பதனை அனுபவத்தில் கொண்டுவர பயிற்சிக்க கூடிய அரிய வாய்ப்பு. கிரகஸ்த யோகம் இந்த வாய்ப்பினை தருகிறது. தான் என்ற சுய நலத்தில் கட்டுண்டு கிடக்கும் ஆன்மா தனது கட்டுகளை உடைத்து விரிந்து பூரணத்துவம் பெறுவதற்கும், தன்னை செம்மைப்படுத்திக்கொள்ளவும், யோகத்தின் இறுதி இலக்கினை அடைவதற்கு கிரகஸ்த யோகம் வழிதருகிறது.  

***************************************************************************************************
இது குருதேவர் பண்டிட் ஸ்ரீ ராம் சர்மா ஆச்சார்யா ஹிந்தி மொழியில் எழுதிய கிரகஸ்த யோக ஏக் சித்த யோக" என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பை தழுவிய தமிழ் கட்டுரை.

தெய்வ சாதனைக் கலை



முற்காலத்தில் ரிஷிகளின் வழி வந்த சமூகத்தை சேர்ந்தவர்களது வாழ்க்கையில் தெய்வ சாதனை என்பது ஒருவித நுண்கலையாக (fine arts) ஆக அனைவராலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அத்தகையை தெய்வ சாதனை கலை தற்போதைய சமூகத்தில் பெரிதும் மறைந்து விட்டதால் அதன் பலன் களும் அறியமுடியாதவாறு ஆகிவிட்டது. இசை, நாட்டியம் என்பன மனைதையும் உடலையும் ஒருவித ஒழுங்கில் இயக்குவதன் மூலம் மன திற்கு இன்பம் தரும் உத்திகளை கொண்டிருக்கின்றன. இந்த அடிப்படையில் தெய்வ சாதனை கலையின் நோக்கம் மனதை நுண்மைப்படுத்தி உயர் சக்திகளை பெற்று தெய்வ நிலை அடைதலாகும். 
இதற்கான அடிப்படை சாரம் சுய ஒழுக்கம். தெய்வ சாதனையினை செய்பவனை சாதகன் என்று குறிப்பிடுவோம். சாதகன் முதலில் ஒரு தெய்வத்தை தானாகவோ அல்லது அவனது வழிகாட்டி கூறியபடியோ தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். அந்த தெய்வம் அவன் தனது மனதை ஒழுங்குபடுத்தி, ஆற்றலை அதிகரித்து தன்னில் விழிப்படையச் செய்யப்போகும் சித்திகள் மற்றும் ரித்திகளுக்கான குறியீட்டு விளக்கங்களே. ஆக தெய்வ உருவங்கள் என்பவை ஒருவன் தன்னில் விழிப்பித்துக்கொள்ள வேண்டிய தெய்வ குணங்கள், ஆற்றல் பற்றிய மறைபொருள் குறியீடுகள் மட்டுமே. இப்போது சாதனையின்  நோக்கம் அந்த தெய்வ உருவத்தில் குறிக்கப்பட்டு தன்னில் மறைந்து இருக்கும் தெய்வ சக்திகளை விழிப்படையச் செய்தலாகும். 
எப்படி ஒருவன் தன்னில் தெய்வ சக்தியை விழிப்படையச் செய்வது? முதலில் சுய-ஆன்ம சுத்தி, பின்னர் தான் இந்த ஸ்தூல உடல் தாண்டிய சூக்கும சரீரம் உடையவன் என்பதை அனுபவ பூர்வமாக உணர்தல் ஆகிய இரண்டையும் அனுவத்தில் கொண்டுவருதலுக்கு கடும் சிரத்தை முயற்சியுடன் கூடிய பயிற்சி. 
ஒரு விவசாயிற்கு சாதனைக் கலை இலகுவாக விளங்கும். அல்லது தெய்வ சாதனைக்கலையினை விளங்க விவசாய கலையின் அடிப்படை உதவி செய்யும். ஒரு விவசாயி நிலத்தில் பலன் பெற வேலை செய்வது மிக்க்கடுமையான உழைப்பு. நிலத்தை உழ வேண்டும், பின்னர் மண்ணை பதப்படுத்தி உரமூட்ட வேண்டும், பின்னர் சரியான விதைகளை விதைக்க வேண்டும். விதைத்த பின்னர் நன்கு வளரும் வரை அதீத வெயிலில், மழையில் இருந்து காப்பாற்ற வேண்டும், நிலத்தில் களைகள் வளர்ந்து பயிரின் சத்தினை உறிஞ்சிவிடாமல் இருக்க வேண்டும். நோய்களில் இருந்து காப்பாற்றவேண்டும். இயற்கை பொய்காமல் உதவ வேண்டும். இவை அனைத்தையும் சரியாக செய்து முடித்தால் நல்ல விளைச்சலைப் பேறமுடியும். 
தனது விளைச்சல் நிலத்தை எப்படி பாதுகாப்பது?, எப்படி உழுவது, எந்த நேரத்திற்கு நீர் பாய்ச்சுவது, உரம்போடுவது இவை எல்லாம் ஒருவன் தனது அனுபவ ஞானத்தினூடாக தனக்குள் இருந்து பெறுவது. விவசாயத்தில் பலனைப்பெற நீண்ட காலம் பிடிக்கும். சிலவேளை விவசாயி எல்லாவற்றையும் சரியாக செய்தாலும் இயற்கை அனர்ந்தங்கள் அவனது முயற்சியை வீணடிக்கச் செய்யும். அவன் செய்யும் முயற்சிக்கு உடனடியாக பலன் எதுவும் கிடைக்காது. இவ்வளவு சவால்களையும் பொறுமையாகவும், விரக்தியடையாமலும் ஏற்றுக்கொண்டு கிடைக்கப்போகும் விளைச்சலை மட்டும் கருத்தில் கொண்டு மெய்வருத்தி தனது இலக்கில் முயற்சித்து வெற்றி காணும் பண்புள்ள விவசாயி மட்டுமே விவசாயத்தில் வெற்றி காணமுடியும். அவன் தினசரி தனது நிலத்தில் வரும் பிரச்சனைகளை மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டு தன்னிடம் உள்ள அறிவு, ஆற்றல், வளங்களை கொண்டு வென்று சாதிக்கிறான். அவன் தனது நிலத்தின் பிரச்சனைகளை மறுத்து சோம்பலுடன் உறங்குவதில்லை. அப்படி உறங்கினால் விளைச்சல் கெட்டுப்போய்விடும். இப்படி சிரத்தையாக பாடுபட்டு பலன் கிடைக்கும்போது இயற்கைக்கு நன்றி தெரிவித்து பெற்றுக்கொள்கிறான். 
இந்த முயற்சியை அவன் தனது வாழ் நாளின் இறுதி வரை சிரத்தையாக செய்கிறான். எவரையும் எதிர்பார்ப்பதில்லை. சோம்பலடைவதில்லை. இதுவே சாதனைக் கலையில் அடிப்படை. 
தனது மனதையும், உடலையும் தெய்வ சக்தியினை வளர்க்கக் கூடியவாறு பக்குவப்படுத்தி சுத்தி செய்து தெய்வ குணங்களை வளர்த்து, தனது மன, புத்தி, பிராண ஆற்றல்களை வளர்ப்பதன் மூலம் ஒருவன் தெய்வ சாதனைக் கலையில் தேர்ச்சி பெறலாம். இதில் முன்னேறுவதற்கு ஒரு விவசாயியைப்போன்று பலனை உடனடியாக எதிர்பார்க்காத மனப்பாங்கு, தொடர்ச்சியாக தளவுறாமல் செயல் புரியும் செயலூக்கம், இன்னல் கண்டு கலங்கி சாதனையினை விடாத பண்பு என்பவை அவசியம்.

Friday, July 07, 2017

குருப்பூர்ணிமா - குரு சாதனா

அமராத்மாவே,

சித்த வித்யா குருமண்டலத்தால் வழி நடாத்தப்படும் எமது சங்கத்தின் வழிகாட்டலில் உங்கள் மன, உடல் சக்திகளை வலுப்படுத்தி உலக வாழ்க்கையை செம்மைப்படுத்தி இறை அருளை பெற்று ஆன்ம முன்னேற்றமும் பெற வழிகாட்டல் வழங்கப்படுகிறது.

நாளை சனிக்கிழமை காலை 07.02 (Indian Standard Time) தொடங்கி அடுத்த நாள் ஞாயிறு 08.51 வரை பௌர்ணமி திதி கூடுகிறது. இந்த பௌர்ணமி ரிஷிகளால் குருப்பூர்ணிமா என அழைக்கப்படுகிறது.

இந்த நாள் தமது வாழ்க்கையை குருமண்டலத்திற்கு அர்ப்பணித்து தெய்வ சாதனை செய்ய எண்ணும் அன்பர்களுக்கு ஒரு அரிய நாளாகும்.

ஆகவே இத்துடன் இணைக்கப்பட்டுள்ள குரு சாதனை என்ற பாடத்தினை பலமுறை கற்று புரிந்து கொண்டு, வரும் குருப்பூர்ணிமை அன்று உங்கள் குருசாதனையினை தொடங்குங்கள்.

எமது தனிப்பட்ட பிரார்த்தனையில் உங்கள் முன்னேற்றத்திற்காக சித்த வித்யா குருமண்டலத்திடம் தினமும் பிரார்த்திக்கும் அதேவேளை தினசரி உங்கள் முயற் சியே பலன் தருவதை துரிதப்படுத்தும் என்பதை மனதில் கொண்டு உங்கள் சாதனையினை தொடருங்கள்.

சாதனா விபரம் 

Thursday, June 08, 2017

வைகாசிப்பௌர்ணமியும் ரிஷிகளின் மண்ணுலகப் பரிணாமமும்



மண்ணுலகப் பரிணாமம்
மண்ணுலகப் பரிணாமத்தை நடாத்த, ஆண்டுக்கொருமுறை எல்லா கேந்திரங்களிலும் உள்ள மகரிஷிகள் சம்பளத்தில் கூடுகிறார்கள். அதில் பிரபஞ்ச நியதிக்கு ஏற்ற விதத்தில் எங்கு ஆக்குவது, எங்கு அழிப்பது என்ற முடிவுகளை ஏற்படுத்துகிறார்கள். அந்த தினம்தான் வைகாசிப் பௌர்ணமி தினமாகும். இந்த கூட்டத்திற்கு தகுந்த ஆன்ம சாதனை புரிந்து பக்குவப்பட்டவர்கள் ஸதூலமாகவும், ஓரளவு பக்குவப்பட்டவர்கள் சூக்கும சரீரத்திலும் அழைத்து செல்லப்படுவர். 

மகரிஷிகள் அனைவரும் கூடும் அந்த சமயம் அவர்களின் கூட்டு காந்தமானது, மண்ணுலக வானப்பரப்பு முழுவது பரவுகின்றது. அதனை பயன்படுத்திக்கொள்ள அன்றைய தினம்  ஆன்மீக கூடங்களில் உள்ளவர்கள் எல்லாம் கூடித் தியான நிலையில் ஆழ்கின்றனர். அந்த காந்த சக்தி பரவும் மாதமாகிய வைகாசி மாதத்தில் உலகின் பல ஆன்மீக  மேதைகள் பிறந்திருக்கிறார்கள். புத்தர்,  வியாசகர், திருவள்ளுவர், கண்ணைய யோகியார் ஆகியோர் இந்த மாதத்தில் பிறந்தவர்களே. 

புராணங்களில் உள்ள உண்மை
மகரிஷிகளின் தலைமை அவ்வப்போது மாறும். கலியுகம் தொடங்கும் வரை தலைமை பொறுப்பினை ஏற்று நடாத்தியவர் வியாச முனிவர் ஆவார். கலியுக ஆரம்பத்தில் மைத்ரேயருக்கு இந்த தலைமை பொறுப்பு வழங்கப்பட்டது. அகத்தியர், மைத்ரேயர், வசிட்டர், புலஸ்தியார் முதலியவர்கள் சப்தரிஷிகள் நிலையில் இருந்து, சிரஞ்சீவிகளாக உலகப் பரிணாமத்தை நடாத்தி வருகிறார்கள். இடையிடையே அவர்கள் வழி நின்று, கடுமையான சாதனையால் தமது உடல் பரிணாமத்தை கட்டுப்படுத்த கூடியளவு வெற்றியடைந்தவர்கள் பலரும், அவ்வப்போது மகரிஷிகள் ஆணையின் பெயரில் செயல்படுபவர்களாய் உலகின் பல கேந்திரங்களில் இருந்து பணியாற்றி வருகிறார்கள். சித்தியடைந்த சித்தர்கள் பலரும் இப்படியிருந்து வருகிறார்கள். சில சமயங்களில் சில குடும்பங்களில் பிறந்து மக்களை  நல்வழியில் திருப்பி விட்டு, பின்னர் மரணத்தினை ஏற்று உடலினை விட்டு விட்டு, தமது பழைய சூக்கும சரீரத்தை ஏற்று கொள்கிறார்கள்.

ஆன்ம வித்தையின் பயன்
-          அற்ப நாட்களில் முடியும், அற்ப நேரத்தில் முடியும் பௌதிக இன்பத்தினை உண்மை என நம்பி வாழ்பவர்களுக்கு,
-          கண்ணுக்கு தெரியும் மனிதனுக்குள், கண்ணுக்கு தெரியாத சூக்கும மனிதன் உண்டென்பதை உணர முடியாதவனுக்கு,
-          பௌதிக இயங்கங்கள் எல்லாம் தானாக நடைபெறுவது என்று கருதிக்கொண்டிருப்பவர்களுக்கு,
-          உண்பதும், உறங்குவதும். மக்களை பெறுவதையும் தவிர மனிதன் செய்ய வேண்டியது எதுவும் இல்லை என்று நம்பி வாழ்பவர்களுக்கு,
இதுவரை நாம் சொல்லி வந்த உண்மைகள் கட்டுக்கதைகளாகத்தான் தெரியும்.

ஆனால் இதை நம்பி பயன் கொள்ளும் ஆன்மீக சாதகர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நம்பாதவர்களை புத்தகங்களை கொண்டும், சொற்பொழிவுகளை கொண்டும் நம்ப வைத்துவிட முடியாது. இந்த உண்மைகள் மகரிஷிகள் மரபிற்கு மாறானவை. அதனால் இதனை அறியாதவர்களுக்கு இவற்றை மெய்பிக்க முடியாது. நாமும் இதை அறியக்கூடியளவு ஆன்ம வித்தையில் பண்பட்டவர்களுக்கு என்றே வெளியிடுகிறோம். அத்தகையவர்கள் எம்முடைய இந்த விளக்கத்தால் உள்ளத்தில் உறுதிபெற்று தமது சாதனையில் வேகமாய் முன்னேறி விரைவில் மாமுனிவர்களை நேருக்கு நேராக தரிசிக்கும் பேற்றைப் பெறுவார்களென நம்புகிறோம். 

இன்றைய தினம் இந்த பதிவினை படிக்க வாய்ப்பு கிடைக்கும் அன்பர்கள் தவறாமல் இரவோ, நாளை காலையோ விளக்கேற்றி சித்த வித்யா குரு மண்டல நாமாவளியும், ஸ்ரீ அகத்திய மூல குரு மந்திரமும் நூற்றியெட்டுதடவையும் ஜெபித்து அருள்பெற பிரார்த்திக்கவும். 

அகஸ்தியர் மூலகுரு மந்திரம்: 
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சிம் வம் அம் உம் மம் மகத்தான அகத்தீசாய நமஹ


Wednesday, May 31, 2017

நவீன வானியலும் ஜோதிடமும்


நவீன வானியலில் ஒளியை தானாக வெளியிடும் ஆற்றல் உள்ளது நட்சத்திரம்,உள்வாங்குவது கிரகம் ஆனால் ஜோதிடத்தில் ஒளியை வெளியிடும் நட்சத்திரமான சூரியனை கிரகம் என்றே கூறப்பட்டுள்ளது மற்றும் துணைக்கோளாகிய சந்திரனையும் கிரகம் என்று கூறப்பட்டுள்ளது.

நண்பர் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன் அவர்களுடனான உரையாடலில் பகிர்ந்த எமது கருத்து.

எப்போதும் வரைவிலக்கணம் என்பது அந்த சொல்லை பாவிக்கும் அறிஞர்களின் குழுவைச் சார்ந்தது, ஜோதிடத்தில் நட்சத்திரம் உண்மையில் நக்ஷத்திரம் என்பதை "நக்ஷ்" என்றும் "க்ஷேத்திரம்" என்றும் இரண்டு சொற்களாக பிரிக்கலாம். "நக்ஷ்" என்றால் "ஆகாயம்" என்று பொருள்."க்ஷேத்திரம்" என்றால் "இடம்" என்று பொருள்.எனவே நக்ஷ்சத்திரம் என்றால் ஆகாயத்தில் இருக்கும் இடம் எனப்பொருள்படும். இந்த இடத்தில் இருந்து சக்தியை கௌவ்வும் (ஈர்க்கும்) வானியல் பொருட்கள் கிரகம் எனப்படும். ஜோதிடம் என்பது மனிதன் வாழும் பூமியை மையமாக கோண்ட கணிதம். ஆகவே பூமிக்கும் ஆகாயத்தில் இருக்கும் சக்தி மையங்களான நக்ஷத்திரங்களில் இருந்து சக்தியை கௌவ்வி வழங்கும் பொருட்கள் எல்லாம் கிரகங்கள். ஆகவே எமது வானியல் அறிவியல் விளக்கப்படி சூரியன், சந்திரன், சூரியனும் சந்திரமும் தமது ஓட்டப்பாதையில் வெட்டும் புள்ளிகளன ராகு கேது இவையெல்லாம் பூமிக்கு சக்தியை வழங்குவதால் கிரகங்கள் என எமது ரிஷிகளால் வரைவிலக்கணப்படுத்தப்பட்டது. எனவே எம்மைப் பொறுத்த வரையில் நவீன வானியலின் வரைவிலக்கணங்களையும் எமது ரிஷிகளின் வானியல் விளக்கங்களையும் குழப்பிக்கொள்ளக் கூடாது.

சிஷ்ய அதிகார மதிப்பீடு

சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...