நாம் நினைக்கும் காரியங்கள் எமக்கு நடக்காமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன?
குறித்த காரியம் நடைபெறுவதற்கான தகுந்த சித்த சம்ஸ்காரங்கள்
எம்மில் இல்லாதது,
சம்ஸ்காரம் இருந்தாலும் அதை எப்படிச் செய்வது என்ற
தெளிவு புத்தியில் இல்லாமல் இருப்பது,
அப்படியிருந்த்தாலும் நாம் செய்த சில பாப வினைகள்
அந்த சித்த சம்ஸ்காரங்களை செயற்படவிடாமல் தடுப்பதாலும்,
தகுந்த சித்த சம்ஸ்காரங்கள் இருந்தாலும் அதைச்
செயற்படுத்த தகுந்த சக்தி இல்லாமல் இருப்பதாலும்,
சித்தத்தில் சம்ஸ்காரம் இருந்தாலும் தகுந்த ஆங்காரம்
இல்லமையால் அந்தச் செயலைச் செய்வதற்குரிய உத்வேகம் எம்மில் இல்லாமலும் இருப்பதால் எம்மால்
நாம் நினைக்கும் காரியங்களில் வெற்றியடைய முடிவதில்லை.
மந்திரம் என்பது மனனம் செய்யும் போது எமது மனதைக்
காப்பது என்று அர்த்தம்; மந்திர சாதனை மூலம் நாம் எமது மனதின் சலனத்தைக் குறைத்து சித்தம்,
புத்தி, ஆங்காரம் ஆகியவற்றை நமது காரிய சாதகத்திற்கு ஏற்றவகையில் மாற்றியமைக்கலாம்.
நாம் செய்யும் சங்கல்பம் சித்தத்திற்கு தகுந்த சமஸ்காரத்தையும், புத்தியிற்கு அதை எப்படிச்
செய்ய வேண்டும் என்ற தெளிவையும், ஆங்காரத்திற்கு அதைச் செய்து முடிக்க வேண்டும் என்ற
உறுதியையும் தரும். பின்னர் மந்திர ஜெபத்தின் மூலம் இதற்குரிய தெய்வீக ஆற்றல் எமது
அந்தக்கரணங்களுக்குப் பெறப்படும்.
ஒருவனுக்கு காரிய சாதகமாகுவதற்குரிய ஜெபக்கணக்கு
அவனது சித்த சமஸ்காரத்தின் தன்மையைப் பொறுத்து இருக்கிறது. அழுக்கு நிறைந்த, பாப சம்ஸ்காரங்கள்
நிறைந்த சித்தமாக இருந்தால் அதிக மந்திர ஜெபமும், தூய்மையனா, பாப சம்ஸ்காரங்கள் அற்ற
சித்தமாக இருந்தால் குறைந்தளவு ஜெபத்திலும் காரியம் சாதகமாகும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.