குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, August 31, 2014

தேவேந்திரன் துதித்த மகா லக்ஷ்மி அஷ்டகம்


தோத்திரப்பாக்கள் அர்த்தம் அறிந்து ஜெபிக்கப்பட வேண்டியவை, ‘தத் ஜெப; ததார்த்த பாவனம்” அர்த்தம் அறிந்து தியானிக்கப்பட வேண்டியவை. அந்த வகையில் மகாலக்ஷ்மி எனும் ஸ்ரீ தத்துவத்தினை விழிப்பிக்கச் செய்ய வல்ல தோத்திரம் மகா லக்ஷ்மி அஷ்டகம்.
இந்தப்பதிகளில் மகா லக்ஷ்மி அஷ்டகத்தின் சுருக்கமான பொருளையும் அதன் யோக தத்துவ விளக்கத்தினையும் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் அருளிய படி காண்போம், விரிவாக படிக்க எண்ணுபவர்கள் சென்னை ஆத்மா ஞான யோக சபா பதிப்பித்த ஆன்மீக படைப்பு – 06 வாங்கி கற்கவும். சபா செயலாளரிடம் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.


முதலாவது சுலோகம்
நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்கு சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ?மி நமோஸ்துதே


பொருளுரை:
பிரபஞ்ச பெரும் மாயா சக்தி வடிவினளே! ஸ்ரீ தத்துவம் எனும் லக்ஷ்மீ பீடத்திற்குரியவளே! தேவர்களால் வணங்க்கப்படுபவளே, கைகளில் சங்கு, சக்கரம், கதையினை தாங்கியவளே, மகா லக்ஷ்மியே உனக்கு எனது நமஸ்காரம்!

விஷேட யோக வித்யா உரை:

ஆன்ம கொடிகளை பிரபஞ்ச பரிணாமத்தில் செலுத்தி விளையாடும் பராசக்தியின் ஒரு திரிபு சக்தி வடிவமே மகா லக்ஷ்மீ. அவள் கைகளில் வைத்திருக்கும் தாமரை புஷ்பம் பிரபஞ்சத்தின் குறி, பிரபஞ்சத்தை அவளே தாங்கியிருக்கிறாள் என்பது அதன் கருத்து, அவள் நின்றிருக்கும் நீர் பிரபஞ்ச சாகரம், பிரபஞ்சமெல்லாம் தோன்றுவதற்கு ஆதாரமானது ஆகாயதத்துவம், அந்த ஆகாய தத்துவத்தில் இருந்து உண்டான தாமரையே பிரபஞ்சம், இதனை நடத்துபவள் மகாலக்ஷ்மி, பிரஞ்சத்தின் எண்ணற்ற அண்டக்கோளங்கள் தாமரை இதழ்கள், மீண்டும் தாமரைமேல் மகாலக்ஷ்மி வீற்றிருப்பது தானே பிரபஞ்சத்தின் ஆதார சக்தி என்பதை காட்டவே, ஆகவே பிரபஞ்ச மாயா சக்தியும் அவளே, மாயையினுள் ஆன்மாக்களை உட்படுத்தும் அவளே விடுவிக்கவும் செய்கிறாள், எதன் மூலம் செய்விக்கிறாள் “ஸ்ரீ” தத்துவத்தின் மூலம். ஸ்ரீ தத்துவம் என்பது ஆன்மாக்களை எல்லாவித போகங்களையும் அளித்து திகட்ட செய்து பரிணாமத்தில் உயர்த்தும் அம்பிகையின் விளையாட்டு, இதற்கு லக்ஷ்மியின் கடாட்சம் அவசியம், மகாலக்ஷ்மியின் அருளை பெறும் ஆன்மாக்கள் இன்பமயமான உலக வாழ்வினை அனுபவித்து இறுதியில் மாயையிலிருந்து வெளியேற்றி முக்தியினை அளிப்பாள். இதை தருவதற்கான சக்திகளை குறிப்பது சங்கு, சக்கரம், கதை என்பன, சங்கு நாத பிரம்மம், சக்கரம் பிரபஞ்ச இயக்கம், கதை வீரம், இந்த மூன்றையும் மகாலக்ஷ்மிஇணை உபாசிப்பவர்கள் பெற்று, தேவர் போன்ற குறைவற்ற இன்பத்தினை பெற்று பரிணாமத்தில் முன்னேறுபவர்கள் ஆகின்றனர். 

Thursday, August 14, 2014

ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோக சப்த சதுஷ்டயம் - ௦2

முன்னைய பகுதியில் சாந்தி சதுஷ்டயத்தின் முதலாவதான சமபாவத்தை பற்றி சற்று விரிவாக பார்த்தோம். இன்றைய பதிவில் மற்றைய மூன்றையும் பற்றி சற்று பார்ப்போம். 

சாந்தி – அமைதி - மேற்கூறிய சமபாவம் பயிற்சித்து சித்தியானவுடன் ஏற்படும் நிலை சாந்தி எனப்படும் அமைதி. இது புலன்களை அடக்குவதால் வரும் அமைதியும் , தெய்வ சக்தியை எம்முள் ஏற்பதால் வரும் அமைதியும் அடங்கும். முதலாவது சமபாவத்தில் பலன் சாந்தி எனப்படும் அமைதி.

சுகம் எனும் ஆனந்தம் – எல்லாவித மன அழுத்தங்கள், துன்பங்களில் இருந்து விடுபட்ட நிலை. இந்த நிலையில் அக இன்பமும் ஆன்ம மலரவும் ஏற்படும். இந்த நிலை முதல் இரண்டு நிலைகளான சமபாவம், சாந்தி ஆகிய இரண்டும் அடைந்ததன் வெளிப்பாடு.

ஹாஸ்யம் எனும் ஆத்மபிரசாதம் – இது சுகத்தின் இயக்க நிலை, சுக நிலையினை அடைந்தபின்னர் அது நிலைத்துவிட்டவுடன் அவர்களை சூழ இருவித ஆனந்த அலைகள் வெளிப்படத்தொடங்கும். எந்தவித வெளி பௌதீக மானசீக இடையூறுகளும் அவர்களை கலக்கமுறச்செய்யாது. இது தூய்மையும், தெளிவும் சாதகனின் அனைத்து நிலைகளிலும் வெளிப்படும் நிலை.

அடுத்த பதிவில் சக்தி சதுஷ்டயம் பற்றி பார்ப்போம்.....

Wednesday, August 13, 2014

ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோக சப்த சதுஷ்டயம் - ௦1


இந்த பதிவுகள் எனது  ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோக வாசிப்புகளின் அடிப்படையானது. இயலுமான வரை சொற்பிரயோகங்களை அரவிந்தரின் சொற்களையும் அதற்கு தகுந்த தமிழ் சொற்களையே உபயோகித்துள்ளேன். இந்த புரிதல்கள் மேலும் பட்டை தீட்டப்படவேண்டியவை.  

அரவிந்தரின் பூரண யோகத்தில் சாதகன் அடியவேண்டிய ஏழு நிலைகளை பகுத்து கூறியவை சப்த சதுஷ்டயம் எனப்படும்.

அரவிந்தரின் யோகத்தில் சாதகனின் இலக்கு நான்கு, அவையாவன;
  1. சுத்தி – தூய்மைப்படுத்தல்
  2. முக்தி – விடுதலை அடைதல்
  3. சித்தி – உணர்ந்து செம்மையடைதல்
  4. புக்தி – ஆனந்த அனுபவம்

இவற்றை அடைவதற்கான இலக்குகள் ஏழு நிலை, அந்த ஏழு நிலைகள் ஒவ்வொன்றும் நான்காக விரியும். அந்த சதுஷ்டயம் – ஏழும் வருமாறு;
  1. சாந்தி சதுஷ்டயம்
  2. சக்தி சதுஷ்டயம்
  3. விஞ்ஞான சதுஷ்டயம்
  4. சரீர சதுஷ்டயம்
  5. கர்ம சதுஷ்டயம்
  6. பிரம்ம சதுஷ்டயம்
  7. சித்தி சதுஷ்டயம்

இவற்றின் விபரங்களை ஒவ்வொன்றையும் அடுத்து வரும் பதிவுகளில் பார்ப்போம்,

சாந்தி சதுஷ்டயம்
ஒருவன் பூரண சாந்தியினை (அமைதியினை) அடைவதற்கு நான்கு பண்புகள் இருக்க வேண்டும். இந்த நான்கும் அவனது உறுதியான சாதனா பயிற்சியில் இருக்க வேண்டும். 

அந்த நான்லில் முதலாவதான சமந்தா எனப்படும் சமபாவம் பற்றி சுருக்கமாக இந்த பதிவு கூறும்;

சமந்தா – சமபாவம் – மன, பிராண, உடல் இச்சைகளில் இருந்து விடுபடல், அதாவது இந்த இச்சைகள் எம்மை தொல்லைப்படுத்தாமல் இருக்கும் படி உறுதியாதல். இறைசக்தி எம்முள்ளும் வெளியிலும் செயற்படுவதை ஏற்றுக்கொள்ளல். மனம், பிராண, உடலில் எதுவித இச்சை எழுந்தாலும் அவற்றை சமநிலையில் இருந்து கவனிக்கும் பண்பு. வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை சமனாக ஏற்றுக்கொள்ளும் மன, உடல் ஆற்றலுக்கு சமந்தா அல்லது சமபாவம் எனப்படும். இதனை பெறுவதற்கு இரண்டு வகையினை கூறுகிறார். முதலாவது நேர் சமநிலை இரண்டாவது மறை சமநிலை.

மறை சமநிலை என்பது எமது தாழ்ந்த புலன் உணர்ச்சிகளில் (எம்மை பரிணாமத்தில் உயர்ந்து செல்லவிடாத புலன் உணர்ச்சிகள்) இருந்து விடுபடும் முறை. இதனை பயிற்சிப்பதற்கு மூன்று வழிமுறைகள் காணப்படுகின்றன.முதலாவது திதிக்ஷா எனப்படும் இச்சாசக்தியால் கட்டுப்படுத்தல். இது சாதகன் தனது புலன்களை தாழ்ந்த உணர்ச்சிகள் ஆட்படுத்தி விடாமலும், இன்ப உணர்ச்சிகள் மயக்கிவிடாமலும் தனது இச்சா சக்தி மூலம் கட்டுப்படுத்துவதாகும். இரண்டாவது உதாசீனதா – இது அறிவால் தெளியும் முறையாகும். வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் நிலையானது அல்ல என்பதனை அறிவால் உணர்ந்து அதனை விலக்கும் செயல்முறை. மூன்றாவது நதி எனப்படுவது, இது பக்தி எனப்படும் எல்லாச்செய்கைகளையும் இறைவனின் இச்சா சக்திக்கு சமர்ப்பித்து காரியம் ஆற்றும் நிலையாகும். இந்த மூன்று பயிற்சிக்களாலும் ஆன்மா வெளி உலகங்களின் பற்றுகளில் இருந்து விடுபட்டு  தாழ் உணர்ச்சிகள் வலுவிழந்து உயர்சக்தியினை பெறுவதற்குரிய பண்பினை பெறும்.

நேர் சமநிலை என்பது உயர் இறை சக்தியை எம்மில் செயற்பட செய்யும் முறை. மறை சமநிலையினால் பற்றற்ற நிலையடைந்த ஆன்மா தனது சுய ரூபத்தில் இருந்து அமைதியை ஆனந்தத்தினை அனுபவிக்க தொடங்கும். ஒருதடவை முழுமையான விழிப்புணர்வினை அனுபவித்த சுயம் – ஆன்மா இன்பம், ஆனந்தம், அமைதி, அறிவு, சுயத்தின் இச்சா சக்தியை உணர்தல் என்பவற்றை பெறும். இதுவும் மறை சமநிலை போல் மூன்று வழிகளில் அடையப்படுவது. முதலாவது ரச எனப்படும் மனம் பற்றற நிலையினை அடைவதினால் உண்டாகும் இன்பம், இரண்டாவது எல்லாவித ரச நிலைகளிலும் மனதிற்கு உண்டாகும் இன்பம். மூன்றாவதும் ஆனந்தம் – இது மனதினால் அனுபவிக்கும் இன்பத்தினை விட உயர்ந்தது.

அதாவது மறை சமநிலையினை பயிற்சிப்பதன் மூலம் எமது தாழ்ந்த புலன் உணர்ச்சிகளை வெல்லும் அதேவேளை நேர் சமநிலையினை பயிற்சித்து தெய்வ சக்தியை எம்மில் செயற்பட வைக்க முடியும்.

Friday, August 08, 2014

மந்திர விஞ்ஞானம்


ஒருவன் “ராமா” என்று பலத்து கத்தினால் அவனை சுற்றிலும் குறித்த தூரத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் கேட்கிறது. எப்படி கேட்க முடிகிறது. கத்தினவனிடத்திலிருந்து கேட்டவர்கள் வரை சப்தம் சென்றிருக்க வேண்டும். காற்றின் வழியாக சப்தம் பரவுகின்றன. இங்கு காற்று என்பது வீசும் காற்றுகள் அல்ல. வாயு மண்டலம் என்று பொருள். நிலையான வாயு மண்டலத்திநூடாகவும் சப்தம் பயணிக்கும்.

இதுபோல் சப்தத்திற்கு வடிவமுண்டு, சப்தத்தினை குறித்த அலைவேகத்தில் அலைக்கழிக்க வைக்கும் போது குறித்த உருவங்களை உண்டு பண்ணும் என்பது தற்போது கணனிகளின் உதவியுடன் புரிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்,

அதுபோல் சப்தத்திற்கு குறித்த நிறத்தினை உண்டும் பண்ணும் ஆற்றலும் உண்டு.

ஒருவரை மடையா என்று ஏசினால் அவரிற்கு கோபம் வரும், அதுபோல் சப்தத்தினால் உணர்சிகளை தூண்ட முடியும்.

சப்தங்களை வாயினாலோ, மனதினாலோ சொல்லும்போது, நினைக்கும் போது உடலில் சில மாறுதல்கள் ஏற்படும். இதனை பஞ்சபூத பீஜ மந்திரங்களினால் பரிசோதித்து பார்க்கலாம்.

ரம் என்பது அக்னி பீஜம், இதனை ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து “ரம்,ரம்” என்று தொடர்ச்சியாக ஆயிரத்தெட்டு தடவை வாய்விட்டு சொல்லுங்கள் உடலில் மெதுவாக சூடு பரவுவதை காணலாம். மனதில் சலனமில்லாமல் சொல்லத்தொடங்க சில நிமிடங்களில் அதிக சூடு உருவாகுவதை காணலாம்.

இதற்கு மாறாக “ஸம்” என்ற அப்பு – நீர் பீஜத்தினை கூறினால் உடலில் குளிர்ச்சி தன்மை உண்டாகும். இதுபோல் ப்ருதுவி பீஜம் ஜெபித்தால் இரத்தோட்டம் மந்தப்படும், வாயு பீஜம் ஜெபித்தால் நாடித்துடிப்பு  அதிகரிக்கும்.

இப்படி உடலில் ஏற்படும் மாறுதல்கள் உடலுடன் நிற்பதில்லை. உடலைச் சுற்றி உள்ள வாயு மண்டலத்தினையும் மாற்றுகிறது. உடலில் சூடு பரவும் போது உடலைச் சுற்றி உள்ள காற்று மண்டலத்திலும் கூடு பரவுவது போல் மனதில் மந்திரங்களால் உருவாக்கப்படும்  சக்தி சுற்றி உள்ள ஆகாயப்பரப்பில் உள்ள மன ஆகாய வெளியில் மாறுதலை செய்யும் என்பதனை புரிந்து கொள்ளலாம்.

மனித உடலிலும், மனதிலும் உள்ள சக்திகள் எல்லாம் வெளியிலிருந்து பெறப்பட்டவையே, வெளியே சூரியன் இல்லாவிட்டால் உடலில் பிராணன் இருக்காது, அதனாலேயே அதிக பிராணன் உள்ள பகலில் வேலை செய்து பிராண இழப்பினை ஈடு செய்ய இரவில் உறங்குகிறோம். அதுபோல் சந்திரன் இல்லாவிடில் மூளையில் திரவ தன்மை இருக்காது. பிண்டத்தில் உள்ளவை எல்லாம் அண்டத்தில் இருந்து பெறப்படுபவையே.

மந்திரம் என்பது குறித்த ஒரு சக்தியை அதிகமாக கவரும் ஆற்றலுடைய சொற்களின் கோர்வையே, குறித்த அளவு ஒரு மந்திரத்தை ஜெபிக்கும் போது அதற்குரிய மாறுதல் ஜெபசாதகரின் உடல், மனம் சுற்றியுள்ள ஆகாயத்தில் பிரதிபலித்து அதிக சக்தியை கவர்கின்றது. தெய்வ ஆகர்ஷண மந்திரங்கள் குறித்த நிற, வடிவங்களை ஆகர்ஷிக்கும் வகையில் மகான்களால் ஆக்கப்படுள்ளது. இவைகளின் ஜெபத்தால் அக்குறித்த தெய்வ உருவம் சூக்ஷ்மத்தில் இருந்து ஸ்தூலதிற்கு உருவாகிறது. இதற்கு மிகுந்த மனக்குவிப்பு தேவை. இந்த மனக்குவிப்பு அதிகமாகும் போது சாதகன் தனது இஷ்ட தெய்வத்தினை பௌதிக கண்களால் காண்கிறான்.

இதுபோல் காரிய சித்திக்கான மந்திரங்களை ஜெபிக்கும் போது உண்டாகும் மந்திர அலைகள் மன ஆகாயத்தில் பரவி காரிய சித்திக்கான சூழ்நிலைகளை உருவாக்கி வெற்றியடையச் செய்கிறது.

இவையே மந்திரங்கள் எப்படி செயற்படுகின்றன என்பதற்கான விளக்கங்கள் ஆகும்.

ஜெப முறை
மந்திரங்களை வாயால் உச்சரித்தே பலன் காணவேண்டுமானால் அதற்கு பலகாலம் வேண்டும். சிலசமயம் அவ்வப்போது ஜெபித்த மந்திரங்களின் பிரபாவம் மற்றொரு ஜெபத்தால் கலைந்து போகலாம். இப்படியானால் எத்தனை காலம் ஜெபித்தாலும் பலன் பெற முடியாது. அதனால் மந்திரங்களின் பலன்களை அடைய வேண்டுமானால் வாய் உச்சரிப்புடன் மனதிலும் சலனமில்லாமல் உச்சரிக்க பழக வேண்டும். மனதில் சலனமில்லாமல் உச்சரிக்க தெரிந்தவர்கள் வாயினால் உச்சரிக்காமலே மனதினால் உச்சரித்து விரைவில் பலன் காணலாம். தெய்வ காட்சிகளை காணும் விருப்பத்திற்கான மந்திரமானால் வாயில் உச்சரிக்கும் அதே வேளை மனதில் அதன் அர்த்தத்தினை பாவித்து வரவேண்டும்.

மந்திர தீக்ஷை
பலவித வர்ணங்கள் தாறுமாறாக தீட்டி இருக்கும் துணியில் சுத்தமானதொரு சித்திரத்தினை வரைய முடியாது. இதற்கு முதலில் பழைய வர்ணங்களை அகற்ற வேண்டும். அது போல மந்திர சக்திகளால் உருவாகும் புதிய வகை சக்தி அலைகளை தாங்கி கொள்ள மனதில், உடலில் பக்குவம் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாதவனுக்கு நன்மைக்கு பதில் தீமையும் கிடைக்கலாம். அப்படி விரும்புபவர்கள் தகுந்த ஒருவரிடமிருந்து அச்சக்தியினை பெற்றுகொண்டால் பின் பயமின்றி ஜெபித்து சித்தி பெறலாம். மந்திரத்தினை ஜெபிக்கும் போது திரண்டு வரும் சக்தியினை தாங்கும் ஆற்றலைத் தகுந்த ஒருவரிடமிருந்து பெறுவதுதான் மந்திர தீக்ஷை.

மந்திர தேர்வு

ஏதோ ஒரு பலனை நாடி ஏதோ ஓரு மந்திரத்தை ஜெபித்தால் பலன் பெற முடியாது. குறித்த பலனை தரக்கூடிய மந்திரங்களை அறிந்தே ஜெபிக்க வேண்டும். இப்படிச் செய்யாததால்தான் பலர் பலகாலம் ஜெபித்தும் பலன் பெறமுடியாது போயினர். 

Thursday, August 07, 2014

காயத்ரிதேவியின் உருவ விளக்கம்



முக்தா வித்ரு ஹேம நீல தவளச்சைர் என்று தொடங்கும் காயத்ரி தேவியின் தியான ஸ்லோகத்தின் பொருள்: ஐந்து முகங்களும், பத்து கைகளும் கொண்ட காயத்ரி தேவியின் உருவத்தின் விளக்கம் வருமாறு “ முத்து, பவளம், தங்கம், நீலம், வெள்ளை நிறங்களில் ஐந்து முகங்கள், மூன்று கண்கள், சந்திரன் பதித்த இரத்தின கிரீடம் தரித்த தத்துவ பொருள் கொண்ட எழுத்து வடிவினள், வரம் தரும் அபயம், அங்குசம், பாசம், சவுக்கு, கபாலம், கதை, சங்கு, சக்கரம், இருதாமரைகள் தாங்கிய பத்துக்கைகளைக் கொண்ட காயத்ரியினை தியானிக்கிறேன்.

இது காயத்ரியின் தியான வடிவம். இந்து சமயத்தில் இறைவனை பல்வேறு வடிவங்களில் வணக்குவதை பல தெய்வ வழிபாடு எனக் கருதுகின்றனர். இதற்கு காரணம் உருவவழிபாட்டை தவறெனக் கருத்தும் பிரிவினர் உருவவழிபாட்டின் உண்மை தத்துவத்தினை அறியாமையேயாகும்.

ஆன்மீக விளக்கத்தில் கடவுளின் பல்வேறு தெய்வ உருவங்கள் அரூபியான பரம்பொருளின் சில குறித்த தத்துவங்களை விளக்கும் தத்துவ குறியீடுகளே ஆகும். உருவையே கடவுள் எனக்கருதி கேலி செய்வதோ, மயங்கி வாதிடுவதோ உண்மை ஞானம் அல்ல! அவ்வுருவம் கூறும் தத்துவத்தினை உணர்ந்து அதனூடாக பரம்பொருளை அறிவதே எமது முன்னோர்கள் வழிகாட்டி வைத்தனர். இந்த உண்மையினை அறிந்தால் எந்த வழிபாட்டு முறையினையும் வீணாக கேலி செய்வதோ, தூற்றுவதோ அவசியமற்று பிணக்குகள் இல்லாது போகும்.

மனிதனுக்கும் மற்ற உயிர்களுக்கும் தொடர்பில்லாமல் கடவுள் எங்கோ பரலோகத்தில் இருப்பதாக எண்ணுவது அறியாமையாகும். இப்பிரபஞ்சத்தின் மூலசக்தி, மூலகுணம், மூலப்பொருள், மூல உயிர் கடவுள் என அறிந்தால் பிரபஞ்சம் எங்கும் கடவுள் இருக்கிறார் என்பதனை அறிந்து கொள்ள முடியும். அவரின் மூல நிலையுடன் செயல் நிலையினை விளக்கவே தெய்வ உருவங்கள், வழிபாட்டு தளங்கள் தோன்றின. இந்து சமயத்தில் ஒவ்வொரு தெய்வ உருவத்திற்கும் (இடைக்காலத்தில் சமய வியாபாரிகளால் ஏற்படுத்தப்பட்ட பொருளற்ற உருவங்கள் தவிர்ந்த) இறைவனின் குணங்களையும், செயல்களையும் விளக்கும் குறியீடுகளாகவே ஆக்கப்பட்டிருக்கின்றது. இவை குறித்த தெய்வ சக்தியை தமது ஆன்ம சாதனையினால் உணர்ந்த ரிஷிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த உண்மையினை உணர்ந்து குறித்த உருவத்துடன் அதற்குரிய மந்திரத்துடன் சாதனைகளை செய்யும் போது குறித்த தெய்வ சக்தி எம்மில் உள்ளோ வெளியோ விழிப்படைந்து எம்மை பரிணாம பாதையில் இட்டுச்செல்லும். (உயர் தெய்வ சக்திகளாக இருந்தால் உயர் பரிணாமதத்திலும், தாழ் சக்திகளாக இருந்தால் (மோகினி, குறளி, குட்டிச்சாத்தான்) கீழ் பரிணாமத்திலும் சாதகர்களை வழிநடாத்தும்).
இந்த அடிப்படையில் இந்த பதிவில் யோகியர்களுக்கும், தபஸ்விகளுக்கும் மிக முக்கியமான சாதனை மந்திர தெய்வமான காயத்ரி தேவியின் உருவ விளக்கத்திற்கான உண்மைகளை சுருக்கமாக ஆராய்வோம்.

பிரபஞ்சம் எல்லாம் அணுக்களின் கூட்டுப்பொருட்கள் என விஞ்ஞானம் கூறுகிறது. ஆன்மீகத்தில், சித்தர் தத்துவத்தில் பிரபஞ்சத்தின் தோற்றம் ஐந்து வகையாக இருந்து, கலந்து தோன்றுகின்றது எனக்கூறப்படுகிறது. இவைந்தும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐம்பூதங்களாகும். நிலம் என்றால் கடினப்பொருள், நீர் என்பது திரவநிலை, நெருப்பு அணுக்களாக திரியும் இயக்க நிலை, காற்று – அணு நிலை, ஆகாயம் – அணு சிதைந்து நிலை, இந்த ஐந்து நிலைகளே பிரபஞ்சத்தின் எந்தப்போருட்களும். ஐந்து பூதங்களின் விளக்கமே காயத்ரியின் ஐந்து முகங்கள். மூல பரம்பொருள் இவ் ஐந்து பூதங்களாக அலைக்கழியும் போது அவ்வலை வேகத்தில் வெளிப்படும் நிறங்களே அவளின் முகச்சாயல்கள்.

இதன் தத்தவம், மூல பரம்பொருள் (சிவம்) இயக்க நிலைக்கு வரும் போது சக்தியாகிறது, ஆதலாம் அதனை பெண்ணாக குறிக்கப்படுகிறது. இந்த இயக்க நிலை ஐம்பூதங்களாக திரிந்து இருக்கின்றது, இந்த ஐம்பூதங்கள்  பிரபஞ்சத்தினை ஆக்குகின்றன. இதன் வெளிப்பாடே காயத்ரியின் ஐந்து முகங்கள்.

மனிதனுக்கு பிரபஞ்சத்தினை அறிவிக்கும் முதன்மை புலன் கண்கள். கண்கள் இல்லாவிடின் அவன் குருடன். ஒளியை வகிப்பது கண்கள். பிரபஞ்சத்தின் கண்கள் சூரியன், சந்திரன், அக்கினி என்ற மூன்றும். எல்லா ஒளிகளும் சூரியனின் திரிபுகள். ஒளிகளில் வெளிப்படும் வெப்பம் அக்கினி, குளிர்ந்த தன்மை உடையவை சந்திரன். சூரியன் பொருளை உண்டாக்குவது, அக்கினி பொருளினை உருமாற்றி சிதைப்பது, சந்திரன் பொருளினை இறுக்கி காப்பது, ஆக சூரியன் படைத்தல், சந்திரன் காத்தல், அக்கினி அழித்தல் என்ற முத்தொழில்களை செய்வது. இந்த மூன்று தொழில்களுமே காயத்ரியான பரம்பொருளின் மூன்று கண்கள்.

இதன் தத்துவம்: ஆக்கல், அமைத்தல், அழித்தல் ஆகிய மூன்றும் சூரிய, சந்திர, அக்னி வடிவாயிருந்து சாதிப்பவர் பரம்பொருள். இந்த மூன்றையும் குறிக்கும் குறிகளாக தேவிக்கு முக்கண்கள் அமைந்துள்ளன.

பிரபஞ்சத்தில் உயிர்களின் பரிணாமம்
பிரபஞ்சத்தில் உயிர்கள் ஏன் பிறந்தன? பிறந்தவை ஏன் இறந்தன? பிரபஞ்ச வாழ்க்கையில் இன்பத்தினை (போலியானதுதான்!) நுகர்வதால், இன்பம் இல்லையானால் இந்த உலகில் யார் வாழவிரும்புவர்? மண்ணுலக இன்பத்தினை விளக்கும் உயரிய பொருட்கள் இரத்தினங்கள், கிரீடம் அதிகாரத்தின் அரசுரிமையை குறிக்கும். சந்திரன் இன்பத்தின் சிகரம், குளு குளுவென இன்ப ஒளி வீசுவது. தேய்ந்து வளரும் இன்பத்தின் இலக்கணம் பிறை!

தத்துவம் : பிரபஞ்சத்தில் உயிர்களைப் பரிணாமத்தில் உழலச் செய்ய பரம்பொருள் அவைகளின் அனுபவத்திற்கு என இன்பம் தரும் பொருட்களை படைத்திருக்கிறான். அவ்வின்பங்கள் பிறைபோல் தேய்ந்து வளர்பவை ஆனாலும் அவையே உயிர்களை ஆட்சி செய்கின்றன.

இனி அவள் தாங்கியிருக்கும் ஆயுதங்களின் இலக்கணங்களை பார்போம்
அங்குசம்: மதங்கொண்ட யானையினை அடக்குவது அங்குசம், அறியாமை, ஆணவம், கன்மம் ஆகிய மும்மலங்கள் பீரிடச் செய்யும் பசுக்களான ஆன்மாக்களை நிலை பிறழ்ந்து விடாமல் அடக்குபவர் பரம்பொருள், இந்த தன்மையினை குறிப்பது அங்குசம்.

பாசம்: தனியுயிர் உலகத்தில் வாழாது, அதற்கு வேறு உயிர்களும் பொருட்களும் தேவை. மயக்கம், மாயை என்பன உயிர்களின் பாசத்தின் வழியாகத்தான் செயற்படுகின்றன. உலகில் எதன் மேலும் பாசம் இல்லையாயின் உயிர்கள் உலகத்தில் பிறக்காது. உயிர்கள் மேல் பாசக்கயிற்றை வீசி அதனை பரிணாமத்திற்கு உடபடுத்தும் பரம்பொருளின் தத்துவத்தை இது குறிக்கிறது. உயிர்களுக்கு பாசத்தை உண்டாக்கி கட்டுப்படுத்துபவர் பரமன்.

சவுக்கு – ஓடாதவைகளை ஓடவைப்பது, சவுக்கை ஓங்கியதும் குதிரைகள் வேகமாக ஓடும், அதபோல் பரிணாமத்தில் உயிர்கள் மந்தமாய், சோர்வாய் இருக்கும்போது அவற்றின் பரிணாமத்தை வேகப்படுத்துபவன் பரமன் எனும் தத்துவத்தை கூறுகிறது. வாழ்க்கையில் ஞானத்தை தரும் துன்பங்களின் இலக்கணம் சவுக்கு.

கபாலம்: அறிவின் குறியீடு, இறைவன் உயிர்களின் அறிவை தன் வசம் வைத்திருப்பவன். பரிணாம முடிவில் தன்னுள் ஒடுக்கிகொள்கிறான். அறிவை இயக்கி உயிர்களின் பரிணாமத்தினை முடிப்பவன் இறைவன்.

கதை: தீமைகளை அழிக்கும் சின்னம். பரிணாம உயர்வின் காரணமாக தன்னை நாடுபவர்களின் தீமைகள், துன்பங்கள், பகைமைகள் அறிவின்மையினை அழிப்பவன் இறைவன் என்பதற்கான குறியீடு.

சங்கு; நாதப்பிரம்ம தத்துவம். இறைவன் நாத வடிவினன். நாதம் என்றால் சப்தம் என்று மட்டும் பொருள் அல்ல. அலையும் அலைவடிவம் எல்லாம் நாதம். பிரபஞ்சம் ஒரு அலைவடிவிலேயே அலைகழிந்து கொண்டு உள்ளது. இறைவனும் சக்தி அலைவடிவிலேயே இருக்கிறான்.

சக்கரம்: வட்டமாக சுழல்வது சக்கரம். பிரபஞ்சத்தில் அணு முதல் அண்டம் வரை அனைத்துமே வட்டமாகத்தான் சுழல்கிறது. இப்படி பிரபஞ்சத்தை சக்கரமாக சுழல இயக்குபவன் இறைவன். சுழலும் பிரபஞ்சத்தினை தனது கைகளில் ஏந்தியிருக்கும் பராசக்தி பிரபஞ்சத்தை கட்டுப்படுத்துபவள்.

இருதாமரைகள்: உயிர்கள் அறியாமையில் உழலும் போது உலக இன்பங்களை மட்டும் அனுபவிக்கும். மெய்ஞானம் பெற்றபின் ஆன்மீக இன்பங்களை அனுபவிக்கும். இவ்விருவகை இன்பங்களையும் உயிர்களுக்கு கொடுத்து அருள்பவன் இறைவன். தாமரை பிரபஞ்ச மெய்ஞானம் பெற்றபின் வரும் ஆன்ம இன்பத்தின் குறியீடு.

வர அபய கரங்கள் : தன்னை சரணடைந்தவர்களுக்கு எல்லா பயங்களையும் போக்கி அனைத்து சுகங்களையும் அளிப்பவர் இறைவன், அவற்றின் குறியீடு.

தாமரையில் அமர்தல்: தாமரை பிரபஞ்சத்தின் குறியீடு, பிரகிருதி கடலில் இருந்து சக்தி காம்பால் வெளிவந்து பலபல மண்டலங்களாக விரிவது பிரபஞ்ச தாமரை. அதன் மேல் பிரபஞ்சத்தின் நாடு சக்தியாய் அமர்ந்து பிரபஞ்சத்தினை நடாத்துவிக்கும் பராசக்தி,

இதுவே காயத்ரி தேவியின் உருவத்தின் ஆன்மீக விளக்கம்.

மண்ணுலகை பொறுத்தவரையில் மேற்கூறிய அனைத்து செய்கைகளும், தெய்வ சக்திகளும் வருவது சூரியனூடாகவே! சூரியன் மனிதனுக்கும் தெய்வ சக்திகளுக்கும் இடையில் உள்ள இணைப்பு பாலம். ஆகவே மேற்குறிப்பிட்ட பரம்பொருளின் தத்துவங்களை தம்மில் உணர்ந்து விழிப்படைய செய்ய ஆன்றோர்கள் காயத்ரி உபாசனையினை சந்தியோபாசனையாக சூரியனுடன் இணைந்தார்கள்.

காயத்ரி மந்தரத்தால் சூரிய சக்தியினூடான பிராண சக்தி எமது ஸ்தூல, சூக்ஷ்ம உடலில் அதிகமாக ஆகர்ஷிக்கப்படுகிறது. காயத்ரி சாதனையால் மனம், உடல்களில் பிராணனின் அலைவேகம் அதிகரித்து பரிணாமம் உயர்ந்து ஞானம் தோன்றி, மாயை அழிந்து முக்தி கிட்டுகிறது.


ஆகவே காயத்ரி சாதனை என்பது சாதாரண தன்மை உடையவன் தனது அறிவினை, பிராணனை விழிப்படையச் செய்து ஞானப்பாதையில் முன்னேறுவதற்குரிய சாதனா மார்க்கம்! இத்தகைய இந்த பலன்களை பெற்ற குருபரம்பரையில் இருந்து தீக்ஷை (தீக்ஷை என்றால் என்ன? பார்க்கவும்) பெற்று சாதனை புரிவது மட்டுமே ஞானவழியில் முன்னேற்றும். அல்லாமல் எல்லோரும் ஜெபிக்கும் காயத்ரி மந்திரத்தை நாமும் ஜெபிப்போம் என்றால் பலன் கிட்டாது, இந்த உண்மை அறியாமல் காயத்ரி மந்திரம் பொய் என்று வருத்தப்படாதீர்கள்! 

Wednesday, August 06, 2014

தீட்சை என்றால் என்ன? - தீக்ஷா விஞ்ஞானம்

எனது குருநாதரின் பாடக்குரிப்புகளில் இருந்து,

ஒருவன் எளியவன் திறமைசாலி ஆனால் நல்ல முறையில் தொழில் செய்து முன்னேற அறிவும், முயற்சியும் உண்டு ஆனால் பணம் இல்லை. இந்த நிலையில் அவனிற்கு யாராவது பணம் கொடுத்தால் அவன் அதனை வைத்து முன்னேறிக்கொள்வான்.

ஒருவனுக்கு சமஸ்க்ருதம் கற்க விருப்பம் ஆர்வம் உண்டு. யாராவது அவனுக்கு சொல்லிக்கொடுத்துவிட்டால் அவன் தனது முயற்சியில் அதனை கற்று தேறிவிடுவான்.

உடல் நோயுள்ளவனுக்கு நல்ல மருத்துவனின் உதவி தேவை.

மனிதன் தனது உடலையும் மனதையும் வளர்த்திட பிறரது உதவியும் பொருளும் வேண்டித்தான் இந்த உலக வாழ்க்கை அமைத்துள்ளது.

பணம் வேண்டியவனுக்கு பணத்தை பற்றிய விளக்கத்தை மட்டும் கொடுத்தால் போதாது, பணத்தையும் கொடுத்து அதனை பெருகும் வழியினையும் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

நோயாளிக்கு மருந்தினைப்பற்றி வர்ணிப்பதனால் பலன் எதுவும் இல்லை, மருந்தினை தரவேண்டும்.

கடவுளின் அருளைபெறல், சித்தி செய்யும் ஆற்றலை பெறல், பிரபஞ்ச ஆற்றலை தெரிந்து கொள்ளல், பயன்படுத்தல் என்பவற்றிற்கு சாதாரண உடல் மன அறிவு நிலைகள் போதுமானவை அல்ல. மனிதன் தனது ஐம்பொறிகளால் தொடர்பு கொள்ளும் உலகைப்பற்றிய அறிவை தானாகவே அறிந்து கொள்ளலாம், அதற்கான அமைப்பு பிறப்பிலேயே மனித உடல், மனத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. சூஷ்ம விஷயங்களை காண, அனுபவிக்க வேண்டுமானால் அதனை அனுபவிப்பதற்கான சூஷ்ம கருவிகள் மனிதனில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அவை செயலற்று இயக்கமற்று கிடக்கின்றன. இவைகளை செயற்படச் செய்தால்தான் மனிதன் சூஷ்ம ஞானத்தினை, அனுபவத்தினை பெறமுடியும். அவைகளை செயல் நிலைக்கு கொண்டுவர அவைகளில் புதுவகை சக்தியினை புகுந்த வேண்டும். ஆனால் அந்த சக்தி மனிதனின் சாதாரண உபயோகத்தில் இருக்கும் எந்த சக்தியும் இல்லை. மனிதனின் சாதாரண உபயோகத்தில் இருக்கும் சக்திகள் அனைத்தும் பௌதீக சக்திகள். இவற்றால் உபயோகம் இல்லை, சூஷ்ம கருவிகளை செயற்படுத்த சூக்ஷ்ம சக்திகள் தேவை, இந்த சக்தியை இருப்பவரிடமிருந்து ஓரளவு பெற்றுவிட்டால் பின்பு மனிதன் தனது முயற்சியால் மேலும் தேவையான அளவு அவனவன் பரிபக்குவத்திற்கு ஏற்ப வளர்த்துக்கொள்ள முடியும்.

இப்படியான சூக்ஷ்ம சக்திகள் இருப்பவரிடத்திலிருந்து இத்தகைய சூக்ஷ்ம சக்தியினை பெறும் முறையினைதான் தீட்சை – தீக்ஷை என்கிறோம். இதுவே இந்த வார்த்தைக்கான உண்மைப்பொருளும், பாரம்பரியமான பொருளும் ஆகும்.

இடைக்காலத்தில் தெய்வம், கடவுள், பிரபஞ்சம் முதலான விஷயங்களைத் தெரிந்துகொள்வதே மனிதனுக்கு போதுமானது என்ற எண்ணம் வலுப்பட்ட காலத்தில் ஒரு மந்திரத்தை, ஒரு உபாசனை முறையினை கற்பிப்பதே தீக்ஷை எனக் கொள்ளப்பட்டது. அதாவது உண்மையான சக்தி பரிமாற்றம் இல்லாமல் வெறும் வெளிச்சடங்கினை, மந்திரத்தினை உபதேசிப்பதை தீட்சை என கூறத்தொடங்கினர். இப்படி தவறான தீஷைகள் மலிந்ததால் உண்மை தீக்ஷைகளை தேடி அலைபவர்கள் குறைந்து விட்டனர். தெய்வ சாதனைகள் எல்லாம் வாய் அளவில், வெளிச்சடங்கு அளவில் நின்று விட்டன. சாதனை அளவிற்கு பிரச்சாரப்படுத்த படவில்லை.

பணம் வேண்டு நிற்பவனுக்கு உதவி தேவைதான் ஆனால் கிடைக்கும் பணத்தை வைத்துக்கொண்டு தானும் வளர்ந்து மற்றவர்களுக்கும் உதவக்கூடிய பண்பு உள்ளவனாக முன்னேறும் ஆற்றல், அறிவு உள்ளவனாக இருக்கவேண்டும். இல்லாவிடின் அவ்வாறானவனுக்கு உதவுவதால் யாருக்கும் பயன் இல்லை. அதுபோல் தெய்வ சாதனையில் முன்னேற வேண்டும் என்று ஆசை இருப்பவனுக்கு மட்டும் தீக்ஷை தரப்படுவதில்லை. தீக்ஷை மூலமாக தரப்படும் சிறு அளவு சக்தியினை வளர்த்து சாதனையில் முன்னேறக்கூடியவர்களுக்கே தீக்ஷை பயனுடைத்ததாக இருக்கும். இதனால் ஆசைப்படும் அனைவருக்கும் தீக்ஷை தரப்படுவதில்லை. பக்குவம் உடையவர்களுக்கு மட்டுமே தர்ப்படுகிறது.

தீக்ஷை என்பது சூஷ்ம சக்தியினை பெறுவது எனக்கண்டோம், அதனால் அதனை பெறுபவனுக்கு அதனை ஏற்றுக்கொள்ளும் பண்பு இருக்க வேண்டும் அல்லவா? இது இல்லாதவர்களுக்கு கொடுக்கப்படும் சூக்ஷ்ம சக்தி சிதறிப்போகும். அவர்களில் பற்றி நிற்காது.

தீக்ஷையினை பெறுவதற்கான பண்பு மனதினை எகாக்கிரப்படுத்தி, தானே நினைப்பதை விட்டு தன் மனதில் புகும் விஷயங்களை கிரகிக்கும் பண்புதான். இப்பண்பு பல வழிகளில் உண்டாகலாம். முறையான உண்மை பக்தி உள்ளவர்களுக்கு இந்த பண்பு இருக்கும். முறையறிந்து உபாசனாதிகளை செய்து வருபவர்களுக்கு அவ்வுபாசனை முறைகளில் இருக்கும் தியானம், மானச பிரார்த்தனை ஆகிய முறைகளால் இந்த பண்பு வளர்ந்திருக்கும் ஆதாலால் அவர்கள் இலகுவில் தீக்ஷை பெறும் தகுதியினை பெறுவார். முறையான யோக சாதனை பயில்பவர்களுக்கு ஏகாக்கிர (தாரணை) தியான பயிற்சியால் இந்த பண்பு வளர்ந்திருக்கும்.  

சாதாரணமான ஏகாக்ர நிலையினை அடைந்தால் மனதிற்கு வரும் கிரகிக்கும் பண்பினால் தீக்ஷையினால் அளிக்கப்படும் சக்தியினை கவர்ந்து மனம் பலப்பட “சுய தீக்ஷை” என்ற சடங்கு மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. இந்த சடங்கில் ஒளிநிலையில் உள்ளவர்களின் ஒளி உடலில் இருந்து சக்தியினை கவர்ந்து தமது மனம், பிராணன், அறிவு ஆகியவற்றை பலப்படுத்திக்கொள்ளும் பண்பினை பெறுகின்றனர். ஆனால் நியமம் தவறாமல் காயத்ரி ஜெபம், உபாசனைகள் முதலியவற்றை மேற்கொண்டு இருப்பவர் களுக்கு இவை தேவையில்லை. அவர்களது மனம் அதிலேயே பண்பட்டிருக்கும் ஆதலால் இலகுவில் கிரகிக்கும் ஆற்றலை பெறுவார்.

இப்படியான சக்தி பரிமாறும் வகைகளை கொண்டு தீக்ஷைகளை மந்திரம் மூலம் சக்தியை விழிப்படைய வைக்க மந்திர தீக்ஷை, பிராணனில் சக்தியை விழிப்படைய வைக்க பிராண தீக்ஷை, மனச்சக்தியினை விழிப்படைய வைக்க மானச தீக்ஷை, ஞான தீக்ஷை, ஆன்ம தீக்ஷை, பிரம்ம தீக்ஷை என பலவகைப்படும்.

தீக்ஷை என்பது சூக்ஷ்ம சக்தி பரிமாற்றம்!


பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...